திண்ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிக்கை

Current Issue: 20110529_Issue

Browsing Category

கவிதைகள்

கவிதைகள்

நறுக்குகள்

கி. சீராளன் (1) சாலையில் நாலும் நாலும் எட்டு பேருடன் சவ ஊர்வலம் சைக்கிள் என்பதால் கடந்து முந்தினேன். என்னைையும் கடந்து இன்னொரு வேக வாகனம் முந்திப் போனது. எங்கே போனோம் ? யார்…

அன்புடன் இதயம் – 23 – சித்திரைத் தமிழ்ப் புத்தாண்டு

புகாரி . சித்திரையே எழில் முத்திரையே சொல்லிவிடு உன் சூட்சுமத்தை எத்தனையோ தமிழ் மாதங்களும் இன்னமுதத் தேன் அளந்தாலும் முத்தொளிரும் தமிழ்ப் புத்தாண்டில் முரசொலித்தே உன் முகமெடுத்து முத்தமிழர் ஏன் முன்வைத்தார் மொழிவாயே என்…

கவிக்கட்டு 13 -திறந்து விடு

சத்தி சக்திதாசன் இதயத்தைக் கொஞ்சம் திறந்து விடு இருட்டழிந்து ஓளி வரட்டும் அன்பு எனும் அந்த அகல் விளக்கை சிறிதாய்த் தன்னும் ஏற்றி வை மின்சாரம் மறைந்து போனால் விளக்குத்தானே வெளிச்சம் தரும். எங்கே…

சுமை

பிச்சினிக்காடு இளங்கோ(சிங்கப்பூர்) வழக்கமாய் ஆறு மணிக்கு விழித்து அனைத்தும் முடித்து அதே பேருந்து 61-ல் அலுவலகம்... அதே அலுவலகம் அதே நண்பர்கள் அதே வேலை அடிக்கடி தொலைபேசி அதே வருமானம்.... அன்றைக்கு மட்டும் ஏன்…

வேண்டுதல்!!

ஈழநாதன் காலை வெய்யில் கண்கூசும் ஒளிபட, ஆல மரத்தடியில் அமர்ந்திருக்கும் பிள்ளையார்! வாசலுக்கு வடக்கே வளர்ந்திருக்கும் பூவரசு நிழல் தந்த மறைவில் நிற்கும் ஓர் சிறுவன். அடிமரத்துடன் ஒட்டிய அரைவயிறு ஒட்டியபடி பசிமயக்க நிலையில்…

ஏழாவது சுவை

நாகூர் ரூமி ==== அபாரமான சுவை அருமையான வாசனை பாட்டில் ஐம்பது அல்லது நாற்பது டாலர் ஊறுகாய் மாதிரி கடைகளில் விற்பனைக்கு. தட்டில் வைத்து வாஷ்பேசினில் கழுவும்போது சற்றே தெரிகிறது சந்தேகத்தின் தலை. வெட்டி…

இசை ஒவியம்

பட்டுக்கோட்டை தமிழ்மதி வனாந்திரத்தில் வார்த்தையில்லா சத்தம். ஓடும் நீரின் சலசலப்போடு ஓரொலி. உதிரும் சருகின் ஓட்டத்தோடு ஓரிசை. சிறகசை வெளிகளில் சிந்தும் சிந்து. குயிலின் திசையில் கூடும் ஒரு குரல். பாட்டுக்கு எதிர்ப்பாட்டு. உள்ளத்தைத்…

கவிதையாதெனில்….

பாஷா உன்னிடமிருந்து ப்ரதி எடுக்கப்படுவதே என் கவிதை எண்ணிக்கையிலடங்கும் கவிதைகளைமட்டும் எனக்கு கொடுத்துவிட்டு ஏராளமான எழுதப்படாத கவிதைகளை உனது சிரிப்பாய், சிணுங்களாய் கோபமாய்,கொஞ்சலாய் அக்கரையாய்,அழுகையாய் 'வெண்ணெய்.... 'என்றேயெனை அழைக்கும் அழகாய் உனக்குள் ஒளித்து வைத்துள்ளாய்!…

கவிதைகள்

பாஷா கல்லறை பாடல் உனக்காக என் உணர்வுக் கருவறையில் உற்பத்தியாகும் வார்த்தைகளுக்கு ஒரே முகம்தான். வார்த்தைகளை கோர்த்து வாக்கியம் உருவாக்கும் உணர்வுகளை உனக்குள் தேடிக்கொள் தேவையெனில் உன்னால் ஜனித்த நாளன்று எனக்குள் உதித்த உன்…

கோபம்

நெப்போலியன் யாராகிலும் யார்மீதேனும் யாருடைய கோபத்தையோ கொட்டிக் கொண்டுதானிருக்கிறார்கள்.... இந்த மழையைப்போல! இதில் எனக்கான உன் கோபமும் உனக்கான என் கோபமும் யாருக்கான யாருடைய கோபம்.... உச்சி வெயிலைப்போல! யாரும் யாரிடத்திலேனும் யாருக்காகவோ யாராயிருந்தோ…