மனசாட்சி

This entry is part [part not set] of 37 in the series 20071011_Issue

உஷாதீபன்அவனைக் கெடுத்தது நான்தான்.
அந்த அறுவரில் யார் என்று அடையாளம் காண்பிக்கச் சொல்லி போலீஸ் என்னைக் கேட்டபோது எனக்குள் இப்படித்தான் தோன்றியது.
அந்த அவனை, அவன் மனதைக் களங்கப்படுத்திக் கெடுத்தவன் நான்தான்|.!
ஆம்! அவன் அதில் நின்று கொண்டிருந்தான். அவனுக்கு என்னை அடையாளம் தெரியவில்லை.ஆனால் அவனை எனக்கு நன்றாய்த் தெரிந்தது.
அன்று நடந்த திருட்டில் அந்த முட்டுச் சந்தி;ல், இருட்டில் அவன் முகம் இல்லையே! கேள்வி பிறந்தது என்னுள்! சாணைக் கத்திpயிலிருந்து பறந்து தெறிக்கும் தீப்பொறிகளைப்போல என் நினைவுப்பொறி பற்றிக்கொண்டது.

உண்மைதான்! அதில் அவன் இல்லை!! நிpச்சயமாக இல்லை!!! புpன் இங்கே எப்படி வந்தான்? மனசு நடுங்கியது எனக்கு! இந்த ஏரியாவுல பிக்பாக்கெட்,வழிப்பறி, சங்கிலி அறுப்பு.சில்லரைத் திருட்டு, எல்லாம் இவங்கதான் சார்.அன்னைக்கு உங்களைக் கத்தியைக் காட்டி வழிப்பறி பண்ணுனவங்க யாருன்னு அடையாளம் காண்பிச்சீங்கன்னாபோதும்.,மாத்துக்கொடுத்துறலாம் அப்பத்தான் ஒத்துக்குவாங்க..
அடையாளம் சொல்லி என்ன ஆகப்போகிறது? கண்முன்னால் ஒருவன் உதைபடுவதைப் பார்க்க வேண்டுமா? மனிதனை மனிதன் அடித்துக் கொடுமைப்படுத்தும் காட்சியை என்னால் கண்கொண்டு பார்க்க இயலாது. அடி வாங்குபவனின் வதையைக் காணச் சகியாது மனம். புpன் எதற்காகப் புகார் கொடுக்க வேண்டும்?
போனால் போகட்டும் என்று விட்டுவிட வேண்டியதுதானே?
ஏண்டா, ஒருபவுன் சங்கிலி, ஐநூறு ரூபா பணம்ங்கிறது என்ன சும்மாவா வருது? கம்ப்ளெய்ன்ட் கொடுத்து வைப்போம். கிடைச்சா வேண்டாம்னு இருக்கா? நண்பனின் வற்புறுத்தலில் வாயடைத்துப்போனது எனக்கு.
இன்று எனது வருகை அவனுக்குத் தெரியாது. எதற்காக அவனைவேறு தொடர்ந்து கஷ்டப்படுத்த வேண்டும்?
மிஸ்டர் கணேசன் இருக்காரா? ஆவரைநாளைக்குக் காலைல அரசமரம் ;ஸ்N;;டஷனுக்கு வரச் சொல்லுங்க
என் மனையாள் கேட்டு வைத்ததொலைபேசி அழைப்புக்கு .இதோ வந்திருக்கிறேன் நான்.
புhதி இருட்டும் மிக மங்கிய வெளிச்சமுமாய் இருந்த அந்த மூத்திரச்சந்தில் கையில் கத்தியைக் காட்டி அழூத்திய வேகத்தில் அந்தப் படபடப்பில் அந்த நடுக்கத்த-pல் எந்த முகத்தை மனதி;ல் நிறுத்த முடியும்? வுரிசையாய் ஒவ்வொருவராய்ப் பார்ததேன் நான்.
என்னைக் காட்டிக் கொடு;க்கப் போகிறாயா? தயவுசெய்து அப்படிச் செய்துவிடாதே!
உன்னைப்போல் என்னையும் என் தாய் தந்தையர் படிக்க வைத்திருந்தால் நான் இப்படி வந்திருப்பேனா?
எனக்கும்உன்னைப்போல் காலத்தில் ஓர வேலை கிடைத்திருந்தால் என் கதி இ;ப்படியாகியிருக்குமா?
இது என் தவறா? என் தாய் தந்தையரின் தவறா?அல்லது இந்த சமுதாயத்தின் தவறா?
ஒவ்வொருவரும் ஒவ்வொருவிதமாய்க் கேட்பதுபோன்ற உணர்வு எனக்குள்.எல்லோh முகத்திலும் இறுக்கம்,பயம்,விரக்தி, சோகம், சோர்வுஇன்னும் என்னென்னவோ!
யாருமில்லை.அன்று என்னிடம் திருடியவர்கள் எவருமி;ல்லை இங்கே..! எந்த முகமாவது.,எந்தப் பார்வையாவது மனதில் நின்றிருந்தால்தானே? மறுதலித்துவிட்டு வெளியேவந்தவனின் சிந்தனை தடைபட்டது.அது யார்? தெரிந்த முகம்.போல்?
அந்த இவனஅச்சிறுவன் – இங்கே எப்படி? என்ன தவறு செய்தான்? ஏனிப்படி ஆனான்? கொஞ்சநாளாய் -அங்கே- காணவில்லையே? அதற்குஇதுதான் காரணமோ?
“சார், டோக்கன் வாங்குங்க ஐம்பது பைசா சில்லரையாய்க் கொடுங்க…சார்…டோக்கன்,டோக்கன்…வாங்கிட்டு உள்ளே போங்க சார்…”_—பறந்து பறந்து, சுறுசுறுப்பாய் சீட்டைக்கிழித்துக்கொண்டிருந்தான்அவன். அது ஒரு சந்தை வளாகம். ஒரு ஆள் அவனிடமிருந்து தப்ப முடியாது. “அட,திரும்பி வர்றபோது தர்றேன் தம்பி.ஓடியா போறேன், சில்லரை இல்லை…”
“எவ்வளவுக்கு சார் சில்லரை வேணும்…கொடுங்க…நான் பாக்கி தர்றேன்..நீங்க திரும்பி வர்றதையே நினைச்சிட்டு நான் காத்திட்டிருக்க முடியாது. நான் வர்றவங்களைப் பார்ப்பனா? அல்லது உங்களையே நினைச்சிட்டிருப்பனாஈ? பத்து ரூபாயோ அல்லது இருபது ரூபாயோ.ஐம்பது பைசாசை அவனிடம் கழிக்;;;;;;;;காமல் போக முடியாது. உள்ளேஅடியெடுத்து வைக்க முடியாது. சரட் சரட ;என்று காகித டோக்கன்கள் கிழிபடும் சத்தம். கையில் திணித்து அனுப்பி விடுவான் உள்ளே. அப்பப்பா, எத்தனை சுறுசுறுப்பு? எவ்வளவு கடமையுணர்ச்சி? – மலைத்திருக்கிறேன் நான். நானே மாட்டிக் கொண்டேன் ஒரு நாள்.
“எப்படி சார்..டோக்கன் வாங்காம உள்ளே போனீங்க? நான்தான் இருக்கேன்ல? கூப்பிட வேண்டியதுதானே? “
“சரிடா தம்பி, உன்னைக் கவனிக்கலே….”
“அதெப்படி சார், தினமும் வர்றீங்க..கவனிக்கலேன்னா எப்படி? இந்த மூலை, இல்லாட்டி அந்த மூலை. கத்தினாஓடியாறேன்…” தொடர்ச்சி பக்கம்-2 ;ல்

