விடியும்! நாவல் – (7)

This entry is part [part not set] of 42 in the series 20030802_Issue

திருகோணமலை க. அருள்சுப்பிரமணியம்


7

டை கட்டியிருந்த செல்வத்திற்குப் பக்கத்தில் டை கட்டாத ஒரு வெளடிளைக்காரர். ஏணி கழற்ற சற்று முன்னர் ஏறி வந்தவர். சுவரொட்டி தேடி அலைந்த கட்டாக்காலி மாடு மாதிரி மனம் எங்கெல்லாமோ மேய்ந்து திரிந்ததால் பக்கத்தில் வந்து இருந்தவரை சரியாகக் கவனிக்கவில்லை. உயர்ந்த ரக வெளடிளை ரீசேட் போட்டிருந்தார். ரீசேட் அணிவது வசதியாக இருக்கிறது. எளிமையானதாகவும் தெரிகிறது. விமானப்பயணத்திற்கு புள் சூட் அணிந்து வரும் பழக்கம் மேலை நாடுகளில் குறைந்து வருவது செல்வத்திற்கும் தெரியும். ஆயினும் அவன் டை கட்டிக் கொண்டு மிடுக்காக வந்திருக்கிறான். காரணம் அடிமனத்திலிருந்த பயம். கொழும்பு விமான நிலையத்தில் கண்ணியமாக நடத்தப்பட்டு பாதுகாப்பாக வீடு போய்ச் சேருகிற ஏக்கம். ஆடைபாதி கொடுக்கிற செயற்கை ஆளுமையில் ‘தமிழன்’ அடையாளம் அவர்களுக்கு கண்ணில் குத்தாமல் நழுவிச் செல்லும் நோக்கத்தோடு வந்திருக்கிறான். பாஸ்போட்டில் உள்ள பெயர் காட்டிக் கொடுத்துவிடுமாயினும் உடுப்புக்கு மரியாதை கொடுத்துத்தானே ஆகவேண்டும்.

“பாஸ்டன் யுவர் சீற் பெல்ட்ஸ். நோ ஸ்மோக்கிங் பிளீஸ்”.. .. .. .. என்ற அறிவித்தலோடு விமானம் காதுக்குள் தேனியாக இரையத் தொடங்கிற்று. அவன் இருந்த அதே வரிசை வலது பக்க ஜன்னலோர இருக்கையில் ஒரு வெளடிளைக்காரப் பெண்ணும் ஐந்தாறு வயதுள்ள மகனும் இருந்தார்கள். படம் பார்க்க ஒவ்வொரு பட்டனாக டாவியில் அழுத்திக் கொண்டிருந்தான் பையன். தனக்கு முன்னாலும் இருக்கையின் முதுகில் சிறிய டாவியிருக்கும் பிரக்ஞை அவனுக்கு இப்போதுதான் தட்டியது.

ஆவியில் அவித்து கிருமி அகற்றப்பட்ட ஈர வாசத்துணியை பணிப்பெண் நீட்டினாள். அவன் வாங்கி முகம் துடைத்தான். பக்கத்தில் மூச்சுப்படுகிற நெருக்கத்தில் ஒருவர் வந்து விட்டதால் முகச் சோர்வை துடைத்து விடுவது போல் அழுத்தி அழுத்தித் துடைத்தான். மனதையும் இப்படி துடைக்க முடிந்தால் எவ்வளவு நல்லாயிருக்கும்!

பெருத்த உடம்புடன் வயதான பெண் ஒருத்தி அசைந்து அசைந்து போகும் சாயலில் அந்த விமானம் ஸ்லோமோசனில் ஓடுபாதையை ஒரு சுற்றுச் சுற்றி வந்து நேர்பாதையில் ஓடி வேகமாகி டக்கென்று உயரக் கிளம்பிற்று.

கடவுளே எல்லாம் உன் செயல். உன்னை நம்பித்தான் போகிறேன்.

