வானங்கள்

This entry is part [part not set] of 45 in the series 20110130_Issue

கலாசுரன்


சுற்றும் முற்றும்
ஆதங்கத்தோடு
பார்த்தான்…

அவன் வானம்
ஓயாமல்
ஏதேதோ புலம்பிக் கொண்டும்
கண்ணீர் கண்ணீர் வடித்துக்கொண்டும்
இருந்தது..

தொலைவில்
தூங்கிக்கொண்டிருந்த
இன்னொருவரின் இரவு
இருளைப் பொடித்து
உதிர்ந்து போனது …..
*
***

Series Navigation