உயிரோடு நீ
செண்பக ஜெகதீசன்
இந்த உலகில்
இருப்பவரில் பலர்
எப்போதோ செத்துவிட்டவர்கள்..
அழுவதற்கு
ஆள்தேடி அலைந்து
வாழ்க்கை என்ற பெயரில்
வலம் வந்துகொண்டிருப்பவர்கள் !
உழைக்கும் தோழனே
உன்வழியே செல்,
எதிரில்வரும் பிணங்களால்
எந்தப் பாதிப்பும்
வந்துவிடாது..
நடந்துசெல் மேலே..
நல்ல சகுனம்தான் !
செண்பக ஜெகதீசன்