ஒரு பாரிய பிரச்னைப் பயணத்தின் ஆரம்பம் அது என உள்ளுணர்வு சொல்லிற்று. எப்படி மூளையைப் போட்டுக் குழப்பினாலும் இந்தப் பிரச்னையைத் துணிவுடன் கையாள தன்னால் முடியாதென்றே அவனுக்குத் தோன்றியது. கண்ணைக் கட்டிவிட்டு உயரத்திலுள்ள பானையை தொங்கி உடைக்கச் சொன்ன கதை. சுற்றிலும் இருட்டு. ஒன்றும் புரியவில்லை. இதுவரை அவனது வாழ்க்கையில் வீரதீரச்செயல்களுக்கு இடமில்லை. ஜேம்ஸ் பொண்ட் சாகசம், எம்ஜீஆர் பராக்கிரமம் எல்லாம் படங்களில் பார்த்து மயிர்க்கூச்செறிந்ததோடு சரி. ஊரில் சந்திக்கு சந்தி அறிமுகஅட்டை பரிசோதனைக்கு பொலிஸ் நின்றாலே, ஏதோ தன்னைப் பிடிப்பதற்காகவே அது நடப்பது போல் வியர்த்துப் போவான். அப்படியொரு பெட்டைக்கோழிக் குணம். வழிவழியாக குடும்பப் பாரம்பரியமாக வந்து சேர்ந்துவிட்ட பயக்கெடுதி. பின் எதை நம்பி இந்தப் பயணம்!

கனடாவுக்கு வந்த புதிதில் ஊரை நினைத்த மாத்திரத்தில் ஆசை வெளடிளம் திரண்டு கரை புரண்டு ஓடும். சொந்த மண்ணையும் சொந்தங்களையும் பார்த்து வர மனம் கிடந்து துடிக்கும். ஊடகங்கள் வழியாக எட்டுகிற பயங்கரச் செய்திகள் அந்த வெளடிளத்தை அடித்துக் கொண்டு போகும். போவதை நினைத்தாலே ஒன்றுக்கு முடுக்கிக் கொண்டு வரும்.

ஆறுதலுக்கு இடமில்லாத அந்தப் ப+மியில் எனக்கு என்ன வேலை இனி!

வெளpநாட்டிலிருந்து வந்து போகும் தமிழர்கள் சந்தேகக் கண்ணாடியால் பார்க்கப்படுகிறார்கள். அதிலும் கனடாவிலிருந்து வருகிறவர்களுக்கு அங்கு செங்கம்பள வரவேற்பாம். சண்டைக்கு நிறைய மூனதனம் செய்கிறார்களாம். போய் வந்தவர்களின் காது மூக்கு வைத்த தகவல்கள் வேறு அவனை திக்குமுக்காடச் செய்தன. பிறகு எப்படிப் போவான் ? இரண்டு தங்கச்சிமாரின் கல்யாணத்திற்குக் கூட அவன் போகவில்லை. வீடியோ கசட் காட்டிய வைபவங்களோடு அவன் திருப்தியடைந்தான். அவனுக்காகவே, அவன் வந்து விடக்கூடாதென்பதற்காகவே, சின்னம்மா எடுத்து அனுப்பிய அந்தப் படச் சுருள்களில் கவனத்தைக் கவரும் காட்சிகள் நிறைய இருந்தன. இடைசுகம் போட்டுப் பார்ப்பான்.

காலடியில் சரசரத்து அசையும் கூறைச் சேலைகள், பளிச்சிடும் சந்தணப்பொட்டு முகங்கள், பன்னீர் தெளpக்கும் சால்வைக் கட்டுகள், கைக்குக் கை மாறும் பலகாரத் தட்டுகள், நாலாஞ்சடங்கு மஞ்சள் தண்ணி வார்ப்புகள்.. .. .. .. பார்க்கப் பார்க்க அவனுக்குத் திகட்டாது. தானே தானாய் அங்கு பிரசன்னமாயிருந்து கல்யாணச் சோலியில் அலைவது போலிருக்கும்.

