திண்ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிக்கை

Current Issue: 20110529_Issue

Browsing Category

கவிதைகள்

கவிதைகள்

காலகால மிச்சம் அங்கு ஒலித்த மொழி அவனது அல்ல அவளதுமல்ல முன் பின் முரனென சாத்தியமானதொரு வாசிப்பின் அனுபவங்களைச் சுமந்து கடந்தது காலம் ஒரு மெல்லிய வெளிச்சம் இறந்து கொண்டும் பிறந்து கொண்டும் இருந்தது…

பெரியபுராணம் – 68 – 32. திருநீலநக்க நாயனார் புராணம்

பா.சத்தியமோகன் 1826. பூத்த தாமரையின் கொட்டையின் மீது கயல்மீன்கள் துள்ளுகின்ற வனப்பும் முதிர்ந்த செந்நெல் பயிர்களால் ஆன காடு சூழ்ந்த வனப்பும் காவிரி பாயும் சோழநாட்டில் கொண்டது சாத்தமங்கை என்றும் உலகெலாம் புகழும் மங்கலங்கள்…

எழுத்து, கவிஞர், படைப்பு – கவிஞர் குஞ்ஞுன்னி நோக்கில்…

தேவமைந்தன் (மொழியாக்கம்) எழுத்து என்பது எழுதப் பெறுவது மட்டுமே அன்று - சோராது எழுச்சி தருவதே எழுத்து. வலிமை என்பது பேசுவதில் இல்லை; சொற்களை அடக்கி ஆள்வதில்தான் உயிர்த்திடும் வலிமை. எந்தவொரு சொல்லின் எல்லையும்…

ஒற்றித் தேய்ந்த விரல்

மு.பழனியப்பன் கைகளின் விரல்கள் தேய்ந்துவிட்டன சுடுமணலில் அரிச்சுவடி வரைந்து ஆங்கில எழுத்து புளியங்கொட்டையில் நிறுத்தி பால்கணக்கு எழுதி விரல் விட்டு கணக்கு அறிந்து எழுதி அழித்து எழுதி கை நாட்டு பத்திரத்தில் வைத்து நாதொட்டு…

இடம்

பாஷா எனது இருப்புக்கான எதுவும் அங்கில்லை அவை ஒரு சூறாவளியிலொ அல்லது அரசாங்க ஆணையாலொ இடம் பெயர்ந்திருக்கலாம்! உழைத்து களைக்கவும் களைத்து துயிலவும் அழைத்து உபசரிக்கவும் அமைந்த விலாசமற்றுமன்று அது உணர்வுகள் உறையும் கூடு!…

ஒரு வசந்தத்தின் இறப்பு

சாரங்கா தயாநந்தன் காலப்பெண் வரைகிற ஓவியத்தில் கருநிறத் தீற்றலுக்கான பொழுது முகிழ்க்கிறது. பூவசந்தத் தேன் காற்று விடைபெற்றுப் போயாயிற்று. வருடும் இளந் தென்றலில் ஏறியமர்ந்து அழுத்துகிறது கொடுங்குளிர். கோபமுறும் காற்று சொடுக்கும் சாட்டையில் கம்பளி…

கீதாஞ்சலி (52) எங்கிருந்து வந்ததோ ? ( மூலம்: கவியோகி இரவீந்திரநாத் தாகூர் )

தமிழாக்கம்: சி. ஜெயபாரதன், கனடா குழந்தை விழிகள் மீது தழுவிப் படியும் தூக்கம் எங்கிருந்து வந்தது ? எவராவது அறிவரோ ? எவ்விடத்தில் அது தங்கி யிருக்கு தென்றோர் வதந்தி உள்ளது! மின்மினிப் பூச்சிகள்…

லிஃப்ட்

வைகைச் செல்வி அடுக்கு மாடிகளில் சொர்க்கத்தைத் தவிர எல்லா மாடிக்கும் ஏற்றிச் செல்லும் ஏழை-பணக்காரன் என்றேதும் பாராமல் கூப்பிட்ட குரலுக்குச் சேவகனாய் ஓடிவரும் ஒற்றைப் பனைமரமாய் அதிகாரிகள் பேச்சுகள்...கோப்புகள் மற்றும்.. . .பணியாளர். காரியம்…

யார் அனாதை

கவிஞர் புகாரி யாருமற்றுப் போனாயோ கண்ணே ஏக்கவிழி அலைந்தாயோ வேரொழிந்த பூங்கொடியோ கண்ணே விரலெறிந்த நகச்சிமிழோ யாருந்தான் அடிக்கலியே கண்ணே ஏனழுது நிற்கின்றாய் யாருந்தான் அடிக்கலியே கண்ணே அதற்கழுதோ நிற்கின்றாய் தெருவோரம் கிடந்தாலும் கண்ணே…

பெரியபுராணம் – 67 – அப்பூதி அடிகள் நாயனார் புராணம் தொடர்ச்சி

பா.சத்தியமோகன் 1808. அழிக்கும் நஞ்சானது முறையே தலைக் கொண்ட ஏழாம் வேகத்தை அடைந்தது அது புறத்திலும் தெரியும்படி- பற்களும் கண்களும் மேனியும் கருகித் தீய்ந்து விரிவாகப் பேசும் சொற்கள் குழறி உயிர் விடும் நிலை…