விதுரநீதி விளக்கங்கள் – 3 மூன்றாம் (3) பகுதி:

This entry is part [part not set] of 39 in the series 20110123_Issue

சேஷாத்ரி ராஜகோபாலன்


மூன்றாம் (3) பகுதி:
விதுரர் இனி கூறும் நல்லுரைகள்:

ஏமாற்றும் திறனுடன், சூழ்ச்சி செய்து, தன் சுய நலத்திற்காகச் செய்த காரியங்களைச் செய்தவன், சடுதியில் கெட்ட விளைவுகளை சந்திக்க நேரிடும். மனசாட்சி இருப்பவன் இப்படிச் செய்ய மாட்டான். தன் செயலால் மக்களுக்குச் சேர வேண்டிய நன்மைகளைக் கூடத் தடுத்து நிறுத்தி, அதனால், தன் / தங்களைச் சேர்ந்தவர்கள் (சுய) நலத்தையே மனதில் கொண்டு, இதிலும் பொருளீட்டினால், இது அரசியலில் ஆனாலும் சரி, வாழ்க்கையில் ஆனாலும் சரி, என்றானாலும், எங்கானாலும், இக் கொடுமையை இழைத்தவருக்கே ஆபத்தில் விளையும். இந்த செய்யுள், 2G spectrum கழக ஆண்டிமுத்து ராசாவையும், இவரைச் சேர்ந்தோரைக் குறித்தே தான் எழுதப்பட்டது போலத் தெரிகிறது!!.

मिथ्योपेतानि कर्माणि, सिध्येयु: यानि भारत |
अनुपायप्रयुक्तानि, मास्म तेषु मन: कृथा: ||

மித்²யோபேதாநி கர்மாணி , ஸித்⁴யேயு: யாநி பா⁴ரத |
அநுபாயப்ரயுக்தாநி , மாஸ்ம தேஷு மந: க்ரு«தா²: ||

எந்த தீய காரியங்களுக்கும் பலன் உடனேயோ அல்லது கூடிய சீக்கிரமே கிடைத்துவிடும். இது மாத்திரம் நிச்சயம். அது காரியத்தின் கொள்ளளவைப் பொறுத்தது (dimension). இது தண்ணிரில் விடும் காற்று போன்றது. (AQUA swimming with breathing equipments). அதது மேற்பரப்பை எட்டுவதற்கு தண்ணீரின் ஆழத்தைப் பொறுத்தது. ஆனால் தண்ணிரில் விடும் காற்று எச்சமயத்திலும் தண்ணீரின் மேல் மட்டத்தில் வந்து தானே ஆக வேண்டும்.

இனி, ஒவ்வொரு (அரசனின்) நிர்வாகியின் பதவி காலம் அனேக காரணங்களை யொட்டியது. இதை நமக்கு அருமையாக விதுரர் எடுத்துரைக்கிறார்.

य: प्रमाणं न जानाति , स्थाने वृध्दौ तथा क्षये |
कोशे जनपदे दण्डे, न स राज्ये अवतिष्टते ||

ய: ப்ரமாணம்° ந ஜாநாதி , ஸ்தா²நே வ்ரு«த்⁴தௌ³ ததா² க்ஷயே |
கோஸே² ஜநபதே³ த³ண்டே³, ந ஸ ராஜ்யே அவதிஷ்டதே ||

நிர்வாகிக்கு கீழ்க்கண்டவைகளைப் (ஐந்து) பற்றி நன்கு தெரிந்திருக்க வேண்டும்.
• தனது செயல் திறனைப் பற்றித் தெரிந்திருக்க வேண்டும். (worth & capacity)
• தனது காரியத்திலுள்ள நுணுக்கங்ககளை (உள்ளும் புறமும்) அறிந்திருக்க வேண்டும் (territory, techniques inside out, i.e., All connected details).
• தனது நிதி நிலையைப் பற்றித் தெரிந்திருக்கவேண்டும். (Funds availability)
• தனது இயக்கும்-கட்டுப்படுத்தும் சக்தி (அரசனுக்குப் படை) பற்றியும் தெரிந்திருக்க வேண்டும் (Army, other Instruments for control, Planning and Control)
• தனது முன்னேறம், அழிவு, தோல்வி ஏற்படும் சாத்தியக் கூறு (point of success and defeat)
यस्त्वेतानि प्रमाणानि, यथोक्तान्यनुपश्यति |
युक्तो धर्मार्थयो:ज्ञाने, स राज्यं अधिजच्छति ||

யஸ்த்வேதாநி ப்ரமாணாநி , ய தோ²க்தாந்யநுபஸ்²யதி |
யுக்தோ த⁴ர்மார்த²யோ: ஜ்ஞாநே , ஸ ராஜ்யம்° அதி⁴ஜச்ச²தி ||

சட்ட திட்டம், அதிலுள்ள கருத்து உண்மை, எல்லை, வேலையில் தன் தகுதி, திறமை அறிந்தவன் தன் நிர்வாகக் கடிவாளத்தை என்றும் இழக்கமாட்டான்