தாலி கட்டும் முகூர்த்தத்தில் அருகிருந்து அருகரிசி போட்டு ஆசீர்வதிப்பான். வேட்டியை மடித்துக் கட்டிக் கொண்டு செம்புந் தண்ணீரும் பருப்புச் சட்டியுமாய் பந்தி பரிமாறுவான். இலையை அப்படியே விட்டுட்டு எழும்புங்கோ என்று பெரியவர்களுக்கு சொல்லி மரியாதை செய்வான். அயல் அட்டைச் சனங்களை தானே வாசல் வரை வந்து பன்னீர் தெளpத்துப் பல்லிளிப்பான்.

எல்லாமே ஒருவித மனசுகந்தான். இப்படியெல்லாம் எண்ணியெண்ணி எண்ணம் மாளாது உயிரை விட அந்தக் குட்டி ஊரில் அப்படி என்னதான் இருக்கிறது!

திருகோணமலை – குரை கடல் ஓதம் நித்திலம் கொழிக்கும் கோணமாமலை. நிரை கடல் அரவம் சிலம்பொழி அலம்பும் பாடல் பெற்ற ஸ்தலம். ஊனோடும் உயிரோடும் கலந்து போன மண். சும்மாவாகிலும் பழசுகளை மீட்டிப் பார்ப்பதில் அளவில்லாத ஒரு ஆத்மதிருப்தி. பள்ளியில் படித்த காலம் முதன்மை ஒழுங்கில் சடைத்து நிற்கும். பொடியன்களோடு ஊர் சுற்றியது கண்ணில் விரியும்.

சா.. .. .. .. .. போனால் எவ்வளவு சோக்காயிருக்கும்!

விடிய விடிய நித்திரை முழித்து சுற்றுகிற கோணேசர் ஊர்வலத்தில் பிரசாதம் தின்று வயிறு முட்டிப் போகும். ஆயுத ப+சைக்கு அடுத்து வரும் விஜயதசமி நாளை நினைக்க நினைக்க நித்திரை வராது. கும்பத்துமால் கும்பங்களோடு கூட்டமாகக் கிளம்பினால் வாசலுக்கு வாசல் நிறைகுடம் பார்க்கும் சாட்டில் பாவாடைப் பெட்டைகளை ரசிப்பார்கள். கண்களால் காதல் பேசுவார்கள். நாலு பேராகச் சைக்களில் தெருவை சமாந்திரமாக அடைத்துக் கொண்டு இந்தப் பக்கமாக மடத்தடிச்டிசந்தி, அந்தப் பக்கம் டொக்யாட் வாசல், நடுவில் காளி கோயில், இடையில் முத்துக்குமாரசுவாமி கோயில், ஹாபறடி எல்லாத்தையும் ஒரே சுற்றில் அளந்து வந்தாலும் பொச்சம் தீராது.

பங்குனி சித்திரையில் கொஞ்சம் வெக்கைதான். வேர்க்குருவில் அவதிப்படும் போது கெந்தகப் ப+மியென்று அப்பா சொல்வார். ஆனால் பிறந்த மண்ணின் வெக்கை அவனுக்குப் பிடித்தமான வெக்கை. அந்த வெக்கைக் காலத்தில் பொடியளோடு கடல் குளிக்கப் போனால் நேரம் போவதே தெரியாது. மலையடிக்கு நீந்திப் போய் அங்கிருந்து ஆழத்தில் பாய்ந்து சுழியோடிக் கரை சேர்ந்து சுடுகிற வெண்மணலில் படுத்திருப்பதுதான் சொர்க்கமோ! அந்த மாய்ச்சலோடு வந்து மத்தியானம் சாப்பிட்டு விட்டு படுத்து பின்னேரம் கழுத்தடி வியர்க்க எழுந்து முற்றத்தில் நின்றால் நாலு பக்கமும் கடல் காற்று வந்து அணைக்கும் சுகம் இருக்கிறதே!

