திண்ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிக்கை

Current Issue: 20110529_Issue

Browsing Category

கவிதைகள்

கவிதைகள்

துடித்தலும் துவள்தலும்

ஷம்மி முத்துவேல் எழுத்துக்களால் இட்டு நிரப்பிட இயலாத இடைவெளியில் உன் பெயர் மட்டுமே கடவுச் சொல் ..... வெளித் தள்ளிய முத்தின் பேரெழிலை உணர்ந்திடாமல் கீறல்களில் முகம் பார்த்திடும் கிளிஞ்சல்கள்.... துடிப்பின் துள்ளல் தெரிந்தும்,…

கவிஞானி ரூமியின் கவிதைகள் (1207 -1273) என்னருகில் வராதே கவிதை -26 பாகம் -3

ஆங்கில மூலம் : கோல்மன் பார்க்ஸ் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா +++++++++++++++++++++++++ கணவன் மனைவிக்குள் தர்க்கம் +++++++++++++++++++++++++ மனைவி கூறிய பதில் : ++++++++++++++++++ என்னிடம் பேசாதீர் உன்னத நிலையைப் பற்றி…

M. ராஜா கவிதைகள்

M. ராஜாசனிக்கிழமை இரவுகள் -- மண் துகள்களோடு சிகரெட் சாம்பல் கசங்கிய துணிகள் தாறுமாறாய் சாமான்கள் பகலில் திருடன் நுழைந்திருப்பனோ? கதவு வழியாய் நுழைந்த காற்றில் ஈரப்பசையோடு தாவர வாசனை. கோடை மழை பெய்திருக்கக்கூடும்.…

கம்பீரமாய் நின்றுகொண்டிருந்தது நிழல்..

கலாசுரன் கடமையில் கட்டுண்டு கசங்கிக் கிடந்திருந்தது ஒரு காக்கிச் சட்டை பார்வையில் பட்டதும் சுற்றும் ஒளிந்திருந்த வரலாற்றுக்கனவுகள் சுற்றிச் சுற்றிப் பறந்தன சிப்பாயிகள் தோட்டா நிறைத்த துப்பாக்கிகளுடன் வரிசையாக அணிவகுக்க ஒரு யுத்தத்தின் ஆரவாரம்…

தேனம்மை லெக்ஷ்மணன் கவிதைகள்

தேனம்மை லெக்ஷ்மணன்கருவேலம் : ********************** ஈரப்பதம் உறுஞ்சி உள் துப்பும் இயந்திரங்கள்.. சமையற்கட்டிலும்.. சயனத்திட்டிலும்.. வரவேற்பறையிலும்.. வாகனத்திலும்.. வெந்நீர் வளையங்கள் பொங்கித்தரும் தொட்டில் ஜலக்ரீடை.. பாலிவினைல் புட்டிகளில் நன்னீரும்.. டப்பர்வேரில் நல்லுணவும்.. துகளானவை தொண்டைக்…

கவிதைப் பயிலரங்கின் தொடர் நடவடிக்கையாகப் படைக்கப்பட்ட கவிதைகள்

Dr மா.தியாகராசன் காற்று அடிப்பது “ஜில்”. அங்கே நின்று காற்று வாங்குவதும் “ஜில்”. ஆனால்… சூறாவளி என்றால் இல்லை “ஜில்”. கார்மேகங்கள் சூழ்வது “ஜில்”. மழை பெய்தால் “ஜில்”. வெள்ளம் வந்தால் இல்லை “ஜில்”.…

கைப் பிடியின் பிடிவாதம்

குமரி எஸ். நீலகண்டன் ஆறு வயதில் என்னுடன் தொங்கி விளையாடியத் தோழனாய் அந்தக்காலக் கதவின் தாழ் கைப்பிடி. அப்பா அம்மா தங்கையென எல்லோரின் சந்தோஷ சங்கடங்கள் கோப தாபமென மன அழுத்தங்களின் மின்சார பாய்ச்சல்களுக்கும்…

அம்மாவின் கேள்வி

செல்வராஜ் ஜெகதீசன் எப்படி சாத்தியம்? இத்தோடு எத்தனை? என்ன தேவையோ? இன்னபிற கேள்விகள் அறுபத்து நான்கு வயதுப் பெண் குழந்தை பெற்ற தகவல் வந்து சேர்ந்த பொழுதில். அம்மாவின் கேள்வியோ ஆனது சுகப் பிரசவமா…

ஆபத்து

செண்பக ஜெகதீசன் … சந்தனக்கட்டையில் எரித்தாலும் சவமதுதான் மணப்பதில்லை.. செத்தவன் வருவதில்லை இத்தரைக்கு, ஆனாலும் இருக்குது ஆபத்து அருகே உயிரோடு இருப்பவனால்… கவனம், காணாமல் போய்விடும் கட்டை- சந்தனக் கட்டை…!

சட்டென ஒரு மழையிரவு:

சபீர் இடி மின்னல் நடத்திய ஒளியும் ஒலியும் முடிவதற்குள் திரை இறங்கியது... மழை! கூறையில் நடத்திய தாளக் கச்சேரி முடிந்து மூட்டை முடிச்சுகளோடு ஊருக்குப் போனது... ஓடை! பள்ளம் நோக்கிப் பாய்ந்த வெள்ளத்தில் படிப்…