திண்ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிக்கை

Current Issue: 20110529_Issue

Browsing Category

கவிதைகள்

கவிதைகள்

எங்கள் தாய் !

சி. ஜெயபாரதன், கனடா இல்லத்தில் அம்மா ராணிதான் ! ஆயினும் எல்லோருக்கும் அவள் அடிமை ! வீட்டில் அத்தனை பேரும் ராஜா ! நித்தமும் பின்தூங்கி முன்னெழுவாள் அன்னை ! பித்துப் பிடிக்காத பேதை…

திருப்பூர் ம. அருணாதேவியின் கவிதைகள்

திருப்பூர் ம. அருணாதேவி 1. புத்தனே தியானம் போதும் எழுந்திரு. யசோதராவின் கனவுகளில் வந்து போகும் ஆண்களை விரட்ட வேண்டாமா. யசோதராவுக்கு கனவுகள் அபூர்வம். ஆனால் சமீபமாய் வரும் கனவுகளில் ஆண்கள் வந்து போகிறார்கள்.…

இறந்தது யார்?

இமாம்.கவுஸ் மொய்தீன் தந்தையின் சாவு! உறவினர் நண்பர்கள் அதிகாரிகள் அக்கம்பக்கத்தவரென கூட்டமயம். 'பாவம்! இப்பத்தான் படிப்பை முடித்தான் அதற்குள் இப்படி ஆகிவிட்டதே? இனி அம்மா தம்பி தங்கையர் கல்வி கல்யாணம் காட்சி எல்லாமே இவன்…

வாசம்

ஆர். ஈசுவரன்வாசம் பூப்பறிக்கையில் நாள் முழுவதும் கையில் ஒட்டிக்கொண்டிருக்கும் பூவின் வாசம்போல் என் விழி பாரிட்தாயே அதில் தெரிகிறதா உனக்கான என் வாசம் ஆர். ஈசுவரன் வெள்ளக்கோவில் quill@tachyon.in

“ நிற்பவர்கள்”

கே.பாலமுருகன் கே.பாலமுருகன் நிற்பவர்கள் நிதானித்துக் கொண்டிருக்கிறார்கள்! காலம் காலமாக நிற்பவர்கள் ஓய்ந்ததாகத் தெரியவில்லை! பேருந்து நிலையம் பேரங்காடியோரம் கடைவரிசையின் தூண்களில் சாலை முச்சந்தியின் விளிம்பில். . . நிற்பவர்கள் எதையோ நுணுக்கமாகப் பார்க்க முற்படுகின்றனர்!…

காதல் நாற்பது -42 என் எதிர்காலத்தை எழுது !

தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா"சென்ற காலத்தைப் பிரதி எடுக்காது என் எதிர்காலம்," என்றொரு சமயம் எழுதினேன் ! என்னருகில் அமர்ந்து வழிநடத்தும் வாழ்க்கைத் தேவதை முகக்கனிவுடன் நோக்கி அந்த தகவலை நியாயப் படுத்தும்…

ஈகைத் திருநாள்!

இமாம்.கவுஸ் மொய்தீன் ஈகைத் திருநாள் வாழ்த்துக்கள்! கூறிடுமின்பத் திருநாளில் உள்ளத்தின் குதூகலம் ஒருபுறத்தில் இருந்துமோர் வருத்தம் உள்மனத்தில் ஒருமாத காலம் நோன்பு நோற்று உறவினரை நண்பரை வீட்டுக்கழைத்து ஒன்றாயமர்ந்துண்டு நோன்பு திறந்து ஐவேளை தொழுகை…

சவம் நிரம்பியபுத்தகபைகள்

தீபச்செல்வன்பள்ளிக்கூட மாணவர்கள் வெள்ளை சீருடைகளை அணிந்து நண்பர்களை நிரப்பிய சவப் பெட்டியுடன் மயானங்களை நோக்கி போய்க் கொண்டிருந்தார்கள் புத்தகங்களை சோதனைச்சாவடியில் விரித்தும் முகாங்களில் ஒதுக்கியும் சீருடைகளை முட்கம்பிசுருள்களில் உலரவிட்டும் பள்ளிக்கூடங்கள் இராணுவ முகாம்கள் என்று…

எங்கள் தேசப்பிதாவே

புதியமாதவிஎங்கள் தேசப்பிதாவைக் காணவில்லை கண்டுபிடித்துக் கொடுப்பவருக்கு மும்பை மாநகரை முழுசா கொடுக்கிறொம் எங்கள் தேசப்பிதாவை தொலைத்துவிட்டோம் குண்டு மழையில் குருதி வெள்ளத்தில் மிதக்கிறது எங்கள் சுதந்திர பூமி தண்டவாளங்களில் வெடித்துச் சிதறுகிறது அஹிம்சைத் தேவியின்…

கவிதை

தௌ·பீக்புன்னகைப்பது உனக்கு அன்றாட நிகழ்வுதான்... எனக்கோ அற்புதம், அதன் தாக்கத்திலிருந்து மீண்டு வருவது. உலகின் பொருட்கள் யாவும் வழக்கமான அர்த்தங்களுடந்தான் இருந்தன... உன் காதல் பார்வை என் மேல் விழும் வரை. என் கண்கள்…