முகத்தைக் கழுவிப் போட்டு சைக்கிளை எடுத்துக் கொண்டு கடற்கரையை அண்டிய ப+வரச மரத்தடிக்குப் போனால் இருட்டும் வரை அரட்டை. மரத்திற்கு வாயிருந்தால், அறுக்காம அங்கால போங்கடா என்று கத்தியிருக்கும். இப்ப அந்த மரம் இருக்கிறதோ தெரியவில்லை. படித்த பள்ளிக்கூடம், கால்பந்து விளையாடிய முற்றவெளp, அளந்து திரிந்த ஒழுங்கைகள், சிரித்து மயக்கிய பெட்டைகள்.. .. .. .. இப்போது அவர்களெல்லாம் கல்யாணம் கட்டி குடியும் குடித்தனமுமாய்!

சின்னம்மா ஒருக்கா வந்திட்டுப் போகட்டா ? என்று கேட்டான் ஒரு முறை.

தேங்காயை சரிபாதியாகப் பிளந்த மாதிரி சின்னம்மா சொல்வாள்.

“கடிதம் எழுது. டெலிபோனில் கதை. இங்க மட்டும் வர நினைக்காதே. நீ ஒருவன் அங்கேயிருக்கிறாய் என்ற தெம்பில் நாங்கள் இருக்கிறம். நிம்மதியில்லாத நாடு. கொஞ்சம் கொஞ்சமாக எங்கள் பிள்ளைகுட்டிகளின் உயிரைக் குடிக்கிற நாடு. நாளைக்கு இருப்பமோ என்ற நம்பிக்கையில்லாத நாடு. வராதே அங்கேயே இரு”.

கொஞ்சக்காலம் போக ப+மியைப் பிளந்து வரும் வாழைக்குட்டி முனையாக ஆசை மீண்டும் தலை நீட்டும். குட்டியை ஒரே மிதியில் மிதித்து நசுக்கி விடுவாள் சின்னம்மா. இப்போது ஆசை மழுங்கி விட்டது. அவன் கேட்பதில்லை. அவள் சொல்வதுமில்லை. போய் வீணாய்ச் சாகிறதை விட இங்கயே கல்யாணம் கட்டிக் கொண்டு செட்டிலாகி விடலாம்.

வராதே வராதே என்று படித்துப் படித்துச் சொன்ன சின்னம்மா ஒருக்கா வந்திற்றுப் போ மகனே என்று இப்போது புலம்புகிறாள். என்னால் தனியே ஒன்றும் செய்ய இயலாது நீ வந்தால்த்தான் என் உயிர் தங்கும் என்கிறாள். எந்த மண்ணில் மிரிப்பதில்லையென முடிவு செய்திருந்தானோ அந்த மண்ணே வெற்றிலை வைத்து வரும்படி அழைக்கிறது. அவன் போய்த்தான் காரியமாக வேண்டும். ஆகுமோ!

பக்கத்து வெளடிளைக்காரர் புத்தகம் பார்த்துக் கொண்டிருந்தார். கொஞ்சம் சுதந்திரக் குறைச்சல்தான். முன்னும் பின்னும் வெறுமையான இருக்கைகள் தெரிந்தன. அவரைத் தவிர்க்கும் பொருட்டு வேறு ஏதேனும் இருக்கையில் இலக்கம் மாறி இருக்கலாம். எழும்பினால் வடிவாயிருக்குமா ?

பஞ்சு பஞ்சாய்த் திரண்டிருந்த மேகக் கூட்டங்களில் முட்டி மோதிய விமானம் ஆட்டம் கண்டது. ஜன்னலால் பார்த்தான். பழகிப் போன ப+மியை விட்டு வெகு தூரம் மேலே வந்தது ஒரு மாதிரியிருந்தாலும் பிரம்மாண்டமான ஆகாசத்தை தரிசித்த பிரமிப்பு மேலோங்கி நின்றது.

