This entry is in the series 20040408_Issue

பா.சத்தியமோகன்


எங்கோ பொழியும் மழைக்கு
குளத்தில் விழுந்த இலைபோல
தனக்குத்தானே குளிர்கின்ற காற்றே
ஆனந்தமானது உனது சிறகு வீச்சு
ஈரம் காட்ட வாழ்த்துகின்றாய்
உடலின் மீதும் உடையின் மீதும்
உன் மகிழ்ச்சியினால்
தன்னைத் தரை மீது கொட்டிவிட்ட
வேப்பம்பூக்கள் பற்றி
உனக்கேதும் மகிழ்ச்சியுண்டோ அதுவும் கூறு .
தரையில் அவை புரளும்போது மர இலைகளில்
சிறுசிறு பச்சை தீபங்கள் தோன்றுகின்றன.

****cdl_lavi@sancharnet.in

Series Navigation