சாமிசுரேஸ், சுவிஸ் அந்த நிழலில்லாத இரவுக்கரையோரம் மெல்லிய காற்றுமொழியின் பக்கவிளைவுப் படிமங்கள் சுகம் கீறும் நானும் நீயும் காத்திருப்புகளின் கதைகளில் நனைய ஈரமில்லாத சில முன்னெடுப்புகள் செத்துமடியும் தலைசிலுப்பிப் போன ஏதோ ஒன்றின் அகச்…
பவளமணி பிரகாசம் வேண்டும் என்ற வேட்கை இருந்தால் பாலுக்குள் ஒளிந்திருக்கும் நெய்யை பத்திரமாய் வெளிக்கொணரலாம் பாலை பதமாய் காய்ச்சி ஆற விட்டு ஏடெடுத்து உரை விட்டு புளித்த பின்னே மத்தெடுத்து கடைகையில் திரளுமே மெத்தென்ற…
புகாரி தமிழை மறப்பதோ தமிழா - உன் தரமின்று தாழ்வதோ தமிழா O கற்கும் மொழிகள் கணக்கற்றவையாயினும் கைகூப்பித் தொழுவது தமிழன்றி வேறோ தமிழச்சியிடம் தாய்ப்பால் பருகிப் பருகி நிமிர்ந்த உன் முதுகெலும்பை தாய்மொழிக்கன்றி…
தமிழவன் எழுகிறது கவிதை நாட்டம் இன்றும். பின்பக்கம் கண்ணாடியில் ஏற முயலும் சிறுகுருவியின் கால்பிராண்டல் திரும்பிப் பார்க்காத என்மனதில். இப்போது தெரிகிறது காலம் மாறியது. பூக்கள் மலர்ந்திருப்பதும் இலைகளில் தளிர்வந்து போய்விட்டதும் வெயில் சுள்ளென்றெரிப்பதும்.…
ரவிகுமார் 1. ஏதோ இரசாயன பூச்சாம் முன்பு போல் அருகில் செல்ல முடியவில்லை.. எட்டாத உயரத்தில் நிலவு வெளிச்சம்.. நிற்காமல் நகர்ந்து செல்லும் வாகன வெளிச்சங்கள்.. ஒரிரவு வாழ்க்கைதனே வாழ்ந்துவிட்டு போகட்டும் என்று எண்ணாமல்…
நாகூர் ரூமி ==== வெகுகாலமாயிற்று விளங்கிக்கொள்ள நம்முடையது போலல்ல இறைவனின் காதுகள் என. கூட்டுப்பிரார்த்தனையில் ஒரு நாள் கதறிக்கதறிக் கையேந்தினார் ஒருவர் அழுதழுது கேட்டார் ஒருவர் கேட்டதா என்றேன் வந்து சேரவேயில்லை என்றான் சிரித்துக்கொண்டே.…
சாந்தி மனோகரன் அம்மா பால்...!!! பழக்கத்தை மாற்றிக்கொள்ளத் தெரியாத பால்க்காரன்... பெண்வாசனை இல்லாத வீட்டில் எந்த அம்மாவை அழைப்பானோ தெரியவில்லை...! சூரியனோ...சேவலோ அல்ல-இந்த பால்க்காரனும்...பேப்பர்-காரனும் தான் எங்களின் விடியற்காரர்கள்...!! பள்ளிக்கூடம் போகும் தம்பி பணியிலிருந்து…
வேதா மஹாலஷ்மி எழுதும் என்கவிதைகளை கிழித்தெறிகிறேன் உன்பிரியத்தை எனக்கல்ல, என்கவிதைக்கே கொடுத்தாயென்ற பொறாமையால்.... பொழியும் இசை அமுதை குரல்வளையோடு நெறிக்கிறேன் உன் ரசனையை உணர்வுக்கல்ல, வெறும் என் குரலுக்கே கொடுத்தாயென்ற அவநம்பிக்கையால்... திமிறும் என்…
ஐீவன் 1. எப்போதாகிலும் உன் நினைவுகளில் வந்து போகலாம் நான் எப்பவுமே என்னோடு இருக்கிறாய் நேசத்துக்குரியவளாக நீ கிழித்து கூறுபோட்டு போனது நீ சொன்னதான வார்த்தை உன்னோடு தொலைந்து போயிற்று உனக்கும் எனக்குமெயான என்…
ந.வீ.விசயபாரதி(சிங்கப்பூர்) 0 பொம்மையைக் கண்டாலே பொக்கைவாய் பூப்பூக்கும் உயிர்ச்செடி. 0 இதழுடுக்கின் ஈறுகளால் மனம் மயக்கும் மானுட மலர். 0 மறக்கப்போகும் சிரிப்பையெல்லாம் அரக்கப் பறக்கச் சுரக்கும் அரும்பு. 0 தங்கக்கொலுசொலிக்கும் தகரக் கிலுகிலுப்பைக்கும்…