விமானம் மேகங்களில் புகுந்து உயர்ந்து இப்போது சீராய் பயணிக்கத் தொடங்கியிருந்தது. முக்கால்வாசியும் இலங்கைக் கடலோர வெண்ணெய் மணற்திட்டுகளில் வெய்யில் காயப் போகும் வெளடிளைக்காரர்கள். பாயசத்தில் கச்சான் மாதிரி இரண்டொரு நம்மவர்களின் தலைகள். இருக்கைப் பட்டியை இளக்கி முதுகை வசதியாக அசைத்து ஆறுதலாக இருந்தபின் சற்றுத் திரும்பி பக்கத்தில் ஹாய் என்றான் செல்வம். அவரும் பதிலுக்கு பார்த்த புத்தகத்திலிருந்து கவனம் திருப்பிச் சிரித்தார். இவரோடு பக்கத்திலிருந்து நெடுநேரம் பயணம் செய்ய வேண்டும். உம்மென்று இருப்பது சாத்தியமில்லை. சம்பிரதாய வார்த்தைகள் பரிமாரிக் கொள்ளத்தான் வேண்டும்.

ஹாய் சொன்னதோடு கடமை முடிந்துவிட்ட ஆறுதல் உண்டாயிற்று. ஆளைப் பார்த்தால் வம்பளப்பவர் மாதிரித் தெரியவில்லை. அளக்கத் தொடங்கினால் பின்சீற்றுக்கு மாறிவிட வேண்டியதுதான். ஊ ஊ என்று காது இரையும் சத்தத்தைத் தவிர குலுக்கலில்லாத விமானம். கனடாவிலிருந்து இவ்வளவு பாரத்தையும் தூக்கிக் கொண்டு ஆறுமைல் உயர இருட்டில் பறந்து கொழும்பு விமான நிலையத்தில் போய் அச்சொட்டாக எப்படித்தான் இறங்குகிறதோ என்று எப்போதும் போலவே மலைப்பு.

“எக்ஸ்கிய+ஸ் மீ நீங்கள் பெளத்தரா ? ”.. .. .. புத்தகத்தை மூடி வைத்தவர் கேட்டார்.

“இல்லை.”

“பிறகு”

“நான் இந்து. ஆனால் புத்தபிரான் எனக்கு அந்நியமில்லை. சின்ன வயதிலிருந்தே ஈடுபாடுண்டு.”

இந்து என்று சொன்னதோடு நிறுத்தியிருக்கலாம். நிறுத்தாமல் சொன்னது அவரது வாயைக் கிளறியிருக்க வேண்டும்.

“எப்டிபடி ? ”

“அவர் சொன்ன தத்துவங்கள் எனக்குத் தெரியாது. சாந்தம் தவழும் அவரது முகந்தான் நெஞ்சில் நிற்கிறது. மனைவி மகன் அரசபோகம் அதிகாரம் எல்லாம் உதறி காட்டிற்குப் போய் கடைசி வரை துறவியாகவே வாழ்ந்தது ஆழமாய்ப் பதிந்து விட்டது. அப்போதெல்லாம் எங்கள் ஊரில் பெளத்த மக்கள் கொஞ்சப் பேர்தான். ஒரேயொரு விகாரைதான். வெசாக் பெளர்ணமியில் விகாரைக்குப் போய் வந்தது நன்றாக ஞாபகமிருக்கிறது. கருணையே வடிவான அவர் பாதங்களில் குடும்பத்தோடு மலர்த்தட்டு வைத்துக் கும்பிடுவோம்.”