-2-
“சரிதாண்டா பெரிய மனுஷா…இந்தா பிடி உன் ஐம்பது பைசாவை…ஆளை விடு….”

காசைத்திணித்துவிட்டு காய்கறிப்பையை மாட்டி, வண்டியை உசுப்பித்தேன்.
“இந்தாங்க சார் ஐம்பது காசு பாக்கி….”
“பரவால்ல, நீயே வச்சிக்க…”
“ஊஉற_ம், அதெல்லாம் கூடாது சார்…”-கூறியவாறே பாக்கி ஐம்பது காசைக் காய்கறிப் பைக்குள் சடக்கென்று போட்டான் அவன். அதே வேகத்தில் சரக்கென்று கிழித்தான் டோக்கனை.
“பிடிங்க சார்…”-கையில் திணிக்க வந்தான்.
“எதுக்கு? அதை வேறே யாருக்காவது கொடேன். உனக்குஐம்பது பைசா மிச்சம்…”
தலையை மறுதலித்து ஆட்டி, அவன் என்னையே கூர்மையாய்ப் பார்த்தான். எனக்கு ரொமபச் சங்கடமாய்ப் போய்விட்டது. அவன் சொன்னான்.
“என்னசார், நீங்களெல்லாம் படிச்சவங்க..ந{ங்களே இப்பபடிச் சொல்லலாமா?நல்லதைச் சொல்லிக் கொடுக்காட்டாலும் கெட்டதைச் சொல்லிக் கொடுக்காதீங்க சார்…-கூறியவாறே அந்தக் காகித டோக்கனைப் பரட் பரட்டென்று கிழித்துப் போட்டான். நான் அவனையே விழி நீக்காமல் பார்ததேன். ஆவன் கையிலிருந்த சீட்டுகிழிபட்டபோது, என் தவறான, அலட்சியமான, விட்டேற்றியான அந்தக் கெட்ட எண்ணம்; நார் நாராய்க் கிழிபட்டது அங்கே. !
அன்று அவனின் களங்கமற்ற, நேர்மையான மனதில் வினையை விதைத்தவன் நான்தான். காசை வாங்கிக்கொண்டு டோக்கன் கொடுக்காமல் காசைநீயே மூட்டை அடிக்கலாம் என்ற தவறை, தப்பி;ல்லை என்பதுபோல் அவனுக்குச்; சுட்டிக்;காட்டியது நான்தானே?
நல்ல மனதில் கள்ளம் புகுத்தியவன்; நான். விதைக்குப்பதிலாக வினையை விதைத்தவன். சிறு தவறுதான் என்றாலும் அதுதானே பெரிய தவறுக்கு வழிவகுக்கிறது? இதோ இன்று உள்ளே அவன்! இது எப்படி, ஏன் நடந்தது? நடந்திருக்கிறதே?
அவனைக் கெடுத்தது நான்தான். ஆம்! அங்கே நிற்கக் காரணமான வழிகளுக்குள் ,விபரீத நிகழ்வுகளுக்குள் எனது முதல் வழிகாட்டுதலும் ஒன்று! அதை மறுப்பதற்கில்லை. அந்த மனதைக் களங்கப்படுத்தியவர்களுள் நானும் ஒருவன். ..இது சத்தியம்…என்னால் இப்படித்தான் யோசிக்க முடிகிறது. அதுதானே நிஜம்?
மனசாட்சி குத்திக்கிழிக்க வேதனையோடு வெளியேறுகிறேன் நான்!!


