காயமே மெய்
பிச்சினிக்காடு இளங்கோ

(சிங்கப்பூர்)
காயங்களின் காலமே
வாழ்க்கை
காயங்களுக்குள்ளும்
புறமும்
காயங்கள்
காயங்களுக்குக்
காயங்களே ஆடைகள்
எல்லா ஆடைகளும்
காயத்தையே மறைக்கும்
வலியை அல்ல
வலியின் சுவடுகள்
காயங்களாகவும்
மாயங்களாகவும்
காயங்களில்
—-
pichinikkaduelango@yahoo.com