எதுவும் பேசாமல் அப்படியே மெளனமாய் பயணத்தை முடித்துக் கொள்ள எண்ணியிருந்தவன், இப்போது அதற்கு மாறாக நிறையப் பேசினான். நினைத்தது போல் நடக்க முடிவதில்லை. நடப்பது போல் நினைக்க முடிவதில்லை. தன்னில் நிகழந்த மாற்றம் பற்றி அவன் யோசிக்கும் போது கேள்வி வந்தது.

“புத்தபிரானின் போதனைகள் பற்றி தெரிந்து கொள்ள நீங்கள் முயற்சிக்கவில்லையா ?”

“இல்லை. நீங்கள் ?”

அவர் தன் ஆங்கிலத்தில் தெளpவாகச் சொல்லத் தொடங்கினார். செல்வத்தின் சரள ஆங்கிலம் அவருக்கு நல்லதொரு சக பிரயாணி கிடைத்து விட்டார் என்ற நம்பிக்கையை கொடுத்திருக்க வேண்டும்.

“எனக்கு புத்தபகவானே வழிகாட்டி”

“வழிகாட்டி மட்டுந்தானா! கடவுளாக ஏற்றுக் கொள்ளவில்லையா ? ”

“புத்தபகவான் கடவுள் ஆத்மா என்று எதுவும் போதிக்கவில்லை. செய்கிற கர்மத்திற்கேற்ப பாவபுண்ணிய பலன் உண்டு. உலகப்பற்றுகளை விடும்வரை மறுபிறவிகள் தொடரும் என்பன போன்ற இந்துசமயத் தத்துவங்களை அவர் ஏற்றுக்கொண்டார். ஆனால் கடவுள் பெயரால் ஆலயங்களில் இடம்பெற்ற, மிகையானதென்று அவர் கருதிய ஆசார சடங்குகளை, சாதியின் பெயரால் நிலவிய சமுதாயக் கொடுமைகளை அவர் மறுத்தார். உன்னில் நம்பிக்கை வைத்து உன்னாலே உன்னை உயர்த்திக் கொள் என்று ஒரே வரியில் அழுத்தமாகக் கூறினார். அலைந்து கொண்டிருந்த என் மனதைத் தெளpவாக்கி நம்பிக்கையும் உறுதியும் தந்த இந்தப் போதனை என்னை அவர் பக்கம் கவர்ந்து இழுத்தது.

அடுத்தடுத்து வரும் எல்லா துன்பத்திற்கும் ஆசையும் அறியாமையுந்தான் காரணம். துன்பத்திலிருந்து நீங்க பற்றை நீக்குவதே ஒரே வழி. பேராசை வெறுப்பு பொறாமை மதம் மாச்சரியங்கள் எதுவுமேயில்லாத அதிஉயர்ந்த நிர்வாணநிலையை முயற்சித்தால் மனிதன் அடையலாம். அதற்கு எட்டு வழிகள் உள்ளன. சரியான நோக்கம், சரியான எண்ணம், சரியான பார்வை, சரியான பேச்சு சரியான செயல் சரியான முயற்சி, சரியான வாழ்க்கை சரியான கவனம் சரியான தியானம் என்று அவைகளை வரிசைப்படுத்தினார் புத்தபகவான். இப்பிறவியில் தோற்றாலும் அடுத்து வரும் பிறவிகளில் ஞானம் பெறலாம் என்று நம்பிக்கை ஊட்டினார். நான் என்னுடையது என்ற பற்றும் அகந்தையும் அகன்று சகல சீவராசிகளிடத்திலும் அன்பும் கருணையும் சமநோக்கும் கொண்டிருக்க வேண்டும் என்பதே அவரது போதனையின் அடிநாதம். ”

“நீங்கள் கிறிஸ்டியன் என நினைக்கிறேன். எப்படி புத்தரின் வயப்பட்டார்கள் ? ”

அவர் புன்முறுவலோடு கூறினார்.

