திண்ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிக்கை

Current Issue: 20110529_Issue

Browsing Category

கவிதைகள்

கவிதைகள்

பண்டிகையைப் போல் வரும் புளிக்காரன்

வீணாப்போனவன் வருஷத்துக்கு ஒரு முறை வருவான், பண்டிகையைப் போல், அந்த புளி விற்பவன். அசல் ஆந்திராக்காரன். சைக்கிளை வீட்டு காம்பவுண்டுக்குள் நிறுத்தி விட்டு தாத்தாவுடன் வியாபாரம் செய்வான், வேப்பமர நிழலில். அது ரொம்ப நேரம்…

நானும், தாத்தாவும் வேப்பமரமும்.

சேவியர். 0 மேற்குப் பக்க வேப்பமர நிழலில் தான் தாத்தாவின் மாலை நேர நாற்காலி, எனக்கோ, மின்விசிறிக் காற்று தலையைக் கலைக்க, தொலைக்காட்சி வெயிலில். வேப்ப மரக் குச்சி தான் தாத்தாவின் பல்லுக்கு, எனக்கோ…

நீ.. நான்… அவன்…

சேவியர் 0 நின்று தொலையாத துன்ப அலையிலும், ஆலயம் பற்றிக் கிடப்பவனே ஆத்திகன். நாளை செத்துப் போவேனென்று சேதி வந்தபின்னும் நாத்திகனாகவே இருப்பவன் தான் நாத்திகன். எந்த நிலை நாளையானாலும் இன்றின் பகுதியில் மனிதாபிமானக்…

கடல் பற்றிய நான்கு கவிதைகள்

பிரம்மராஜன் 1) கடலும் முன்று தளங்களும் உறைந்த எஃகாய் மேலே வானம் கவிய உருகிய தாமிரமாய்க் கிடக்கிறது பூமி இரண்டையும் கோர்த்துக் கொண்டு இதென்ன மரகதப் பச்சை வயல் போலவென பிரமித்து நிற்கிறேன் முகம்…

காவிரீ!

'ஜடாயு ' காகம் முனிவரின் கமண்டலம் கவிழ்க்க காட்டாற்று வெள்ளமாய் வந்தவள் நீ எனக் கதையுண்டு. காங்கிரஸ் அரசுகள் பல கவிழ்ந்தும் கழக அரசுகள் பல கழிந்தும் கழனிகளில் தமிழ் உழவர் முகங்கள் கவலையில்…

ஆதங்கம்..

ஆனந்தன் ஆங்கிலேயனுக்கு அடிமைப் பட்டு ஆண்டுகள் சில உருண்டன அடிமைத்தனத்தில்... காகங்களும், கிளிகளும் கூட கிளைகளில் கூடுகட்ட கடினப்பட்ட நாட்களது. உயிரைக் கூட உன்னதமாக எண்ணாது உழைத்து வாங்கித் தந்த உன்னத சுதந்திரம் இது.…

எதிர்பார்ப்பு

புஷ்பா கிறிஸ்ரி காற்றடிக்கிறது,, மழையும் கொட்டுகிறது என் கண்களில் கண்ணீர் வரவிருக்கும் பனிநாட்களை எண்ணும் போது உதிரும் இலைகள் போல் என் கண்களின் நீர் உதிர்கின்றது.. எத்தனை நாட்கள் ? ஓட்டமாய் ஓடி, குளிரில்…

விழி, மொழி, பழி

அனந்த் அல்லிஉன்றன் விழியலவோ என்றேன் அழகியவள் அகலப்பின்னால் சென்றேன் .... அல்லியென்றால் பகலிலென்கண் .... அலர்வதும்ஏன் புகலுமென்றாள் சொல்லிழந்து தலைகுனிந்து நின்றேன்! ***** பாகுமொழி என்றுரைப கர்ந்தேன் பாவையவள் நோகப்பின்தொ டர்ந்தேன் .... பாகதுதான்…

மனிதமறை

பசுபதி வையம் எங்கும் வன்முறையே --நம் . . வாழ்வைக் கருக்கும் பெருங்கறையே ! செய்தி எல்லாம் வன்செயலே ! -- சின்னத் . . திரையும் ரத்தம் மிகுவயலே ! (1) காந்தி…

யதார்த்தம்…

அறிவழகன் வானத்தில் பறப்பதாய் கனவு கண்டாலும் என் கால்கள் மண்ணிலிருப்பதை மறக்கவில்லை! *** aazhagan2002@yahoo.com