ஆஞ்சனேயர்..

This entry is part [part not set] of 29 in the series 20020722_Issue

கவியோகி வேதம்


தாசனுக்கும் தாசன்நம்ம ஆஞ்ச னேயரு!-ராமனெத்
..தஞ்சமடெஞ்ச பேருக்கெல்லாம் அவரு தொண்டரு!
தாசரதி ராமனையே மார்பில் கொண்டாரு!-அவரநாம
…சரணடஞ்சா துன்பமெல்லாம் போக்கிடு வாரு!

சின்னவயசிலெ சூரியனெப் பழமா நெனச்சாரு!-ஒடனெ
..சிட்டுக்குருவி போலவானில் தாவிப் போனாரு!
கன்னஞ்செவந்து மண்லவிழுந்து துடிச்ச ழுதாரு!-கொழந்தெ
..க ?டத்தபார்த்து தேவரெல்லாம் வரங்கள் தந்தாரு!

ஆஞ்சனேயர்தான் ராமனெயே முதலில் பார்த்தாரு!-சுக்ரீவ(னி)ன்
..அல்லல்போக்க iவர்தான்சரின்னு முடிவு செஞ்சாரு!
பாஞ்சுவந்து ராமர்மொழியிலே பேசிச் செயிச்சாரு!-அன்னிக்குப்
..பார்த்ததுமொதல் iன்றுவரெஅவர் ராம தாசரு!

‘சீதா ‘தேவியோட சேர்த்துவெப்பது என்பொறுப் புன்னாரு!-பதிலுக்குச்
…செய்கைத்துரோக வாலியைநீங்க எதிர்க்கணும் னாரு!
பாதாளம்வரெக்கும் ராமர்-அம்பு போய்ெfயிக்கும்முன்னு-ரொம்பப்
…பயந்த ‘ராfா ‘ சுக்ரீவனுக்குத் தைர்யம்சொன் னாரு!

ஆஞ்சனயரில்லேன்னா ‘சுக்ரீவன் ‘ராஜ்யம் அடஞ்சிருப் பானா ?-அட!
…அந்தநன்றியெ மறந்துப்புட்டு ( ‘அப்படி ‘) குடிச்சழி வானா ?
ஓஞ்சுபோன லச்சுமணனுக்கும் கோபம் எழுந்ததே!-தெரிஞ்சு
…ஓடினநம்ம -அனுமார்தூதால் சாந்தம் வந்ததே!

தன்னோட ‘பலம் ‘ தெரிஞ்சிருந்தும் அடங்கிநின் னாரே!-கடலெத்
…தாண்டநம்ம ஆஞ்சனேயரத்தான் தேர்ந்தெடுத் தாரே!
துன்பமெல்லாம் எதிர்த்து ‘சீதை ‘யெக் கண்டுவிட்டாரே!-அம்மையின்
…சோகத்தைநீக்க ‘கணையாழியெக் ‘ கொடுத்துநின் னாரே!

புயலுக்குமுன்னால் பேய்க்காத்து மிரட்டுதல் போலே,-வாலில்
..புடிச்சதீயால அரக்கரையெல்லாம் மிரட்டிநின் னாரே!
தயவுடன்போய் ‘கண்டேன்சீதெயெ ‘ என்றுசொன் னாரே!-ஓ!-ராமர்
…தழுவிக்கொண்ட காட்சியெநீங்க பார்க்கவில் லையே!

ராமராவண யுத்தத்திலும்என் நாயகர் தீரம்,-படிச்சாகண்ணு
…ரப்பை ‘யெல்லாம் நனஞ்சுவழிஞ்சு பொங்குதே ஈரம்!
ராமரிடமே மாயைசெய்து iந்திர சித்தன்,-லச்சுமணனை
…ரணகளத்தில் மயங்கவைத்தே ஓடிவிட் டானே!

அனுமாரிலேன்னா ‘சஞ்சீவி ‘மலெ iஇறங்கியி ருக்குமா ?-அட!
…அங்கமயங்கின உடலுக்குயிரும் வந்தி ருக்குமா ?
அனுமார்தானெ பறந்துபோயி சேதிசொன் னாரு ?-பரதன்
…அப்புறம்தானெ ‘தீக்குளிக்கறதெ ‘ நிறுத்திமகிழ்ந் தாரு!

ராம- ‘அரியணைய ‘ மட்டும்தானா தாங்கிநின் னாரு ?-ஆஞ்சனேயர்
.. ‘ரட்சிக்கணும்னு ‘ கேட்ட-நம்மையும் தாங்குகின் றாரு!
ராம-நாமம் சொர்க்கத்லயாரும் சொல்வதில் லையாம்! -அதுனால
… ‘ராம-ராமன்னு ‘ ஜபித்து-மண்ணுல நின்னுப்புட் டாரு!

வைரம்போல ஒளியைவீசும் அனுமார் மந்திரம்!-நீங்க
…வரங்களெல்லாம் அடையணுமா ? அதுவே தந்திரம்!
தைரியமா கஷ்டங்களெ எதிர்த்து வெல்லவே-ஐயா!
…சத்தியமா சொன்னேன் இது ‘வேதத் ‘தின் வரம்!
***
kaviyogivedham@yahoo.com

Series Navigation

கவியோகி வேதம்

கவியோகி வேதம்