न राज्यं प्राप्तमित्त्येव, वर्तितव्यं असांप्रतम् |
श्रियं ह्यविनयो हन्ति, जरा रूपं इवोत्तमम् ||

ந ராஜ்யம்° ப்ராப்தமித்த்யேவ, வர்திதவ்யம்° அஸாம்°ப்ரதம் |
ஸ்²ரியம்° ஹ்யவிநயோ ஹந்தி, ஜரா ரூபம்° இவோத்தமம் ||

வெற்றி கிடைத்தவுடன் வாளா இருப்பது தவறு. அதை பலப்படுத்தி, ஒன்றாகச் சேர்த்து ஒருங்கிணைக்க வேண்டும் (consolidate). அப்படி இல்லாவிட்டால், ஒருவித கட்டுப்பாட்டிலும் வைக்காது, தான் பலசாலி எனும் கர்வமும் தலைக்கேறி விட்டால், இது பேரழிக்கு ஆரம்பமாக்கிவிடும். மக்களை மாக்கல், அல்லது மாடுகள் போலக் கருதக்கூடாது.
இதில் வரிச்சுமையும் அடக்கம். இது உள் நாட்டுக் கலகம், புரட்சியில், முடிவாக அழிவில் முடிவடையும்.
அடுத்துவரும் ஸ்லோகத்தில், மீன் உபமானத்தால், முக்கிய கருத்தை விளக்குகிறார். இது இன்று அரசியலில் கொடுக்கப்படும் கழக இனாம்கள் போன்றவைகளாகும்.

भक्ष्योत्तमप्रतिच्छन्नं, मत्स्यो बडिशमायसम् |
अन्नाभिलाषि ग्रसते, नानुबन्धमवेक्षते ||

ப⁴க்ஷ்யோத்தமப்ரதிச்ச²ந்நம்° மத்ஸ்யோ ப³டி³ஸ²மாயஸம் |
அந்நாபி⁴லாஷி க்³ரஸதே நாநுப³ந்த⁴மவேக்ஷதே ||
மீனுக்கு அவா ஊட்டுவதற்காக தூண்டிலில் இரை வைத்திருப்பதை, அறியாது, சுலபமாகக் கிடைக்கிறதே என அங்கிருக்கும் முள்ளில் வாயைக் கொடுத்து மாட்டிக்கொள்கிறது. என்ன ஆகும்!

यच्छ्क्यं ग्रासितुं ग्रास्यं ग्रस्तं परिणमेच्च् यत् |
हितं च परिणामे यत् तदाद्यं भूतिमिच्छता ||
யச்ச்²க்யம்° க்³ராஸிதும்° க்³ராஸ்யம்° க்³ரஸ்தம்° பரிணமேச்ச் யத் |
ஹிதம்° ச பரிணாமே யத் ததா³த்³யம்° பூ⁴திமிச்ச²தா ||

அஃதேபோல கிடைத்தது எதையும் உண்ணாமல், அதில் எளிதில் ஜீரணிக்க முடிந்தவைகளை மட்டுமே உட்கொள்ள வேண்டும். நமக்கு மிக வேண்டிய மற்றவர்கள் வற்புறுத்தலுக்காக உண்டுவிட்டால் (அல்லது நாக்குக்கு ருசியாக உள்ளவைகளையும்) அதற்காக பின் கஷ்டப்படவேண்டி வரும். (இதில் பொருட்களும் அடக்கம்)

वनस्पते अपक्वानि फलानि प्रचिनोति य: |
स नाप्नोति रसं बीजं चास्य विनश्यति ||
வநஸ்பதே அபக்வாநி ப²லாநி ப்ரசிநோதி ய: |
ஸ நாப்நோதி ரஸம்° பீ³ஜம்° சாஸ்ய விநஸ்²யதி ||

यस्तु पक्वमुपादत्ते काले परिणतं फलम् |
फलाद्रसं स लभते बीजाच्चैव फलं पुन: ||

யஸ்து பக்வமுபாத³த்தே காலே பரிணதம்° ப²லம் |
ப²லாத்³ரஸம்° ஸ லப⁴தே பீ³ஜாச்சைவ ப²லம்° புந: ||

காயைப் பறிக்காமல், பழமாகும் வரைக் காத்திருக்க வேண்டும். காயைப் பறித்து உண்பதால், அதில் துவர்ப்பு, புளிப்புதான் கிடைக்கும், அதிலுள்ள இன்சுவை பழமானவுடன் தான் கிடைக்கும், மேலாக, முதிர்ந்த விதையும் கிடைக்கும், இவ்விதை மற்றொரு இடத்தில் நட்டால், அது வருங்காலத்தில் இதுபோன்ற உபயோகமான அனேக மரங்களை இன்னும் உண்டாக்க முடியும். பெருக்க முடியும். இது நம் காலத்திற்கும் வருங்காலத்தில் எல்லோருக்கும் எச்சமயத்திலும் உபயோகமாக இருக்கும். இது சுற்றுப்புற சூழ் நிலையையும் சரியாக்கும். இதனால் நாட்டுக்கும் சுபிட்சமுண்டாகும்.

