திண்ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிக்கை

Current Issue: 20110529_Issue

அரசியலும் சமூகமும்

புது திண்ணை

திண்ணை புது திண்ணையை http://puthu.thinnai.comஇல் பார்க்கவும் நன்றி

போராட்டத்திலிறங்கும் இடம்பெயர்ந்த மக்கள்

ப்ரியந்த லியனகே தமிழில் - எம்.ரிஷான் ஷெரீப், இலங்கை இன்று மே மாதம் 16ம் திகதி. நான் கொழும்பில் இருக்கிறேன். வீதி முழுதும் புத்தரின் பிறந்த நாளைக் கொண்டாடும் மகிழ்ச்சி எதிரொலிக்கிறது. எனது கைத்தொலைபேசிக்கு…

தாமரை இலையும் சின்னக்குத்தூசியும்

பாவண்ணன் எண்பதுகளின் இறுதியில் அலுவலக வேலையாக மாதத்துக்கு ஒருமுறையாவது அல்லது இரண்டுமுறையாவது கர்நாடகத்திலிருந்து சென்னைக்கு வந்துவிடுவேன். சென்னையில் எங்கள் தலைமை அலுவலகம் இருந்தது. பெரிய அளவில் கேபிள் சேமிப்புக்கிடங்கும் சென்னையில்தான் இருந்தது. நாங்கள் வேலை…

செக்ஸிஸம், பெண்ணியம் – ஓர் ஆணின் குறிப்புகள்

பி.கே. சிவகுமார்[எச்சரிக்கை: குடும்பம், வேலை சார்ந்த மும்முரங்களில் நான் ஓடிக்கொண்டிருந்தாலும், என் மீதுள்ள அன்பினால் திண்ணையில் வாராவாரம் எழுதுங்களேன் என்று தொடர்ந்து சொல்லிவந்த திண்ணை ஆசிரியர் குழுவுக்கும், அதன் பலனை அனுபவிக்கப்போகும் வாசகர்களுக்கும் என்…

அறிவிப்புகள்

காரைக்குடி கம்பன் கழகத்தின் புதுமையான முயற்சி

சேதுபதி சேதுகபிலன்காரைக்குடி கம்பன் கழகத்தின் சார்பாக சென்ற ஆண்டு முதல் மாதக் கூட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இந்த மாதக் கூட்டங்களில் கம்பன் பற்றிய ஆய்வுரைகள் பல அறிஞர்களால் வழங்கப் பெற்று வருகின்றன. மாதக் கூட்டம்…

அறிவியலும் தொழில்நுட்பமும்

ஜப்பான் புகுஷிமாவில் 2011 மார்ச் சுனாமியால் நாசமடைந்த நான்கு அணுமின் உலைகள் -1

சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா “அமெரிக்காவின் விண்வெளிக்கப்பல் “சாலஞ்சர்” எரிந்து போய் அனைத்து விண்வெளி விமானிகள் [1986 ஜனவரி 28] மாண்டதும், அடுத்துச் செர்நோபில் அணுமின் நிலையம் [1986 ஏப்ரல் 26]…

இலக்கிய கட்டுரைகள்

இவர்களது எழுத்துமுறை – 40 பி.எஸ்.ராமையா.

வே.சபாநாயகம். 1. கேள்வி (எழுத்து): முந்நூறு கதைகள் எழுதிய நீங்கள், 'சிறுகதை உருவம்' என்கிறார்களே, அதைப் பற்றித் திட்டமாகச் சொல்ல முடியுமா? பதில்: உண்மையை அப்பட்டமாகச் சொல்வதென்றால், இன்றுவரை எனக்கு சிறுகதை உருவத்தைப் பற்றி…

ராமாயணம் தொடங்கி வைத்த ஒரே கேள்வி -12

சத்யானந்தன் ஒரு மனிதனின் அடையாளம் எது? தனி மனிதன் என்பதா- சமுதாயத்தின் அங்கம் என்பதா? இந்தக் கேள்வி நம்மை அதிகார மையத்துடன் நெருங்கிய இரு சாராரிடம் அழைத்துச் செல்கிறது. ஒருவர் அதிகாரத்துக்கு மிக அருகாமையில்…

கலாமணி பரணீதரனின் “மீண்டும் துளிர்ப்போம்” – சிறுகதைகள் தொகுப்பு — நூல்விமர்சனம்

மன்னார் அமுதன் படைப்புலகில் முழுமை பெற்றவர்களும், புனைவுகளில் ஏற்பட்ட வறட்சியாலும் எவ்வாறாவது தம்மை இலக்கியப்புலத்தில் தக்க வைத்துக்கொள்ள வேண்டுமென்ற நிர்பந்தமுடையவர்களும் இலக்கிய சஞ்சிககைகளை வெளியிட்டு வரும் காலமிது. இதனால் இலக்கிய சஞ்சிகைகள் எண்ணிக்கையிலும், தரத்திலும்…

