சுஜாதா சோமசுந்தரம் பத்துமாத இருட்டறை உலகம் பலவித எண்ணங்கள் எனக்கு அல்ல.... தன் உதிரத்தால் உருக் கொடுத்து உயிரையே பணயமாக வைத்து உயிர் கொடுத்த உன்னதமான தெய்வத்திற்கு.... பத்துமாதம் உனக்குள் எந்தன் வளர்ச்சி இதமான…
ஈழநாதன் என்றோ நடந்து மறந்து போனாலும் இன்றும் வீசிக்கொண்டிருக்கும் இரத்த நெடில்! குண்டும் குழியுமான குண்டு வீச்சின் நினைவுச்சின்னங்களின் மேல் விரையும் நாட்கள்! இயற்கை உபாதைக்கென ஒதுங்க கஷ்டமின்றி நகரத்தின் மத்தியிலே தலைகாட்டும் இடிபாடுகள்!…
பட்டுக்கோட்டை தமிழ்மதி சாளர ஒரம் அமர்ந்தேன். சட்டத்துக்குள் ஓவியம் இருகண்ணில் ஒருவானம். கிளைமறை சூரியன். இலைமறை காய். சலிக்கும் மாமரச்சல்லடை தரைமீது ஒளியும் நிழலும் உதிரக் குலுங்கும் கிளைகளில் கொத்துக்காய்கள். ஓவியமாய் இருந்தமரம் ஒருகற்றில்…
ஜீவன் 5. தோற்றத்தில் தொடங்கியது உன்மீதான என் காதல் இன்றளவும் வளர்ந்து பெரு விருட்சமாகிறது உன்னிடத்தில் சிறு சலனமேனும் எற்படுத்தாது தோற்றுப் போனவனாகிறேன் நான் நிதானித்து மறுநாள் நீ சொன்னதை சொல்கிறது சூன்ய வெளி…
சத்தி சக்திதாசன் சொல்லத் தெரியவில்லை சொல்லியும் தெரிவதில்லை சொந்தங்களின் நினைவுகளை சோதனை என்றும் தள்ள முடியவில்லை மண்ணுக்கும் விண்ணுக்கும் மனதால் ஒரு பாலம் கட்டி மந்திரவாசல் தன்னை திறந்து மயங்கும் நினைவுகளை ஏனொ மறக்கும்…
பட்டுக்கோட்டை தமிழ்மதி “எதற்கிந்த மல்லுக்கட்டல் ? எதற்கிந்தப் போராட்டம் ?” * கல்லைப் புரட்டி கல்லாகிப் போனவர்களே.... உங்களுக்கு நெம்புகோல் தத்துவம் தெரியுமா ? கல்புரட்டும் கம்பிக்கு சிறுகல்லால் முட்டுக்கொடுக்கும் உத்தி புதியுள்ளவனின் புரட்டு…
நாகூர் ரூமி அப்பாவுக்கு ரொம்ப வருத்தம் அவரைப்போல நானில்லை என அம்மாவுக்கும் ரொம்ப வருத்தம் அவளைப்போல நானில்லை என இப்படியெல்லாம் வருத்தப்பட வேறெவரும் வரமாட்டார் என்றாலும் எனக்குண்டு எப்போதும் சந்தோஷம் என்னைப்போலவே நானிருப்பதில். ----
தமிழவன் நேற்று அறைக்குள் நுழைகையில் எதிர்பாராத விதமாய் மண்டைஓடு கொண்டுவந்தார் நண்பர். கவிதை எழுதும் காலமல்ல இது என்றார். தனக்கு அடிக்கடி குனிந்து காலணிக்கு லேசு கட்டுபவர்களைப் பிடிக்காது சளிகட்டாமல் இருமுபவர்களையும் சேர்த்து என்றார்.…
தீபம் கோபி இதயங்கள் இணையும் முன்பே உடல்கள் உரசியதால் உயிர்தோன்றிய சிசுவுக்கு.... கருவோடு கல்லறை...! ---- dewwinds@yahoo.com
பனசை நடராஜன் நீ குடிப்பதில்லை, புகைப்பதில்லை, 'வேறெதுவுமா ' இல்லையென்று கண்சிமிட்டி நண்பன் கேட்டான்! சற்றுத் மெளனித்தாலும் அவனாகவே தவறாக அர்த்தம் கொண்டுவிடுவானென்று அவசரமாய் 'இல்லை 'யென்றேன், 'வேடம் போடாதே..பொய்யனே! ' என்று விருட்டென்று…