வரி வசூலில் அதிருப்தி உருவாக்கிவிடக் கூடாது: தேனீ பூக்களின் மீது மெல்ல உட்கார்ந்து, பூக்களை அழிக்காமல் தேனை சேகரிப்பது போல, அரசு நிர்வாகி, வரி வசூலில் இறங்க வேண்டும். வரிக் கொடுமைகளை நடத்தக் கூடாது. இது நாட்டுமக்களிடையே அதிருப்தி உண்டாக்கி நிர்வாகமே கவிழும் அபாயத்தை உருவாக்கிவிடும்.

இவனே எந்த நாட்டுக்கும் தலைவனாக (நாட்டு அரசனாக) இருக்கத்தக்கவன்:

இது ஒரு பொருள் பொதிந்த ஸ்லோகம்:

सुपुष्पित: स्यात् अफल:, फलित: स्यात् दुरारुह: |
आपक्व: पक्व सङकाश:, न तु शीर्येत कर्हिचित् ||

ஸுபுஷ்பித: ஸ்யாத் அப²ல:, ப²லித: ஸ்யாத் து³ராருஹ: |
ஆபக்வ: பக்வ ஸஙகாஸ²:, ந து ஸீ²ர்யேத கர்ஹிசித் ||

மரம் பூக்கள் நிறைந்து, பின் பூக்கள் சிறு கயாகி, சிறு காயும் முதிர்ந்து, முதிர்ந்த காய் பழுத்த நிறத்தையடைந்து, பறிக்கத் தகுதியுள்ளதாக ஆவது போல, ஒரு தலைவன் (அரசன்) இருக்க வேண்டும். பழ உபமானத்தால், தலைவன் / அரசன் எவ்வாறு செயலாற்ற வேண்டுமென விளக்குவோம்.

• பூத்தல்: மரம் பூத்திருந்தால் பார்ப்பதற்கு மட்டுமே அழகாக இருக்கும். பூவைப் பறிதால், அது நஷ்டமே! தலைவனும், பூ போல, எல்லொருக்கும் என்றும் உதவுவானென மக்கள் மனதில், உணர வைக்க வேண்டும். ஆனால், தலைவனை மக்கள் அநாவசியமாக தொந்தரவு தரலாகாது.
• பூவிலிருந்து காயாகிப் பழமாக்கப் பறித்தல்: இதற்கு, நடுவில் ஒருபோதும் தொல்லை கொடுக்கக் கூடாது. காய் முதிர ஆரம்பித்தல்: தேவைப் பட்டாலொழிய அதைக் குலைக்கக் கூடாது. முதிர்ந்து பழ நிறம் அடைதல்: (பழத்திற்காகப் பறிக்கும் நிலை): எடுத்து பழுக்கும் படி செய்ய, (அவைகளை வைக்கோலில் சுற்றி) வைத்துப் பாதுகாத்தல்;
• பழுக்க வைத்துப் பின் பழுத்த பழத்தைப் புசித்தல்: சுவைத்துப் புசிக்க வேண்டும். எல்லாவற்றிகும் உகந்தது.

அஃதே போல, மக்களும் தலைவனை அநாவசியமாக அணுகலாகாது. இதற்கு முக்கியமாக, தக்க பிரதி நிதிகளிடம் தலைவன் அதிகார ஒப்படைப்பு (proper delegation of authority) செய்ய வேண்டும். இதை ஆங்கிலத்தில் மேலாண்மையைக் (governance) குறித்து ஒரு வாக்கியம் உண்டு. – “you (the chief) can achieve much if you don’t care who takes the credit”. இதனால், பிரதிநிதிகளை நியமித்தவருக்கே அத்தனை பெருமையும் போய்ச் சேரும். பரஸ்பரம் மக்களும் அதிகாரிகளும் ஒருவருக்கொருவர், காரியங்களை முழுமையாக்க உதவவேண்டும். (கைக் கூலி கொடுத்தல் / வாங்குதலில்லாமல்!!)

मानेन रक्ष्यते धान्यं, अश्वान् रक्षेदनुक्रमात् |
अभीक्ष्णदर्शनात् गाव:, स्त्रिय: रक्षेत् कुचेलत: ||

மாநேந ரக்ஷ்யதே தா⁴ந்யம்° அஸ்²வாந் ரக்ஷேத³நுக்ரமாத் |
அபீ⁴க்ஷ்ணத³ர்ஸ²நாத் கா³வ: ஸ்த்ரிய: ரக்ஷேத் குசேலத: ||
இங்கு, உணவு தானியம், குதிரைகள், பசுக்கள், பெண்கள் அணியும் ஆடைகள், ஆகியவைகளைப் பற்றியும் விதுரர் தனது அறிவுரையைத் தருகிறார்.

