திண்ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிக்கை

Current Issue: 20110529_Issue

Browsing Category

கவிதைகள்

கவிதைகள்

நத்தை!

அகரம்.அமுதா தொழிலிலை எனினும் சுமைதூக்கி! தொடர்ந்து நகரும் சுமைதாங்கி! வழித்தடம் அமைக்கும் ஊர்ந்தபடி -அவ் வழிவழி போகா துள்ளபடி! ஒட்டகத் திமில்போல் ஒன்றுண்டு! உள்ளதன் படுக்கை அறையுண்டு! கொற்றவன் இல்லை என்றாலும் கோல எழில்மணி…

ஆகஸ்டு 9

ரஜித் தரையிறங்குகிறோம் உன் பிறந்தநாளில் ஒதுக்கிவை ஒன்பது இருக்கைகள் கேட்டுக்கொண்டன நவக்கிரகங்கள் வாழ்நாள் முழுதும் வளரமட்டும் ஆசை வழியொன்று சொல்லேன் விழியுயர்த்திக் கேட்டது நிலவு தூரிகை உதறினாய் உதித்தேன் நான் வளைந்து சொன்னது வானவில்…

தமிழர்கள் நாங்கள்! கவிதை சித்திரம

தாஜ (சில வருடங்களுக்கு முன் (1997) நான் மலேசியா போய் இருந்த போது..... பொழுது போகாத ஓர் பகலில் எழுதிய கவிதை சித்திரம் இது. இன்றைக்கு பழைய எழுத்துகளைப் கலைந்தபோது, சிக்கிய இந்தப் பக்கத்தை…

ஜிகாதின் சொற்கள்

ஹெச்.ஜி.ரசூல் கறுப்புவடுவோடு கண்டுணர்ந்த பரிபூரணத்தின் பேரழகு உருண்டு திரண்டு வளர்ந்தும் கீற்றாய் சிறுகோடாய் தேய்ந்தும் காலம் பற்றிய அறிக்கையை வெளியிடும் பிறையின் கையெழுத்தை அதிசயித்துப் பார்க்கும் கண்கள். ஹவுளில் நிரம்பிய கண்ணீரில் ஒளுவெடுத்து புனிதப்படும்…

பறவை

புதியமாதவிசுமைகளின் பாரம் தாங்காமல் மரக்கிளையில் அமர்ந்து ஆகாசத்தின் எல்லைகளை ஏக்கத்துடன் பார்க்கிறது நேற்றுவரைப் பறந்து திரிந்த அந்தப் பறவை. காதல் முத்தங்களின் கண்மூடிய தருணங்கள் மீண்டும் மீண்டும் பற்றி எரிய கொஞ்சம் கொஞ்சமாய் சிறகுகள்…

காற்றினிலே வரும் கீதங்கள் – 30 பூவிதழில் சிக்கிய தேனீ !

தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடாதூண்டிற் புழுவினைப் போல் - வெளியே சுடர் விளக்கினைப் போல் நீண்ட பொழுதாக - எனது நெஞ்சம் துடித்ததடீ ! கூண்டுக் கிளியினைப் போல் - தனிமை கொண்டு…

அறிஞர் அ.ந.கந்தசாமியின் மேலும் 11 கவிதைகள்!

அ.ந.கந்தசாமியின் [ஈழத்துத தமிழ் இலக்கியத்தில் கவிதை, சிறுகதை, நாவல், கட்டுரை, மொழிபெயர்ப்பு, நாடகம், விமர்சனமெனப் பெரும் பங்களிப்பு செய்தவர் அறிஞர் அ.ந.கந்தசாமி. முற்போக்கிலக்கியத்தின் முன்னோடிகளில் முதன்மையானவராகக் கருதப்படும் அறிஞர் அ.ந.க. கவீந்திரன் என்னும் புனைபெயரிலும்,…

ஆவியை விட்டு விட்ட‌ ஆ.வி.

ருத்ரா(அன்பு ந‌ண்ப‌ர் திரு மு.குருமூர்த்தி அவ‌ர்க‌ள் எழுதிய‌ வ‌ரிக‌ளுக்கு எழுத‌ப்ப‌ட்ட‌ ப‌த‌வுரை..பொழிப்புரை இது) ஆ.வி த‌ன் ஆவியைவிட்டு ப‌ல்லாண்டுக‌ள் ஆகிப்போன‌து. எழுத்துக‌ளில் முத்திரை ப‌தித்த‌ காலம் போய் ஆர்ட் பேப்ப‌ரில் ஊசிப்போன‌ கொத்த‌வால் சாவ‌டியை…

குழந்தையின் துயரம்

ரசிகவ்"இன்றைய குண்டுவெடிப்பு சேதம் குறைவுதான் ஒரே ஒரு பெண் மட்டும் இறந்தாள்" அலட்சியமாய் சொல்லும் அரசாங்கத்திற்குத் தெரியுமா? பிணத்தின் முன் கதறிக்கொண்டிருக்கும் குழந்தையின் துயரம் - ரசிகவ்

திருமணம்

கவிதா நோர்வேதிருமணம் இரு கோல்கள் சங்கமிக்கும் வழிமண்டலம் இரு துருவங்கள் இணையும் மையப்புள்ளி வேற்றுகிரகத்து மனிதர்களாய் முதல் சந்திப்பின் ஆய்வுகள் இனிப்பதில் அவசர இணைப்பு நடைபெறுகிறது தன் உடமை காத்தல் வாரிசு உறுதிப்படுத்தல் கற்பென்ற…