பண்பாட்டு உரையாடல்

ஹெச்.ஜி.ரசூல் தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்ற குமரிமாவட்டக் கிளையினர் நடத்திய 33வது நாவா முகாம் இலக்கியப் பண்பாட்டு உரையாடல் மே21,22 தேதிகளில் முட்டம் கடற்கரைரிட்ரீட் மையத்தில் நடைபெற்றது. முதல்நாள் துவக்கவிழா அமர்வு முனைவர் சிறீகுமார்…

கதைகள்

ஏழ்மைக் காப்பணிச் சேவகி (Major Barbara) மூவங்க நாடகம் (முதல் அங்கம்) அங்கம் -1 பாகம் – 2

ஆங்கில மூலம் : ஜார்ஜ் பெர்னாட் ஷா தமிழாக்கத் தழுவல் : சி. ஜெயபாரதன், கனடா "ஊழியம், உணவு, தங்குமிடம், உடுப்பு இவைதான் மனிதத் தேவைகள் - பைபிள் இல்லை." ஜார்ஜ் பெர்னாட் ஷா…

சில மனிதர்கள்…

மிடில் கிளாஸ் மாதவி லலிதா, அலுப்போடு கைப்பையை தூக்கி மேஜையில் போட்டு, "உஸ், அப்பாடா, என்ன வெயில்" எனச் சொன்னவாறு சேரில் அமர்ந்தாள். பக்கத்து இருக்கையிலிருந்து கல்பனா, "என்ன, போன வேலையெல்லாம் முடிச்சாச்சா?" எனக்…

ஈர வலி

குமரி எஸ். நீலகண்டன் கண்களில் உணர்ச்சி கொப்பளிக்க விறுவிறுவென்று வேகமாக நடந்தான் விச்சு. முகம் கண்ணீரில் குளித்திருந்தது. பூ பறிக்கும்போது கையில் குத்திய முள் காயம் பழுத்து அதில் சீழ் வடிந்தது. மனதை அரித்து…

ஒரு கொத்துப் புல்

வைதீஸ்வரன் பூமியிலிருந்து சுமார் 12500 அடி உயரத்தில் யாத்ரீகர்களுக்காக நவீன வசதிகளுடன் அமைக்கப் பட்டிருந்த சிற்றுண்டி சாலையில் நான் சாப்பிட்டுக் கொண்டிருந்தேன். என்னுடன் என் மனைவியும் மகளும் சாப்பிட்டுக் கொண்டிருந்தார்கள்...... கேதார்நாத்தின் உச்சிக்கு வந்தடைய…

கவிதைகள்

பம்பரம்

ரவிஉதயன்மிருதுவாக்கிய அடி நுனி ஆணியை நடுநாக்கில் தொட்டெடுத்து சொடுக்கிச் சுழற்ற தரையில் மிதக்கிறது வண்ணக் குமிழி. சாட்டைக் கையிற்றில் எத்திஎடுத்து உள்ளங்கையில் விடுகிறான். அட்சய ரேகையிலிருந்து இடம் மாறி சிறுவனது ஆயுள்ரேகையின் மீது பயணிக்கிறது…

மீன்பிடி கொக்குகள்..

இளங்கோ வார்த்தைகளின் வேலிப் படலைத் திறந்து வைத்திருக்கிறேன் என் மனவெளியை சூறையாடிக் கொள் நேற்றிரவு உரையாடலின் குளம் இன்னும் தளும்பிக் கொண்டிருக்கிறது அதில் உன் மௌனக் கொக்கு ஒற்றைக் காலில் நி ற் கி…

வழங்கப்பட்டிருக்கின்றதா?

வளத்தூர் தி. ராஜேஷ் எதற்கென்றும் நீயும் சரிபார்த்துக்கொள் தன் பழியின் தீவிரம் முன்னோர்கள் மீது சுமத்த உனக்கும் வாய்ப்பு வழங்கப்பட்டிருக்கின்றதா? என்று . உங்களின் நிர்பந்தங்களை காட்டிலும் வழக்கம் போல மற்றவர்களை பின்பற்றுதல் தொன்மை…

வழக்குரை மன்றம்

லறீனா அப்துல் ஹக் 'கோவலன் கொலையுண்டான்' செய்தி வந்ததும் காற்று மௌனித்து அஞ்சலி செலுத்தியது. * * * * * * * இரவுக்கு வெள்ளையடிக்க நிலவு பொழிந்தாலும் -தேச இருட்டுக்கு அஞ்சி…