• உணவு தானியங்களை நன்கு மூட்டையில் கட்டிவைத்து கொறித்தின்னும் எலி, அணில் போன்ற, சிறு பிராணிகளிடமிருந்து பாதுகாத்தும், வானிலை மாறுபாட்டுக்கு ஏற்றவாறு வைத்திருந்து, வேண்டிய போது வேண்டியவர்களுக்கு உடனுக்குடன் பாதுகாப்பாக அனுப்பி விட ஏற்பாடு செய்யவேண்டும். இன்று இந்திய அரசாங்கத்தால் சேர்த்துவைக்கப்பட்ட தானியங்கள் வெவ்வேறு கிடங்குகளில் (Food corporation of India) எவ்வாறு விரயப்படுத்தப் படுகின்றன என நாம் அடிக்கடி செய்திகளின் மூலம் அறிகிறோம். இதனால் இந்திய நாட்டில் எல்லாருக்குமே நட்டம். இப்படி உணவு தானியங்களை வீணாக்குவதால், யாருக்கும் லாபமில்லை. வீணான தானியங்களை அப்புறப்படுத்தவே, (தவிர்க்கக் கூடிய) வேண்டாத செலவு தான் அதிகமாக உண்டாகும்.
• குதிரைகளில் லாயங்களில் கட்டியே வைத்தால், வேண்டும் போது உபயோகப்படாது. தினம் அவைகளுக்குத் தக்க பயிற்சியளித்து, செயலாற்றும் திறமையுடன் சுறு சுறுப்பாக வைத்திருக்க வேண்டும். அஃதே போன்று கருவிகளையும், நல்லெண்ணங்களையும் கூறலாம்.
• பசுக்களுக்கு / கால் நடைகளுக்கு வேண்டிய தீனி அளித்து, குளிப்பாட்டி, சுகாதாரமாகப் பாதுகாப்பான சுத்தமான இடத்தில் வைத்துக் காக்க வேண்டும். இவைகள் நன்கு கவனிக்கப்பட்டால் பசுக்களால், கிடைக்கும் பால் முதலியன வேண்டுமளவு கிடைக்கும்.
• பெண்கள் அணியும் ஆடைகள், அவர்களுக்கே பிறரால் தனக்குத் தானே மரியாதை அளிப்பவையாக இருக்க வேண்டும். அவைகளில் சிற்றின்பக் கவர்ச்சியைத் தூண்டாதவாறு, இருக்க வேண்டும். நல்ல உடையணிந்தால், அவைகளாலேயே அவர்கள் காக்கப்படுவார்கள்.

[[[பெண்களுக்கேற்ற நல்ல உடையணிந்து, தலை முடியை வெட்டிவிட்டுக் கொள்ளாமல், ஆனால், அழகாகக் கட்டி முடித்து இருந்தால் அவர்கள் மீது, பிறருக்கு மரியாதை தன்னால் வந்து சேரும். தலைவிரி கோலமென த்ரௌபதி போன்று தலை மயிரை அவிழ்த்து விட்டு வைத்திருப்பது மிகவும் தவறென பெரியோர்கள் உரைப்பார்கள். இதற்கு பெரியோர்கள் கூறும் காரணம்: இப்படி தலை மயிரைக் கட்டாமல், அவிழ்த்துவிட்டு வைத்திருப்பதால் த்ரௌபதிக்கு ஏற்பட்ட வாழ்க்கை அனுபவம் தான் (காட்டில் வசிக்கும் போது ஏற்பட்ட கஷ்ட நஷ்டங்கள், தலை மறைவாக வாழ்தல் – அஞ்ஞாத வாசம்-போன்று பல) இவர்களுக்கும் ஏற்படலாம் என சொல்வதுண்டு. மேலை நாடுகளிலுள்ள நவநாகரிக நடைப்பாங்கை, ஏனோ இன்றைய இந்தியப் பெண்மணிகளும், மேலை நாட்டவர்களுக்குச் சரி நிகராக இதிலும் அவர்களுடைய நகல்களாக இருக்க ஆசைப்படு கிறார்கள்!!. கேட்டால், தங்களுக்கு சௌகரியமாக இருக்கிறது என்பார்கள். காணொளிகள், பத்திரிக்கைளில், இதன் பொருட்டு விளம்பரங்கள் ஏராளம் தினமும் காண்கிறோம். இது ஒரு புதிய தற்கால நாகரிகமெனவும் கூறுவர். இக்கருத்தைப் பற்றி யோசிக்கவும். (இது இத்தொகுப்பை எழுதியவருடைய சொந்த கருத்து. நல்லெண்ணத்துடன் தான் சொல்லப்பட்டது)]]].

न कुलं वृत्तहीनस्य, प्रमाणमिति मे मति: |
अन्तेष्वपि हि जातानां, वृत्तमेव विशिष्यते ||
ந குலம்° வ்ரு«த்தஹீநஸ்ய ப்ரமாணமிதி மே மதி: |
அந்தேஷ்வபி ஹி ஜாதாநாம்° வ்ரு«த்தமேவ விஸி²ஷ்யதே ||

ஒருவன் உயர்குலத்தில் பிறந்தவன் என சொல்லப்படுவதால் மட்டுமே அவன் உயர்ந்தவனாக ஆக மாட்டான். அவன் முன்னோர்கள் உயர்குலத்தைச் சேர்ந்தவர்கள் என அழைக்கப்பட்டவாறு, அதே நல்லொழுங்கங்களை அவனும் கொண்டிருக்க வேண்டும். கீழ்குலம் எனும் குலத்தில் உதித்தாலும், அவன் நல்லொழுக்கங்களைக் கடைபிடித்தால், இவனே உயர் குலத்தில் பிறந்தவனைக் காட்டிலும் எக்காலும் வணங்கத் தகுதி படைத்தவன்.

