திண்ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிக்கை

Current Issue: 20110529_Issue

Browsing Category

கவிதைகள்

கவிதைகள்

கவிக்கட்டு 10 -கதையாகிப் போனவளே !

சத்தி சக்திதாசன் என்னுடல் தழுவி குளிர்மையாய்க் கதைபேசும் இளங்காலைத் தென்றலது ; அவள் கைகள் அள்ளித் தெளிக்குமந்த குளிர்மையை கூட்டி வந்ததுவே ! பார்வையெனும் அம்பை நான் பார்த்திருக்கும் போதெ பாய்ச்சியவளே பார்த்த இடமெல்லாம்…

பறத்தல் இதன் வலி

மாலதி ---- சிறுகால் பதித்துவிட சிவப்பான வானத்தில் பொழுதுக்கும் இடமில்லை பறத்தல் இதன் வலி. சிறகெல்லாம் வலித்து நொறுங்கல் அஞ்சும். ஒளிந்தொலிக்கும் வசைகள் வடியும். அக்குள் இடுக்குகளின் புண்மீறி. இன்னும் பற சீக்கிரம் பற…

நிழல்

கற்பகம். ---- எங்கு சென்றாலும் பின்னாலேயே வருகிறதே எதற்கு இந்த நிழல் ? ? ஃ வெயிலில் பாதம் சுடுகிறதே என்று இதனில் ஒதுங்கத்தான் முடிகிறதா... துக்கம் அடைக்கிறதே கூடவே இருக்கிறதே என்று தோளில்தான்…

வண்ணத்துப்பூச்சி விளையாட்டு….

பட்டுக்கோட்டை தமிழ்மதி தொட ஓடுகிறாய் தொடராமல் நிற்கிறாய் வந்து மாமா என்றென் கைப் பிடிக்கிறாய். மழலை உனக்கு பயம் கலந்த பரவசம் ஆசை இருந்தும் அச்சம். உன் விளையாட்டுக்கு அந்த வண்ணத்துப்பூச்சியை துரத்துகிறேன். அதோ...…

எலக்ட்ரான் எமன்

கி. சீராளன். ரெண்டுபட்டு நின்றது உலகம் பாயத் தயாராய் படைகள் மூன்றாம் உலகப்போருக்கு முன்னோட்டம் தொடங்கிவிட்டது. உயிர்களெல்லாம் குப்பை காகிதங்களாய் உருக்குலையப் போகிறது. 'இறைவா, மனித குலத்தைக் காப்பாற்று ' மண்டியிட்டு நின்றேன். 'நான்…

கவிதைகள்

பாஷா காத்திருக்கிறேன் உன் தங்கைகளுக்காகவும் சொப்பனத்திற்கு பிந்திய பின்னிரவுகளில் உன் உறவுகளை நினைத்து என் நெஞ்சில் நீ வடிக்கபோகும் கண்ணீருக்காகவும் என் காதலை என் நெஞ்சில் சமாதிவைத்து மலர்கொத்தும் வைத்துவிட்டேன்! ஒருவருக்கொருவர் உடன்வர முடியாத…

மல மேல இருக்கும் சாத்தா.

ருத்ரா விக்கிலிங்கபுரத்திலெ இருந்து அம்பாந்தரத்துக்கு வந்துட்டா அங்ஙனெ இருந்து ஊர்க்காடு செல்லும் பாதேல தாம்ப்ரபரணிக் கரைக்கு வல்லாட்டு போட்டாப்ல கெடக்கும் சாலெ அது. பக்கத்துல மல மேல இருக்கும் சாத்தா பளிங்கு பாய் விரிச்சாப்ல…

கவிதைகள்…

பட்டுக்கோட்டை தமிழ்மதி (சிங்கப்பூர்) 1.கப்பல்... கப்பல்... அவன் சின்னஞ்சிறியவன் என்னுயிர் சேர்ந்தவன். நான் பூவரைந்து காட்டினால் பூவாய் மலர்ந்து புன்னகைப்பான். காளையை வரைந்தால் முட்டு என்று ஓடுவான். குருவியைத்தான் வரைய நினைத்தேன். அவன் கப்பல்…

அச்சம்

அருண்பிரசாத் சாரல்புகை படிந்த குன்றின் மேல் நீர் சொட்டும் கொடிகளின் ஸ்பரிசங்கள். நெகிழ்ந்து கசிகிறது மண் ஊடுருவும் வேர்களுக்கு மடியை விரித்தபடி. மெலிதாய் அச்சம் தருபவை பெருங்கற்கள் என்றேனும் சிற்பங்களாய் உறைந்துவிடலாம். ---- everminnal@yahoo.com

சிகரெட் நண்பன்

நாகூர் ரூமி ==== உதடுகளுக்கு மத்தியில் உட்கார்ந்திருந்தாலும் எப்போதும் உதட்டளவு உறவல்ல உயிர்வரை செல்லும் உன்னத நட்பு இது. உயிர்வரை என்ன உயிரே செல்லும் என்கின்றனர் உறவினர் சிலர். உண்மைதான் -- ஒருநாள் உதடுகளால்…