திண்ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிக்கை

Current Issue: 20110529_Issue

Browsing Category

கவிதைகள்

கவிதைகள்

கவிதைகள்

அனுராதாஎன் நீ பிணைந்து கிடக்கிறது நம் புணர்வின் மிருகம்! வழியும் வேர்வையை துடைக்கும் நம் உடலின் வெப்பம்... ஆதாம் இல்லாத ஏதேன் தோட்டம் நோக்கிய நம் பாதையில் கலந்திருந்த நம் பெண்மைகள்.... என் பறவை…

அம்மா

வ.ஐ.ச.ஜெயபாலன்போர் நாட்களிலும் கதவடையா நம் காட்டுவழி வீட்டின் வனதேவதையே வாழிய அம்மா. உன் விரல் பற்றிக் குறு குறு நடந்து அன்றுநான் நாட்டிய விதைகள் வானளாவத் தோகை விரித்த முன்றிலில் நின்று எனை நினைத்தாயா…

அக்கினிப் பூக்கள் – 6

சி. ஜெயபாரதன், கனடாபெண்ணென்றால் பேயும் இரங்குமாம் ! மருமகளுக்குப் பிரதம எதிரி யார் ? வரதட்சணைக்கு மடி விரிப்பது யார் ? புருசன் பெட்ரோல் ஊற்ற சீதாவைத் தீக்குளிக்க செய்வது மாமியார் ஞானப் பெண்ணே…

தாகூரின் கீதங்கள் – 9 ஆத்மாவைத் தேடி !

தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடாஅறுவடை மாதங்களில் பரபரப்பாகப் புத்தொளி வீசும் வேளைகளில் புல்லிலைகள் போர்த்திய புவித் தளமும் நடுங்குகிறது ! அப்போது நான் தேடுகிறேன் என் ஆத்மாவை ! பூரிப்பில் மூழ்கிவிடும் என்…

விருது

ரஜித் இதயங்கள் புல்லரிக்க இரண்டே வரிகள் நீ எழுதியதுண்டா? உன் முதல் காதலை கவிதையாய் எழுத முன்னூறு முறை நீ தோற்ற துண்டா? பின் வென்ற துண்டா? பிறந்த மண்ணை பிரிந்து சேர்கையில் உனக்கு…

வலி தந்த மணித்துளிகள்

சாமிசுரேஸ் தொடரூந்து நிலையம் பெயர்ப்பலகை மாறுகிறது காத்திருக்கிறேன் கால்களின் கீழே சலசலத்தோடுகிறது நதி நதியின் பெருக்கைத் தின்னாமல் முக்கியங்களைத் தொலைத்து மூலைக்குள் மனிதர்கள். விடியலின் மரணத்துளிகளை விழுங்கிக்கொண்டிருக்கும் இந்த சர்ப்பங்கள் சில நொடிகளில் தூய்மையை…

கவிதைகள்

பைசால், இலங்கை புளியம்பழம் பாம்பு அல்லது விரல் பாம்புகள் வாழும் ஒரு புளியமரத்தில் உயிரற்று நீளும் பழங்கள் புளியமரத்தின் கீழ் நிற்பதற்குப் பயம் எத்தனை விரல்கள் கிளைகளில் பிடித்துவைத்திருக்கும் பொல்லு என்னையும் தூக்கி கிளையிலே…

அக்கினிப் பூக்கள் – 5

சி. ஜெயபாரதன், கனடா சிறு தவறிழைத்த பெண்ணுக்கு அறுபது சவுக்கடி ! நிரபராதி என்று வாய் திறந்தால் அறுபதடி நூறாகும் உலகமடி ஞானப் பெண்ணே ! மன்மதன் தெருவில் நடந்தால் ஜன்னலில் பார்ப்பது மங்கை…

காலை ஆட்டுடி பெண்ணே!

கீதாஷங்கர்முட்டிக்கு மேலேறிய முக்கால் சட்டையுடன் திண்ணையின் மேல் காலாட்டியவாறு குந்திய போதெல்லாம் கடிந்து கொண்ட ஆத்தாவே! "காலாட்டி காலாட்டி கடல் கடந்து போயிடுவே. காலாட்டாதடி- களவாணிச் சிறுக்கிப் பெண்ணே!" பருவம் வந்து பருவும் வந்து…

தாகூரின் கீதங்கள் – 8 உன்னோடு ஐக்கியம் !

தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா உன்னைத்தான் எப்போதும் நேசித்திருப்பதாய் இன்று நான் உணர்கிறேன் எல்லா இன்னல்களுக்கும் இடையே ! யுக யுகமாகப் பொதுக் குழுவினரோ டிணைந்து நீயும் நானும்தான் நேசர்களாய் இருந்தோம் !…