“எங்களுக்குச் சொந்தமாக ஒரு கப்பல் இருக்கிறது. செல்வத்திற்கும் வசதிகளுக்கும் குறைவில்லை. இருந்தும் இளம் பிராயத்திலிருந்தே துக்கங்கள் என்னைத் துரத்திக் கொண்டிருந்தன. காரணம் புரியவில்லை. சொந்தங்களோ செல்வமோ வசதிகளோ என் கவலைகளைப் போக்கவில்லை. நிம்மதி தேடி அலைந்தேன். அந்தத் தீவிரத் தேடலின் போது புத்தரின் போதனைகளில் எனக்கு விடை கிடைத்தது. அவரைப் போலவே பற்றுக்களை அறுத்துவிட்டால் துக்கத்திலிருந்து கழன்று விடலாம் என்று புரிந்தது. சாத்தியப்பட்டதையெல்லாம் கடிடப்பட்டுக் கழற்றிவிட்டும் மன ஈடாட்டம் குறையவில்லை. அதைக் கட்டுக்குள் கொண்டுவர ஒருமுகப்பட்ட தியானம் அவசியம். அதைப் பயின்று கொள்ளவே கண்டியிலுள்ள விகாரைக்குப் போகிறேன்.”

தொடர்ந்து பார்க்கத் தூண்டும் வசீகரமுள்ள பணிப்பெண்கள் அந்தப் பக்கமும் இந்தப் பக்கமும் உணவு வண்டி தள்ளி வந்தார்கள். இந்த வேலைக்கென பொறுக்கியெக்கப்பட்ட அழகிகள் அவர்கள். பறக்கும் விமானத்தில் ஒடுக்கமான பாதையில் பாரவண்டி தள்ளி வருவது கடிடமான காரியம். அதுவும் பிரயாணிகளின் தேவைகளை பணிவுடன் கேட்டு ஊற்றிக் கொடுத்து உணவு அளித்து மடக்கும் குறுணி மேசையை துப்புரவு செய்து மிச்ச சொச்சங்களை மீண்டும் வண்டியில் அள்ளிக் கொண்டு போவது ஒன்றும் இலேசில்லை. அந்தக் கடிடத்திலும் சேர் சேர் என மரியாதை காட்ட வேண்டிய தொழில்சார் நிர்ப்பந்தம். விமானப் பணிப்பெண்ணாக ஆகிவிடும் கனவோடு இருந்த சில பெண்களை அவனுக்குத் தெரியம். விமானத்தில் அவர்களுக்கு கிட்டத்தட்ட ஹோட்டல் சர்வர் வேலைதான் என்பதை கண்ணெதிரே பார்க்கிற போது ஏனோ அவனுக்குப் பாவமாயிருந்தது.

பணிப்பெண் வெஜ் ஓர் நொன்வெஜ் என்று கேட்டாள். அவர் நொன்வெஜ் ஒரெஞ் ஜுஸ் சொன்னார். ஒரு பியரும் மச்ச உணவும் செல்வத்திற்கு வந்தது. அவரைப் போலவே அவனும் மரக்கறி உணவு சொல்லியிருக்கலாம். ஒரு உண்மையான மனிதனின் அருகாமையில் இருந்து கொண்டு பொய்யாக நடந்து கொள்ள மனம் மறுத்தது. உணவு முடிந்து அவர் செல்வத்தின் பக்கம் திரும்ப அவன் கேட்டான்.

“நீங்கள் குடிப்பதில்லையா ? ”

“எல்லாப் பழக்கவழக்கமும் என்னிடமிருந்தன. சூதுவாது குடிகூத்தி மச்சம்மாமிசம் இப்படிப் பல. ஒரு வருடமாக முயற்சித்து ஓரளவிற்குக் கழற்றி விட்டிருக்கிறேன்.”

