This entry is in the series 20040408_Issue

சேவியர்


0

சாப்பிடலேன்னா
பூதம் வந்து கண்ணைக் கொத்திடும்
என்று
வீட்டோர பாறையிலமர்ந்து
பயம் காட்டினார் அப்பா.

ஒழுங்கா சாப்பிடு
இல்லேன்னா
அந்த பாறைல இருக்கிற
சாமி
கண்ணைக் கொத்திடும்
என்றேன் நான்.

சாப்பிடுப்பா
இல்லேன்னா
அதோ இருக்குல்ல
கண்கொத்திச் சாமி
அது கண்ணைக் கொத்திடும்
என்று
பாறையைக் காட்டுகிறான்
என் பிள்ளை.

நாளை
கண்கொத்திச் சாமி கோயில்
பிரபலமாகலாம்
ஆயிரக்கணக்கான பக்தர்களின்
வரிசையோடு.

0

சேவியர்

Series Navigation