பெண்

This entry is part [part not set] of 44 in the series 20100807_Issue

எம்.ரிஷான் ஷெரீப்,இலங்கை


பறவைகளின் பாதையில் குறுக்கிடும்
கரங்களைப் பெற்றிருந்தவனின் தலையில்
மரங்கள் முளைத்திருந்தன
கிளைகளையடைந்து கூடுகட்டுவதை
அஞ்சிய பட்சிகளெல்லாம்
பறப்பதையும் மறந்தன
கூடு கட்டுதலையும் மறந்தன
பின்னர் அப்படியே தம் இருப்பையும் மறந்து
அந்தரத்தில் இறந்து வீழ்ந்தழிந்தன

-எம்.ரிஷான் ஷெரீப்,இலங்கை

Series Navigation

எம்.ரிஷான் ஷெரீப்

எம்.ரிஷான் ஷெரீப்

பெண்

This entry is part [part not set] of 37 in the series 20030309_Issue

பிரியா ஆர்.சி.


நீ தீ
தீபம் ஏற்றவும், தீப்பந்தம் கொளுத்தவும்
உன்னால் முடியும்

நீ நீர்
உயிர் கொடுக்கவும், உயிரெடுக்கவும்
உன்னால் முடியும்

நீ காற்று
தாலாட்டும் தென்றலாக, தவிக்கவிடும் சூறாவளியாக
உன்னால் முடியும்

நீ நிலம்
பூஞ்சோலையாக்கவும் பாலைவனமாக்கவும்
உன்னால் முடியும்

நீ வான்
எரிக்கும் சூரியனாக, எழில் தரும் சந்திரனாக
உன்னால் முடியும்

நீ சக்தி
ஆக்கவும் அழிக்கவும்
உன்னால் முடியும் !!!

rcpriya@yahoo.com

Series Navigation

பிரியா. ஆர். சி. ...

பிரியா. ஆர். சி. ...