திண்ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிக்கை

Current Issue: 20110529_Issue

Browsing Category

கவிதைகள்

கவிதைகள்

ஒரே ஒருமுறை

கரு. திருவரசு பிறந்துவிட்டேன் ஒரே ஒருமுறை பிறக்கமாட்டேன் மறுமுறை இறந்துபோவேன் ஒரே ஒருமுறை இறக்கமாட்டேன் பலமுறை இறப்பென்பதோ ஒரே ஒருமுறை இறுதியானதோர் வரைமுறை பிறப்பென்பது வரும் பலமுறை பேசுவாரதோ வெறுமுரை இறந்துபோவேன் ஒரே ஒருமுறை…

இந்த வார வெண்பா நான்கு

மத்தளராயன் கிரோம்பேட்டை ரயில்வே கேட் வடிவாய் உடுத்த வனிதை குனிந்து அடியில் கடக்க முடியின் நெடியே முகரும் குருக்கள் முகமும் வியர்க்க நகரும் சரக்கு ரயில். விற்பனையாளர் ஆழ யழைப்புமணி அங்கே கதவும்தான் தாழவே…

நிதர்சனம்

எஸ். வைதேஹி. அக்கறையிலும் இக்கரையிலுமாய் நானும் நீயும் பரஸ்பரம் பரிமாறிக்கொள்ள நாம் விட்ட காகிதக்கப்பல்கள் கூழாங்கற்கள் இடித்து கரை பல தாண்டி கடந்து போயின. சுவர் கோழி கூவி மணற்துகள் உதறி விடியும் பொழுதில்…

ஏடுகள் சொல்வதுண்டோ ?

கவியோகி வேதம் இசையினையே முறையாகக் கற்ற பின்பா ..இளங்குயிலும் இசைக்கிறது ?கவிம னத்தை அசைவிக்கும் மின்னலுமே பாதை தன்னை ..அழகுறவே வகுத்தபின்பா கண்சி மிட்டும் ? விசையோடு வருகிறதே மேகப் பாய்ச்சல்! ..விதிஒன்றை வகுத்தபின்பா…

சின்ன கவிதைகள் – 3

ஆனந்தன் வெட்கப்படு பெண்ணே..! உன் உதட்டில் பூக்க அந்த புன்னகைக்கும் ஆசை! 0 அந்த பூவின் கண்களில் பொறாமை உன் உதட்டில் பூத்த புன்னகையைப் பார்த்து! 0 அதிர்ஷ்ட மச்சத்திற்கும் அதிர்ஷ்டம் தான் உன்…

புதைகுழி

ஸ்ரீனி. காற்றிலாடும் காலண்டர் காகிதங்களில் கையசைத்தும் ரயில் நிலைய கடிகாரமாய் எதிர்கொண்டும் அந்தி மஞ்சள் அஸ்தமனங்களில் உதயமாகியும் பொன் காலை பொழுதுகளாய் ஜொலித்தும் வார இறுதிகளில் ஒடிப்பிடித்து விளையாடியும் சிரித்து நிற்கும் தாத்தாவின் மின்னும்…

விழுவதால் விருதா ?

சேவியர். வெற்றியை எப்படிப் பெற்றுக் கொள்கிறாய் நீ வெற்றிக்காய் வெறியோடு வேட்டையாடுகிறாயா, இல்லை நெறியோடு தான் நடைபோடுகிறாயா ? 0 சொல். இங்கே பலர், எதிராளியைத் தோற்கடிப்பதில் வெற்றி பெறுகிறார்கள், சிலர் வெற்றி பெறுவதால்…

வெள்ளி

புஹாரி, கனடா நீலவான் பந்தலில் நெஞ்சமள்ளும் கவிதையுடன் நீள்விழி அசைத்தே மெல்ல நில்லெனச் சொல்லும் வெள்ளி விண் வெள்ளி...! உள்ளுக்குள் வந்துபோகும் ஒட்டுமொத்த உணர்ச்சிகளை ஒரே மூச்சில் கொட்டித் தர ஓயாமல் அழைக்கும் வெள்ளி…

சுவர்களின் கவிதைகள்.

ரமேஷ். ஓயாமல் சுவர்களுடன் பேசிக் கொண்டிருக்கிறேன் தனிமையைத் தவிர்க்கவும் விசும்பல்களைக் கேட்காதிருக்கவும். * * * ஜன்னலில் தெறித்து வழியும் ரத்தத் துளிகளுக்காய் ததும்பித் ததும்பி துடித்து தவித்து கனக்கும் ஒரு முகம்... 'வெற்றி!…

நீ… உனக்கான வரம்.

சேவியர். நண்பனே... உன்னைப் பற்றி நீயேன் உயர்வாய் நினைக்க தயங்குகிறாய் ? மாலுமிகளே சஞ்சலப் பட்டால் சுக்கான் பிடிப்பது சுலபமாயிருக்குமா ? நீ சொல்லுமிடம் செல்ல உன் கால்கள், நீ நீட்டுமிடம் நிற்க உன்…