வெயில் நிலவு!

This entry is part [part not set] of 42 in the series 20110327_Issue

ரசிகன்புணர்ந்து கிழித்த அசதியில்
தாமதமான விடியலை
வஞ்சத்தில்
மல்லாக்கப்போட்டு திணிக்கிறது
ஒரு வரையறை இல்லா வித்தை!

மெய் சிலிர்க்க தீண்டிய
பட்டாம்பூச்சி ஒன்று
கம்பிளிப்பூச்சியாய் ஊர்ந்து
அரிப்பெடுக்க…

இரவுகளை நிராகரித்து
வெயிலில் நிற்கிறது
வாழ்வு சபிக்கப்பட்ட
ஐநூறு ரூபாய் நிலவொன்று!

-ரசிகன்

Series Navigation

ரசிகன்

ரசிகன்