வினாச காலத்தில் விபரீதமான புத்தி தானே உண்டாகி விடும்.

यस्मै देवा: प्रयच्छन्ति, पुरुषाय पराभवम् |
बुद्धिं तस्य अपकर्षन्ति, सो~वाचीनानि पश्यति ||

யஸ்மை தே³வா: ப்ரயச்ச²ந்தி, புருஷாய பராப⁴வம் |
பு³த்³தி⁴ம்° தஸ்ய அபகர்ஷந்தி, ஸோம்¿வாசீநாநி பஸ்²யதி ||
நல்லதோ கெட்டதோ நாம் செய்த கர்ம வினையால் அதற்குத் தக்க பலனை இறைவன் நமக்கு அருள்கிறார். ஒருவனுக்கு தீது வரும்படி பலனிருந்தால், முதலில் இறைவன் நம் ஆய்வுணர்வுத் திறனை (புத்தி கூர்மையை) மழுங்கடித்துவிடுகிறார். புத்தி மழுங்கினால் கெட்ட செய்கைகளையே மானிடரால் செய்ய நேர்ந்துவிடும்.

पञ्च पश्वनृते हन्ति, दश हन्ति गवानृते |
शतमश्वानृते हन्ति, सहस्रं पुरुषानृते ||

பஞ்ச பஸ்²வந்ரு«தே ஹந்தி, த³ஸ² ஹந்தி க³வாந்ரு«தே|
ஸ²தமஸ்²வாந்ரு«தே ஹந்தி, ஸஹஸ்ரம்° புருஷாந்ரு«தே ||

அக்காலத்தில் பொய் சொல்ல அஞ்சினார்கள் எனத் தெரிகிறது. தற்காலத்தில் உள்ளதற்கு மாறாக, விதுரர் காலத்தில் பொய்களும் ஒரு எல்லைக்குள்தான் இருந்தது போலும். இக்காலத்தில் ஒரு விதுரர் போன்ற பிரதம மந்திரி நம்மிடையே இல்லையே. விதுரர் கணக்கில் சொன்னால், பொய், அதன் முக்கியத்துவத்துக்குக் தக்கவாறு (magnitude) அதன் கொள்ளளவுகளால் அவன் குடும்பத்தையே அழிக்க வல்லது. ஒரு கால் நடைக்காகச் சொன்ன பொய், குடும்பத்தில் ஐவரையும், பசுமாட்டிற்காகச் சொன்ன பொய் பத்து பேரையும், குதிரைக்காகச் சொன்ன பொய், நூறு பேர்களையும், ஒரு மனிதனுக்காகச் சொன்ன பொய் ஆயிரம் பேர்களை குடும்பத்தில் அழித்துவிடும். இங்கு மிருகங்களையும், மந்தர்களையும் உதாரணமாகக் கொடுக்கப்பட்டதற்கு, “சரி சமானமாக” எனக் கொள்ள வேண்டும். [இதையே, சாதாரணப் பொய், நடுத்தரப் பொய், பெரிய பொய், மிகப்பெரிய பொய், ஆகாசப் பொய், அண்டப் பொய் எனவும் நாமே வகை படுத்திக் கொள்ளலாம். இந்த வகையில் இந்திய அரசியல்வாதிகளை இனவாரியாகப் பிரித்து வகைபடுத்தலாம்!!]

हन्ति जातानजातांश्च हिरण्याथ्रे अनृतं वदन् |
सर्वं भूम्यानृते हन्ति मास्म भूम्यनृतं वदे: ||

ஹந்தி ஜாதாநஜாதாம்°ஸ்²ச ஹிரண்யாத்²ரே அந்ரு«தம்° வத³ந் |
ஸர்வம்° பூ⁴ம்யாந்ரு«தே ஹந்தி மாஸ்ம பூ⁴ம்யந்ரு«தம்° வதே³: ||
பொன்னுக்காக பொய் சொன்னால், தனக்குப் பிறந்தவர்களையும், பூமிக்காகப் பொய்சொன்னால் தன்னிடத்தில் உள்ளவையனைத்தையும் அழிந்து போக நேரும். [கடவுள் பெயரால், பொது மக்களுக்கு நன்மைசெய்ய அளிக்கப்பட / தானம் செய்யப்பட்ட புமியையும் தங்கள் வசமாக்கிக் கொள்ளும் பெரிய மனிதர்களை என்னவென்று சொல்வது!]

