திண்ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிக்கை

Current Issue: 20110529_Issue

Browsing Category

கவிதைகள்

கவிதைகள்

அழியாத குற்றங்கள்

வந்தியத்தேவன் காலிக் கூண்டில் அடை மறக்காத கோழி கிர் கிர் என்று வாலுயர்த்தும் வயிறா வலிக்கும் ஆம்லெட்டின் அஜீரணத்தால் ? துளித் துளியாய் குடும்பத்திற்கு சேர்த்ததை தீப் 'பந்தம் ஒன்றில் பறிகொடுத்து கொட்டாமல் இறக்கும்…

கீதாஞ்சலி (1) (உடையும் பாண்டம்) மூலம் : கவியோகி இரவீந்திரநாத் தாகூர்

தமிழாக்கம்: சி. ஜெயபாரதன், கனடா. அந்திமக் காலமே இன்றி என்னை அமைத்துள்ளாய் நீ! உவகை அளிப்ப தல்லவா அது உனக்கு ? உடையும் இப்பாண்டத்தை மீண்டும், மீண்டும் வெறுமை ஆக்குவாய் நீ! புத்துயிர் அளித்து,…

சாலை

ஜெயந்த் சீராளன் காலை அவசரத்தில் உதைத்துக் கிளப்பும் வண்டி திருப்பி உதைக்கும். சாலையேறியதும் நெரிசல் தொடக்கம். எல்லோருக்கும் எல்லாவற்றிற்கும் ஒரே சாலை. எருமைகளும் எருமை மாடுகளும் கடக்கக் காத்திருந்து பச்சை விளக்கை பார்க்க தவமிருந்து,…

கவிதை

கோமதி நடராஜன் எல்லோருக்கும் நல்லவனாக இரு என்று எல்லோரும் சொல்கிறார்கள். இருந்துதான் பார்ப்போமே. விழுந்தவனைத் தூக்கி நிறுத்தித் தூணாகத் துணை நின்றேன். அவனைத்,தள்ளிவிட்டவனுக்கு நான் தப்பானவனானேன். அடிபட்டவனை அரவணைத்து ஆறுதல் கூறி ஆற்றினேன். அவனை,அடித்தவனுக்கு…

கவிக்கட்டு 32-வாழ்க்கை வியாபாரம்

சத்தி சக்திதாசன் அன்பை அடகு வைத்ததினால் அறிவை வட்டியாய்ச் செலுத்தி அழுந்தியது இங்கே அறியாமை எனும் இருளிலே ஆசையெனும் தொட்டிலில் ஆடி என்றும் அடங்காது ஆவல் எனும் கள்வன் மனதை ஆக்கிரமித்துக் கொண்டான் இருப்பதை…

பெரிய பாடம்

பவளமணி பிரகாசம் வளைத்து வளைத்துப் பார்த்து இழுத்து இழுத்து சோதித்து தோதாக ஒரு கிளை தேர்வாகி ஓடி ஓடி ஒன்றிரண்டு நாளிலே கட்டி முடிந்தது ஒரு கூடு இட்ட முட்டைகள் மேலமர்ந்து அடை காத்ததோர்…

கவிக்கட்டு 31-சத்தமில்லாத சமுதாயச் சரிவு

சத்தி சக்திதாசன் சத்தமில்லாமலே இங்கேயொரு சமுதாயம் தனது சரணங்களை இழந்து சரிந்து கொண்டு போகிறதோ ? கட்டாயத்தின் நிமித்தம் கலாச்சாரமெனும் பெயரால் கலையுணர்வு இல்லாமல் கலைக்கல்வி கற்றுக்கொண்டு கரைந்து கொண்டே போகிறதோ கனிவான ஒரு…

தவிக்கிறேன்

பாஷா நின்றுபோன என் நிமிடங்களில் நீ சென்ற திசை பார்த்து சொல்லாமல் போன என் காதலை சொல்லத் தவிக்கிறேன்! என்சிந்தனை செல்களில் உன்சொற்கள் செதுக்கிய என்சுயம்பு தன்மையை உன்னிடம் சொல்லிவிடத் தவிக்கிறேன்! பூங்காவில் அமர்ந்த…

‘விண் ‘ தொலைக்காட்சி கவிதை – (1)

நா முத்து நிலவன் ஜனகணமன ஜனகணமன: எதிரிகளை வணங்கி கிருஷ்ணனை குறிபார்க்கும் அர்ச்சுனர்கள். துச்சாதனன் பதற பாஞ்சாலியை உரிக்கும் பாண்டவர்கள் இமயமுடிவரை வளர்ந்தும் இந்துமாக்கடலில் கிடக்கும் பொருளாதாரம். தண்ணீர் கிடைக்காது, தண்ணீர் பாட்டில் கிடைக்கும்…

என் நிழல்

புதியமாதவி என் நிழல் என் சாயலில்லாத என் நிழல். என் நிழல் எனக்குச் சொந்தமில்லாத என் நிழல். கிழக்கே விழவா மேற்கே விழவா காலடியில் விழவா கதவோரம் விழவா என்னைக் கேட்க்காமலேயே என் நிழல்…