Series Navigation

உஷாதீபன்

உஷாதீபன்

மனசாட்சி

This entry is part [part not set] of 26 in the series 20011015_Issue

ருத்ரா


கதவைத் திறந்துகொண்டு வாயேன்.
பக்கத்தில் வந்து உட்கார்.
வார்த்தைகளுக்குள்
சுருண்டு கொண்டு விடாதே.
கிணற்றுக்குள்ளிருந்து
பேசுகிறாய்.
தவளைகளின் சள சளப்புகளில்
உனக்கு
எழுபத்திரெண்டு மேளகர்த்தாக்கள்.
உன் சிலுவைகளுக்கு
அடுத்தவன் முதுகை
தயார் செய்வதற்கு
இத்தனை வாணவேடிக்கைகளா ?
கோரைப்பல்லாக
குத்திக்கொண்டே இருக்காதே.
வா வந்து உட்கார்.
உன்னை நான் பார்க்கட்டும்.
உடுக்கை அடித்துக்கொண்டே
அதிர்வு எண்களை
அதிகப் படுத்துகிறாய்.
அதிகமாய்ப் படுத்தாதே.
பாதரசக்குறியீடுகளில்
பல்லிளிக்கிறது
என் இதயம்.
இந்த ரத்த அழுத்தங்களிலா
உன் கல்வெட்டுகள் ?
இரும்பு சம்மட்டிகளைக்கொண்டு
கபாலங்களை நொறுக்கி விட்டு
மரச்சுத்தியலைத் தட்டி
ஆர்டர் ஆர்டர் என்கிறாய்.
சிதைகள் அடுக்கும் ஒத்திகையின்
உன் சித்திரவேலைப்பாடுகளே
இங்கு சித்திரவதைகள்.
முற்றுப்புள்ளியாய்
நான்
மண்ணில் விழும்போது
அந்த விதைக்குள்
விருட்சமாய் படுத்திருந்த நீ
இப்போது
என் படுக்கை அருகே வந்து
உன் ராட்சச பூங்கிளைகளை
அசைத்து காட்டு.
நான் எடுத்தது என்ன ?
நான் தொலைத்தது என்ன ?
வைக்கோல் போாில் விழுந்து விட்ட
ஊசி அது.
தேடிக்கொண்டிருக்கிறேன்.
ஆழத்தில் கிடக்கும்
அந்த காதல் கீற்றுகளை
அந்த ஊற்றுக்கண்களை
இன்னும் தேடிக்கெண்டிருக்கிறேன்.
வாழ்க்கைக் கோப்பையின்
அடியில் உலர்ந்து கிடக்கும்
அந்த சொட்டுகளுக்கு
தாகம் எடுத்துக்கிடக்கின்றேன்.
எத்தனையோ தடவை
என் முதுகில் தட்டியிருக்கிறாய்.
என் நெஞ்சைப் பிசைந்திருக்கிறாய்.
இப்போதும்
என் நரம்புகளை மீட்ட வந்திருக்கிறாய்.
என்ன சொல்லப்போகிறாய் ?
உன் ‘கருட புராணங்களில் ‘
இந்த கோழிக்குஞ்சுகள் இரையாகி
இனி காணாமல் போகட்டும்.
வா.
உன்னை நான் பார்க்கவேண்டும்.
இப்படியே
இன்னும் எத்தனை
கர்ப்பப் பைகளுக்குள் புகுந்து
பூகம்பங்களை
கிளப்பிக்கொண்டிருக்கப்போகிறாய் ?
போதும்.
என்னோடு வந்து விடு…
டாக்டர் சிாிஞ்சை நீட்டுகிறார்.
வா வந்து உட்கார்.
என்னருகில் உட்கார்.

Series Navigation

ருத்ரா

ருத்ரா