ஒரே ஒருமுறை
கரு. திருவரசு

பிறந்துவிட்டேன் ஒரே ஒருமுறை
பிறக்கமாட்டேன் மறுமுறை
இறந்துபோவேன் ஒரே ஒருமுறை
இறக்கமாட்டேன் பலமுறை
இறப்பென்பதோ ஒரே ஒருமுறை
இறுதியானதோர் வரைமுறை
பிறப்பென்பது வரும் பலமுறை
பேசுவாரதோ வெறுமுரை
இறந்துபோவேன் ஒரே ஒருமுறை
இறக்கமாட்டேன் பலமுறை
பிறந்துவிட்டேன் ஒரே ஒருமுறை
பிறக்கமாட்டேன் மறுமுறை