सत्यं रूपं श्रुतं विद्या, कौल्यं शीलं भलं धन्म् |
शौर्यं च चित्रभाष्यं च, दशमे स्वर्ग योनय: ||

ஸத்யம்° ரூபம்° ஸ்²ருதம்° வித்³யா, கௌல்யம்° ஸீ²லம்° ப⁴லம்° த⁴ந்ம் |
ஸௌ²ர்யம்° ச சித்ரபா⁴ஷ்யம்° ச, த³ஸ²மே ஸ்வர்க³ யோநய: ||

உண்மையான சுவர்க்க அனுபவம் ஏதெனில்,
• நெறி தவறாமை (Truth),
• பணிவுடைமை (humility),
• கல்வி-கேள்விகளில் (intellect & knowledge) சிறப்பை எய்தல்,
• பரம்பரை (progeny),
• நற்பண்புடைமை (character),
• துணிச்சல் (bravery),
• செல்வம் (wealth),
• எல்லொரிடமும் இனிய சொற்கள் பேசுதல் (soft words spoken to all)

முதலியனவையே.

पापं कुर्वान्पाप कीर्ति: पापमेदाश्नुते फलम् |
तस्मात् पापं न कुर्वीत पुरुष: शंसित व्रत: ||
पापं प्रज्ञां नाशयति क्रियमाणं पुन: पुन: |
नष्टप्रज्ञ: पापमेव नित्यमारभते नर: ||

पुण्यं कुर्वन् पुण्यकीर्ति: पुण्यं अत्यन्तं अश्नुते |
पुण्यं प्राज्ञां वर्ध्यति क्रियमाणं पुन: पुन: ||
व्रुद्ध प्राज्ञ: पुण्यमेव नित्यं आरभते नर: |
तस्मात् पुण्यं निषेवेत पुरुष: सुसमाहित: ||

பாபம்° குர்வாந்பாப கீர்தி: பாபமேதா³ஸ்²நுதே ப²லம் |
தஸ்மாத் பாபம்° ந குர்வீத புருஷ: ஸ²ம்°ஸித வ்ரத: ||
பாபம்° ப்ரஜ்ஞாம்° நாஸ²யதி க்ரியமாணம்° புந: புந: |
நஷ்டப்ரஜ்ஞ: பாபமேவ நித்யமாரப⁴தே நர: ||

புண்யம்° குர்வந் புண்யகீர்தி: புண்யம்° அத்யந்தம்° அஸ்²நுதே |
புண்யம்° ப்ராஜ்ஞாம்° வர்த்⁴யதி க்ரியமாணம்° புந: புந: ||
வ்ருத்³த⁴ ப்ராஜ்ஞ: புண்யமேவ நித்யம்° ஆரப⁴தே நர: |
தஸ்மாத் புண்யம்° நிஷேவேத புருஷ: ஸுஸமாஹித: ||

மானிடர்கள், தீவினை செய்யாதிருக்க விதுரர் எச்சரிக்கிறார். தீவினையின் முடிவு துன்பத்தில் தான் விளையும். தீவினைகள் செய்யும் போது ஏதோ கானல் நீர்போல, அச்சமயத்தில் சுகமாகக் கற்பனையில் கண்டாலும், பின்னர், துக்கமே உண்டாகும். புத்தி மழுங்கியவனே கெட்ட செய்கை களில், பிரவேசிக்கிறான்.
நல்வினைகளைத் தொடர்ந்து செய்வதால், இதே ஒரு பழக்கமாகி விடுகிறது. இது நன் நெறிகளை போதிக்கும், நல்லறிவை வளர்க்கும், இவனுக்குப் புகழுண்டு. இதனால் தான் தீவினைகளை விட்டொழித்து நல்வினைகளில் நாட்டம் கொள்ள வேண்டும்.

दिवसेनैव तत्कुर्यात् येन रात्रौ सुखं वसेत् |
अष्टमासेन तत्कुर्यात् येन वर्षा: सुखं वसेत् ||

पूर्वे वयसि तत्कुर्यात् येन वृद्ध: सुखं वसेत् |
यावत् जीवं तु तत्कुर्यात् येन प्रित्य सुखं वसेत् ||

தி³வஸேநைவ தத்குர்யாத் யேந ராத்ரௌ ஸுக²ம்° வஸேத் |
அஷ்டமாஸேந தத்குர்யாத் யேந வர்ஷா: ஸுக²ம்° வஸேத் ||
பூர்வே வயஸி தத்குர்யாத் யேந வ்ரு«த்³த⁴: ஸுக²ம்° வஸேத் |
யாவத் ஜீவம்° து தத்குர்யாத் யேந ப்ரித்ய ஸுக²ம்° வஸேத் ||

