மூன்று விகடகவிதைள்
தி. கோபாலகிருஷ்ணன்

Palindromic verses (விகடகவிதைகள்) (மேலிருந்து கீழ், கீழிருந்து மேல் படிக்கவும்)
இக்கவிதைகளை இறுதி வாியிலிருந்து முதல் வாி வரை படித்தாலும் அதே பொருளைத் தரும்.
1.
தப்பியது,
தொடுதல்
தப்பென்று
செப்பியது.
பின்
செப்பியது
தப்பென்று
தொடுதல்
தப்பியது
2.
காலம்
கடந்த
காதல்,
கடந்த
காலம்
திரும்பக் கேட்கும் –
காலம்
கடந்த
காதல்,
கடந்த
காலம்
3.
உடையும்
பட்டு
இடையில்
வியர்வைத்துளி
இடையில்
பட்டு
உடையும்