“ஏன் இப்படிக் கடுமையாக உங்களை நீங்களே தண்டித்துக் கொள்கிறீர்கள் ? ”

“அப்படியில்லை. நிறைவை நோக்கி மெதுமெதுவாக நகரும் முயற்சி இது. அற்பப் பிராணியான ஒரு ஆட்டுக் குட்டிக்காகத் தம்மையே தியாகம் செய்யத் தயாராக இருந்தார் புத்தபகவான். உயிர் துறப்பதற்கு முன்னர் அவரது வாரிசாக ஒருவரை நியமிக்கும்படி கேட்டார்கள். உங்கள் ஒவ்வொருவரின் விடுதலைக்கு நீங்களே பொறுப்பு. அதற்காக நீங்களே பாடுபட வேண்டும் என்றார் அவர். அத்தகைய உயர்ந்த தன்னலமறுப்போடு வாழ்ந்து காட்டிய புத்தபகவான் ஒருபோதும் தன்னை முன்னிலைப்படுத்தியதேயில்லை. இந்த உலகத்தில் அறநெறி எங்கிருந்தாலும் அது புத்தர் என்னும் சூரியனிலிருந்து வந்த ஒரு ஒளpக்கிரணம் என்பது என் அபிப்பிராயம். பைதி வே என் பெயர் லோசன்.. .. .. ஹரிஸ் லோசன்”

“ஐ ஆம் செல்வம்.”.. .. .. .. .. முழுப்பெயரையும் சொல்ல நினைத்துவிட்டு அவருக்கு உச்சரிக்கக் கடிடமாயிருக்குமென்பதால் விட்டுவிட்டான். அவர் கண்ணயர்ந்ததும் அப்போதைக்கு பேச்சு முடிவிற்கு வந்தது. முயற்சித்தும் நித்திரை வரமாட்டேனென்றது செல்வத்திற்கு. பொதுவாகவே விஞ்ஞான ப+ர்வமான அறிவு சார்ந்த விடயங்களில் கூடிய நாட்டம் கொள்ளும் வெளடிளைக்காரர் மத்தியில் அறநெறியால் ஆகர்சிக்கப்பட்ட இப்படியொரு மனிதரா ? திரும்பிய இடமெல்லாம் புத்தர்சிலை இருக்கும் நாட்டில் பிறந்தும் புத்தபிரானைப் பற்றி அறியாமலே அவன் இருந்திருக்கிறான். வெட்கம் பற்றிக் கொள்ள எண்ணங்கள் எங்கேயோ பாய்ந்தன.

தன்னைத்தானே உணர்ந்து கொண்ட ஒரு உயர்ந்த பிறவியோடு பக்கம் பக்கமாகப் பிரயாணம் செய்யக் கிடைத்தது பெரிய அதிடிடம். நல்ல பிரயாணியோடு பயணம் செய்வதில் ஒரு சுகம் இருக்கத்தான் செய்கிறது. தன்னைப் பார்க்க மாட்டார் எனத் தெரிந்து கொண்டு கண்வாங்காமல் அவரையே பார்த்தான் செல்வம். விகாரையில் சாந்தமான மஞ்சள் புத்தருக்கு முன்னால் ப+த்தட்டோடு நின்ற சின்னவயதுக் காட்சி நெற்றிக்குள் விரிந்தது.

நெற்றிக்குள் விரிந்த காட்சிகள் நீடிக்கவில்லை. திடாரென சின்னம்மா வந்தாள். தாயின் சேலைத் தலைப்பைப் பிடித்து நின்ற பிள்ளையாக அவள் அனுப்பிய தொலைநகல் செய்தியும் கூடவே வந்தது.

‘செல்வம் – நாலைந்து நாளாய் ஜெயம் வீட்டிலில்லை. எல்லோரும் குழப்பத்திலிருக்கிறோம். வெளpயில் சொல்லவும் முடியவில்லை. உடனே ரெலிபோன் எடு. – அம்மா.’

மயசரடளரடிசயஅயnயைஅளூலயாழழ.உழஅ

Series Navigation

திருகோணமலை க. அருள்சுப்பிரமணியம்

திருகோணமலை க. அருள்சுப்பிரமணியம்