யார் நிரந்தரம் ?

This entry is part [part not set] of 50 in the series 20040408_Issue

பிச்சினிக்காடு இளங்கோ(சிங்கப்பூர்)


யூதாஸ்
எல்லா இடங்களிலும்
உன் ஆளுமை

எல்லா இடங்களிலும்
உன் ஆன்மா

எல்லா இடங்களிலும்
நீதான்

அன்றிலிருந்து
இன்றுவரை
பரிணாமம் என்பது
நிகழ்ந்துகொண்டிருந்தாலும்
பாதை என்னவோ
நீ போட்டது

பரிணாமம்
பரிதாபம் என்று
பொருள்கொள்ளப்படுகிறது

வாகனங்கள் மாறியது
வாசனைகள் மாறியது
வசனங்கள் மாறியது
வாழ்க்கை மட்டும்
உன் வழியில் நடக்கிறது

இலட்சியம்
இரண்டாவது இடத்தில்

உன் முத்தம் எங்களுக்கு
மூலமந்திரம்

யூதாஸ்
நீ சொல்
நிரந்தரமானவர் இயேசுவா ?
நீயா ?

***
ilango@stamford.com.sg

Series Navigation