மேலான படைப்பு

This entry is part [part not set] of 50 in the series 20040408_Issue

எம்.ஏ.சலாம்


தெருவில் கிடந்த கல்லை
அப்புறப்படுத்தினேன்
கல் ஆச்சரியமாக
என்னைப் பார்த்து கேட்டது,
நீ யார் ?
எங்கிருந்து வருகிறாய் ?
நீ இந்த தேசத்தவனாக
தெரியவில்லையே!
அடுத்தவரைப் புண்படுத்தி
அடுத்தவர்களின் துன்பத்தில்
இன்பம் காயும்
இங்கிதமான மனிதர்களின்
கூட்டத்தில் அபூர்வ மனிதனாக
இருக்கின்றாயே, யார் நீ ?
விழுவதையும் பாராமல்
அழுவதையும் கேளாமல்
முதுகிலேறி முன்னேறத் துடிக்கும்
மூளிகள் வாழும் இவ்வுலகில்
கல்லை அப்புறப்படுத்தும்
கனிவானவனே நீ யார் ?
அடுத்தவர்கள் பொருளையும்
புகழையும் மட்டுமின்றி
எழுத்துக்களையும் களங்கப்படுத்தி
மக்களின் நகைப்புக்கு ஆளாக்கி
அலையும் அக்கிரமர்களுக்கிடையே
கல்பட்டு புண்படக்கூடாதென
நினைக்கின்ற அன்பனே, நீ யார் ?
இதைக் கேட்ட நான்
வெட்கி தலைக்குனிந்தேன்,
இறைவனின் படைப்பிலேயே
மிகவும் மேம்பட்ட படைப்பான
மனிதனே, இவ்வளவு தானா நீ ?
– எம்.ஏ.சலாம் –

faizsalam@hotmail.com

Series Navigation

எம்.ஏ.சலாம்

எம்.ஏ.சலாம்