“கொடுத்து வைத்திருக்க வேண்டும்” என நாம் பலதடவை சொல்லக் கேட்டிருக்கிறோம். எல்லா நல்லவைகள் கிடைப்பதற்கும், அவைகளுக்காக உழைத்து ஈட்டி இருக்க வேண்டும். நல்லவைகள் கிடைக்க இயல்பாக அமையச் செய்திருக்க வேண்டும். பகலில் சம்பாதித்து வைத்திருந்தால் தான் இரவில் நன்றாகக் கழிக்க முடியும். மற்ற மழை இல்லா மற்ற எட்டு மாதங்களில், உழைத்து வைத்திருந்தால் தான், மீதியுள்ள நான்கு மழை மாதங்களை சுகமாகக் கழிக்க இயலும். வயதான பிறகு (வேலையி லிருந்து ஓய்வு பெற்ற பின்) சுகமாகக் கழிக்க வேண்டுமெனில், உடல் வலு இருக்கும் வாலிபப் பருவத்திலிருந்து ஓய்வெடுக்கும் வரை உழைத்து ஈட்டி முதலீடு செய்து இருக்க வேண்டும். வங்கியில் ரொக்கமிருந்தால்தான் அதிலிருந்து பணத்தை எடுத்துக் கொள்ள முடியும். அஃதே போன்று, மறுபிறவியில் சுகமாக வாழ, கழிந்த பிறவிகளில் அதற்காக ஏற்றவைகளைச் செய்திருக்க வேண்டும்.

धनेनाधर्मलब्धेन यच्छिद्रमपिधीयते |
असंवृतं तद्भवति तत: आन्यदवदीयते ||

த⁴நேநாத⁴ர்மலப்³தே⁴ந யச்சி²த்³ரமபிதீ⁴யதே |
அஸம்°வ்ரு«தம்° தத்³ப⁴வதி தத: ஆந்யத³வதீ³யதே

கெட்ட வழிகளில், ஈட்டிய செல்வம் எந்தெந்த துவாரங்கள் அடைத்திருந்தாலும், அவைகள் உண்மையில் மூடப்படுவதில்லை. அந்த இடம் வருங்காலத்தில், வலுவு குறைந்து விடும். இதிலிருந்து வேறொரு துளை உண்டாக்கப்பட்டுவிடும். ஒரு சம்ஸ்கிருத மூதுரை உண்டு; अन्यायार्जितं वित्तं अषड्डाळेन विनश्यति (அந்யார்ஜிதம் வித்தம் அஷட்டாளேன வினஸ்யதி) = அநியாய வழியில் யாருக்காகவோ, அல்லது எதற்காகவோ, சம்பாதித்துச் சேர்த்து வைத்திருந்த பணம் (வெளி நாட்டு வங்கியில் கோடி, கோடிக் கணக்கில் பாதுகாப்பாகப் போட்டு வைத்திருந்தா லும்), அனைத்தும் பின்னால் அனுபவிக்க இருக்கும் போது வேண்டாதகாதவர்களால் அநியாய வழிகளில் தான் வீணாகும். [தற்போது, இந்தியாவில் இந்த வகையைச் சேர்ந்தவர் பலர், ஸ்விஸ் வங்கிகளிருந்து, கேனரி தீவுகளிலும், மொரேஷ்யஸ் போன்ற பதுக்குமிடங்களில் மாற்றி விடுவதாகத் தெரிகிறது].
நம் அவ்வைப் பாட்டியும் “நல்வழி”யில் கூறியது:

பாடுபட்டுத் தேடிப் பணத்தைப் புதைத்து வைத்துக்
கேடுகெட்ட மானிடரே கேளுங்கள்: – கூடுவிட்டு இங்கு
ஆவிதான் போயின பின்பு யாரே அனுபவிப்பார்
பாவிகாள் அந்தப் பணம்?

स्वास्तीर्णानि शयनानि प्रपन्ना: न वै भिन्ना जातु निद्रां लभन्ते |
न स्त्रीषु राजन् रतिं आप्नुवन्ति न मगघै: स्तूयमाना न सूतै: ||

ஸ்வாஸ்தீர்ணாநி ஸ²யநாநி ப்ரபந்நா: ந வை பி⁴ந்நா ஜாது நித்³ராம்° லப⁴ந்தே |
ந ஸ்த்ரீஷு ராஜந் ரதிம்° ஆப்நுவந்தி ந மக³கை⁴: ஸ்தூயமாநா ந ஸூதை: ||

கீழே சொல்லப்பட்டவர்கள் நிம்மதியாக உறங்க முடியாது:
• உறவினர்களுடன் சண்டையிட்டவன்
• பெண்ணிடம் மனதை செலுத்தியவன்
• சுய நலத்திற்காக, முகஸ்திதி செய்பவன் [(நம் பத்திரிக்கையாளர்கள்) நாளை ஆட்சியும் மாறலாம். அப்போது என்ன செய்வார்கள்? அப்போது தங்கள் குரலை மாற்றிக்கொள்வார் களோ?]

விதுர நீதிகளில் சில இடங்களில், கோட்பாடளவி்ல் மெய்மையை வற்புறுத்திக் கூறும் கருத்துப் பங்குடன் (abstract) இருக்கும். இதனுள் கூறப்பட்டு இருக்கும் முக்கிய கருத்துக்களை சற்று அமைதியுடன் யோசித்தால் நன்கு விளங்கும்.

