This entry is in the series 20011015_Issue


50 கிராம் காய்ந்த சிவப்பு மிளகாய்

40 கிராம் கடலைப்பருப்பு

50 கிராம் உளுந்தம் பருப்பு

15 கிராம் எள்

ஒரு துளி பெருங்காயம்

எண்ணெயும் உப்பும் தேவைக்கேற்ப

இரண்டு கரண்டி எண்ணெய் விட்டு சிவப்பு மிளகாயை வறுங்கள். அதை எடுத்துவிட்டு, அதே எண்ணெயில் எல்லா பருப்புகளையும் போட்டு வறுங்கள். நன்றாகச் சிவக்கும் வரை வறுக்கவும்.

இவற்றை எல்லாவற்றையும் எடுத்து, ஒரு மிக்ஸியில் போட்டு மாவு போல அரைக்கவும். பிறகு எடுத்து உப்பு சரி பார்த்து உப்பு போட்டுக்கொள்ளலாம்.

இட்லி, தோசை கூட சேர்த்துச் சாப்பிடலாம்

Series Navigation