நீ, நான் மற்றும் அவன்

This entry is part [part not set] of 48 in the series 20110313_Issue

தேனுஆழிகள் கண்டறியா
அமிழ்ந்திருக்கும் தெப்பமென
நனைகூந்தல்…
அந்தவொரு கணத்தில்
சுற்றம் அனைத்தையும் தவிர்த்து
முன்னிலையில் நிறுத்தப்பட்டிருந்தன
காதலும் காமமும்…
.
இன்னதென்று பிரித்தறியாதபடி
படர்ந்து விட்டிருந்த யாக்கைகள்
சீராய்ப் பாடும் தென்றலுக்கு
சற்றே ஊடுருவும் சலிப்பை
வாரி வாரி வழங்கி,
உராய்தலுக்கான வீரியத்தில்…

உச்சி நுகர்ந்திடும்
அந்த எச்சில் ஈரம்
காய்ந்திட்டதாய் துளியும்
விட்டுவைக்கவில்லை நினைவுகள்..
.
உயிரணுக்கள் உயிர்த்தெழும்
அந்நொடிப்பொழுதிலும்
இதிகாசங்கள் நவில்ந்திட்டு
செருக்குடன் தள்ளி நிற்கிறான்
கவிதையெனும் மூன்றாமவன்!!

– தேனு [thenuthen@gmail.com]

Series Navigation

தேனு

தேனு