நல்ல அறிவுரை என்ற கருத்துப் படிவம், கடவுள் தத்துவம் போன்று ஒன்றே ஒன்றைத்தான் குறிக்கும். நல்லவை/உண்மை/கடவுள் எனக் குறிக்கும் போது, இதை, பலர் பலவிதத்தில் எடுத்துரைப்பார்கள். நல்லது என்பதை இன்னும் விளக்கிச் சொன்னால், அது எல்லோருக்கும் மன நிறைவை அளிக்கவல்லதாயும், நம்பகமானதாகவும், ஒழுக்கங்களை மீறாதவாறும், நேர்மை, வாய்மையோடு தொடர்புடைய எல்லோருக்கும் நல்வாழ்வு தருவதாகவும், கூறப்பட்டவை யாவும் உண்மையென ஏற்கனவே ஏற்கப்பட்டவைகளாகவும் அமைய வேண்டும். இனிப்பில் பலவிதம் உண்டு. எல்லா இனிப்புகளுமே, இயற்கையில் (கரும்பு, தேன் போன்று) கிடைப்பவை யானாலும். செயற்கையில் செய்ததானாலும், நற்சுவையுடன் இனிப்பாகத் தான் இருக்கும். இனிப்பை உறுதிப்பாட்டுடன் இம்மியும் பிசகாமல், முடிவாக, வரையறையுடன் கூற இயலுமா? இனிப்பு இனிப்பாக இருக்கும் என்று தான் சொல்ல முடியும். செயற்கையில் செய்யப்படும் எந்த இனிப்பும், ஏதாவது ஒருவித சர்க்கரையோடு தான் இணைந்தாக வேண்டும். எல்லா இனிப்பின் சுவையைப் பற்றி உறுதியாகச் சொன்னால் கடைசியில் சுவை ஒன்றுதான். எல்லா நதிகளில் உள்ள தண்ணீர் ஒரே சுவையுடன் தான் இருக்கும் – ஆக, எல்லா நதிகளுக்கும் = नदीनां= நதீனாம்; கடல் தான் = सागर:= சாகர:; போக்கிடம் = गति: = கதி:;. = नदीनां सागर: गति: (நதீனாம் சாகர: கதி:) – எல்லா நதிகளுக்கும் கடல் தானே கடைசி போக்கிடம். மறுபடியும் கடல் உப்பு நீர், சூரிய வெப்பத்தால், மேகமாகி, மழையாகிப் பொழிந்து நதிகள் மூலம், கடலுள் கலக்கின்றன இது மீண்டும் மீண்டும் சுழற்சியாக நிகழும் நிகழ்ச்சி (cyclical periodicity) இயற்கையாகவே நடந்து கொண்டு தான் உள்ளது. என்றும் இவ்வாறே நடந்து கொண்டேதான் இருக்கவும் போகிறது.
ஆகையால், கடவுளைக் குறிப்பிடும் எச்சிந்தனையும், சொல்லும், செயலும் நல்வழியில் தான் செல்லும். (இதற்கு விதிவிலக்கான கடவுளும் உண்டு!…..எந்த கடவுளும் தான் படைத்த பிறவிகள் ஒருவருக்குடன் சண்டையிடச் சொல்லி, மக்களை அழிக்கச் சொல்வதில்லை. அப்படியும் ஒரு கடவுள் இருந்தால்…………….?)
இதையே, நல்வழி = கடவுள் = உண்மை என வெவ்வேறு சொற்களால் சொல்லலாம். இதுபோலத்தான் நல்லுரைகளாகக் கூறுபவைகள் யாவும் திரும்பவும் வெவ்வேறு சொற்களால் ஒன்றே ஒன்றைக் கூறுவது (repetition) போலவே தெரியும்; இதில், முடிவாக ஒன்றைக் குறித்ததாகவே இருக்கும். அததனுடைய இடத்திற்குத் தக்கவாறு பொருட்களை நாம் தான் எடுத்துக் கொள்ள வேண்டும்.

அடுத்த நான்காம் (4) பகுதியில், ‘தாங்கள் எடுத்துக்கொண்ட கடு முயற்சியாலும் கூட. அவைகள் நிறைவேறாது போகும்போது, பதினேழுவித மாந்தர்களுக்கேற்படும் விபரீத விளைவுகள்’, அரசியல் நிபுணர்கள்-தூதர்கள் தங்கள் செயலாட்சியில் எவ்வாறு சிறந்து இருக்க வேண்டும், பெண்களை பெரு மதிப்புடன் கொண்டாடி, ஏன் மரியாதையுடன் நடத்த வேண்டும் என்பவைகளைப் பற்றிக் கூற இருக்கிறது.
மீண்டும் மீண்டும் சொல்வது: விதுர நீதியில் மொத்தம் 8 அத்தியாயங்களில் 534 சம்ஸ்கிருத நீதி ஸ்லோகங்கள் (செய்யுட்கள்) உள்ளன; இம்மூல நீதிகளிலிருந்து, தமிழ் தொகுப்புக் கட்டுரைப் பகுதிகளில், சில முக்கிய செய்யுட்கள் மட்டுமே, மிகக் குறைந்த எண்ணிக்கையில் தான், கொடுக்கப்பட்டுள்ளன.

—–0—–

Series Navigation

Josh Schrei தமிழாக்கம்: சேஷாத்ரி ராஜகோபாலன்

Josh Schrei தமிழாக்கம்: சேஷாத்ரி ராஜகோபாலன்