திண்ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிக்கை

Current Issue: 20110529_Issue

Browsing Category

கவிதைகள்

கவிதைகள்

இல்லற ஆறு

பனசை நடராஜன் ஏதாவதொரு சந்தர்ப்பத்தில் தானாக இறங்குகிறோம்.. அல்லது தள்ளி விடப்படுகிறோம்..! வாழ்க்கைத் துணையோடு நீந்தத் தொடங்குகையில்தான் பயணத்தின் பரிமாணம் பயமுறுத்துகிறது..! கவலைகளும் துன்பங்களும் முதலைகளாய் வாய்பிளக்கும்.., சோதனைகள் அவ்வபோது சுழல்களாகி உள்ளிழுக்கும்..! எதிர்பாரா…

பெரியபுராணம்-51 – திருநாவுக்கரசர் புராணம் தொடர்ச்சி

பா. சத்தியமோகன் 1359. ஆளுடைய அரசு உரைத்ததைச் செய்வதற்கு வந்த அமைச்சர்கள் கொண்டு செல்ல அவரது அடி வணங்கி வேண்டினர் காளைக்கொடி உயர்த்திய சிவனாரின் திருத்தொண்டரோ “இங்கு வரும் வினைகளுக்கு எம்பிரான் துணையாக உள்ளான்”…

காயமே மெய்

பிச்சினிக்காடு இளங்கோ (சிங்கப்பூர்) காயங்களின் காலமே வாழ்க்கை காயங்களுக்குள்ளும் புறமும் காயங்கள் காயங்களுக்குக் காயங்களே ஆடைகள் எல்லா ஆடைகளும் காயத்தையே மறைக்கும் வலியை அல்ல வலியின் சுவடுகள் காயங்களாகவும் மாயங்களாகவும் காயங்களில் ---- pichinikkaduelango@yahoo.com

சுப்ரபாரதிமணியன் கவிதைகள்

சுப்ரபாரதிமணியன் 1. புறாக்கள் இந்தபக்கம் பறந்து ரொம்ப நாட்களாகிவிட்டன. காக்கை கூட தென்படுவதில்லை கழுதை என்பது ஒரு பிராணியா. மகள் கேட்டாள். வீட்டிற்கு செல்வது துயரமானது வெளியில் அலைந்து திரிவது இன்னமும். அடையாளம் காணமுடியாதபடி…

செய்தி

பவளமணி பிரகாசம் அதிசயமோ அருமையான தத்துவமோ அரிதாக இடறியது போல் சிக்கியதோ காலையிலே படித்த கதையிது கேளீர் சிந்திக்க வைத்ததே கதையின் செய்தி வனத்தின் பச்சைமரக்கிளையொன்றிலே விடிந்த பொழுதை கொண்டாடவென்றோ குருவியொன்று குரலெடுத்துப் பாடியதே…

பெரியபுராணம்- 50 – (திருநாவுக்கரசு நாயனார் புராணம் தொடர்ச்சி)

பா.சத்தியமோகன் 1328. வந்தணைந்து திலகவதியார் திருவடி மேலுற வணங்கினார் நம் குலம் செய்த நல்தவத்தின் பயன் போன்றவரே இந்த உடல் கொடிய சூலை நோய் அடையப்பெற்று வருந்துகிறேன் இனி மயங்காமல் உய்ந்து கரையேறும் நெறி…

மெய்வருகை…

பிச்சினிக்காடு இளங்கோ (சிங்கப்பூர்) எல்லா முக்கிய இடங்களிலெல்லாம் பார்க்கிறேன்...முன்வரிசையில் எல்லா முக்கிய தருணங்களிலெல்லாம் பார்க்கிறேன்...முக்கியமானவர்களுடன் எல்லா நிகழ்வுகளிலும் நிகழ்கிறது இந்த நிகழ்வு...வெளிப்படையாய் ஆனால், ஒரு நிகழ்விற்குக்கூட உணர்வோடு வராததை உணர்ந்துவைத்திருக்கிறேன் இரகசியமாய் ---- pichinikkaduelango@yahoo.com

கடலின் அகதி

டான்கபூர் உப்புத்திகளாய் ஆக்கிய உப்பு நீர். துறையில் ஒரு வீடு ஒரு நாள். முனையில் ஒரு வீடு ஓரு நாள். உள்ளுரில் உடன் பிறந்தோர் வீடு ஒரு நாள். இன்றைக்கு, ஊருக்குள் காளான் கொட்டில்களில்...…

கரை புரண்ட காவிரியே எம் கண்கள் கலங்கியது….

கோவிந்த் - கோச்சா ---- ஆடியிலே பெருக்கெடுத்து ஆடி வரும் காவேரி... என்று பாடல் எங்கிருந்தோ மிதந்து வந்தாலும்.... நெஞ்சினில் தொட்டது- அம்மா மண்டபத்தையும் கரையோர படித்துறையையும்- தொட்டு தொட்டு விளையாடும் சின்னஞ் சிறு…

கீதாஞ்சலி (34) – என்னைப் பின்தொடரும் நிழல்! ( மூலம்: கவியோகி இரவீந்திரநாத் தாகூர் )

தமிழாக்கம்: சி. ஜெயபாரதன், கனடா தன்னந் தனியான என் பாதையில் வந்து நிற்கிறேன், எந்தன் காதலியைச் சந்தித்த பின்பு! யாரிவன், மெளனக் காரிருள் மேவிய நேரத்தில் என் பின்னே என்னைத் தொடர்ந்து வருவது ?…