அம்ாிதா ஏயெம்.
அந்தக் கானகத்தை தாடகை என்னும் பெண் ண்டு கொண்டிருந்தாள். தனக்குத் தேவையான இறைச்சிகளையும், காய் கறிகளையும், தனது காட்டிலிருந்து பெற்றுக் கொண்டாள். காட்டை உயிாினவியல் பாதுகாப்பு (Biological Conservation) செய்து நிலைபேறான விருத்தி மூலம் தனக்கு வேண்டியதையெல்லாம்; பெற்றும் கொண்டிருந்தாள். உலகத்தில் எதற்கும் எதிரானதும், எதன் அழிவிற்கும் காரணமானதுமானது சுயஇலாப, மேட்டிமைச் சிந்தனைகளே. எனவே விசுவாமித்திரா; தாடகை பாதுகாத்த வனத்துள் யாகம் நடாத்தி காட்டை எாிக்க முற்பட்டதை தாடகை தடுக்க இராம-இலட்சமணன் group of company உடன் விசுவாமித்திரா; சென்று, தலித்தான தாடகைப் பெண்ணின் மலைகள் போன்ற கொங்கைகளின்மீது, பிராமணிய மேட்டிமை விட்ட அம்பால், றாய்க்; குருதி பெருக காடு கடலாய் மாற அந்தப் பெண், தலைகள் தோறும் மணிமுடியை உடைய துன்பியல் நாயகனாகிய இராவணணின் பின்னால் வரப் போகும் அழிவுக்கு முந்திய கேடுகால அறிகுறியாக பாலகாண்டம் சொல்வதுபோல் விழுந்தாள். எனவே விதி அதன் நிமிர்த்தப் பிரகாரம் எதனை எழுதவேண்டுமோ அதனை எழுதத் தொடங்கியது. ஏதோவோாிடத்திற் மானின் நிமித்தம் இலங்காபூித்தீவின்மீது வைக்கப்பட்ட தீயானது, இன்னமும் எாிந்து முடிந்தபாடில்லாமல் உடல்களிலும் கட்டடங்களிலும், காடுகளிலும் தொடர்ந்துகொண்டிருக்க விதி எழுதத்தொடங்கியது.
காட்டிலே மேய்ந்து கொண்டிருந்த மானை சீதாதேவியார் பிடித்துத் தருமாறு கேட்டார். உடனே விசுவாமித்திர கல்லூாியில் படித்த இராமர்பிரான் மானைத் துரத்தி ஒட மான் மாயமாய் மறைய எங்சளது துன்பியல் நாயகனான இராவணிணன் புகழை உயர்த்தித் துதிபாட விதி எதனை எழுத வேண்டுமோ அதனை எழுதத் தொடங்கியது.
**
நள்ளிரவு. லாலின் வீடு. லாலின் தச்சு வேலை செய்யும் மேசைமீது பாய் விாித்து, படுக்கையாக்கி நித்திரை செய்கிறேன். புது இடம் என்பதால் நள்ளிரவாகியும் இன்னமும் தூக்கம் வரவில்லை. பக்கத்திலே தண்ணி அரையும் குறையுமாக ஓடிக் கொண்டிருக்கும் வாய்க்காலில் தவளை ஒன்று கத்தி கத்தி ஓய்ந்து கொண்டிருந்ததது. ஏதாவது பாம்பு ஒன்று அதனை விழுங்கிக் கொண்டிருக்கலாம்.
படுத்தபடியே பார்க்கிறேன். நீண்டு பரந்து கிடந்த வயல்வெளிகள் என்னை நோக்கி குளிர்ந்த காற்றுக்களை அனுப்பிக் கொண்டிருந்தன. சந்திரன் கருமேகத்தினால் மறைய வயலோ இருள் சூழ்ந்த கடலாகி, கட்டு வலைகள் கட்டி தொடுவானத்திற்கு அருகில் கொஞ்சம் தோணிகள் மீன்பிடித்துக் கொண்டிருப்பதாக அந்த இலாந்தா; விளக்குகள் பிரமையூட்டின. வயலின் அந்தத்தில் மலையடிவாரத்தில் நிறைய நட்சத்திரங்கள் விட்டு விட்டு மின்னிக் கொண்டிருந்தன. உபாலிக் கிழவனின் தோணியும் அதில் ஒன்றாக இருப்பது எனக்குத் தொியும். வயல் வேலை செய்யும், மீன் பிடிக்கும் அவர்கள் எதிர்கால எஜமான் கனவுகள் தோணிகளாக, திடிரென பணக்காரா;களாகி எஜமான்கள் வதற்காக எஜமான்களின் சை வார்த்தைகளினால் நங்கூரம் பாய்ச்ச, மண்வெட்டி, அலவாங்கு யுதங்களால் கட்டுவலை செய்து மாணிக்க மீன்களை தேடிக்கொண்டிருக்கிறார்கள். மாணிக்கத்தில் பிரகாசம் இருக்கிறதோ தொியாது. னால் அவர்களின் விழிகளில் எஜமான் சையின் பிரகாசம் இருக்கிறது. கடந்த சில மாதங்களாக, இதுதான் நிறையப் பேர்களி;ன் தொழில் காட்டிலும், மேட்டிலும், மழையிலும், வெயிலிலும் இதுதான் வேலை.
சிங்கமாமா சிறிது நேரத்திற்கு பிறகு வந்தார். அவர் கீழே கிடந்த மணலில் விழுந்து சற்று நேரத்திற்கெல்லாம் தூங்கிப் போனார். ளரவம் கேட்க கண்ணைத் திறந்து பார்த்தேன். சிங்கமாமா நடந்து பின்புறமாக போவது தொிந்தது. இந்த நடுநிசி நேரத்தில் சிங்கமாமா எங்கே போகிறார் ?. நானும் அவருக்குத் தொியாமல் பின்புறமாக தொடர்ந்தேன். சிங்கமாமா அப்படியே தொடர்ந்து நேராக போய், ற்றங் கரையோரமாக இறங்கி வலப்பக்கமாக நடந்து, காமினியின் வளவுக்குள் ஏறினார். நான் உடனே அவர் என்ன செய்யப் போகிறார் என்பதை பார்க்க மரத்தி;;ற்கு பின்னால் மறையத் தொடங்கினேன். சிங்கமாமா விவசாயி. விவசாயம் இல்லாத நாட்களில் வேட்டைக்குப் போவாார். வேட்டையில் வழமையாக சிங்கமாமாவை விட காமினிக்குத்தான் அதிகமாக வேட்டைப் பொருட்கள், இறைச்சிகள் கிடைப்பது வழக்கம் என்பது எனக்குத் தொியும். சிங்கமாமா காமினியின் இடது வளவு மூலைக்குப் போய் குந்தியிருந்து ஒரு தடியினால் மண்ணைக் குத்தி ஒரு ழமான சிறிய குழி உண்டாக்கிவிட்டு. அந்தக் குழிக்குள் இடுப்புச் சாறனிலிருந்து ஏதோ ஒன்றைப் போட்டு மூடிவிட்டார். எனக்கு அவர் என்ன செய்தார் என விளங்கியது. பாவம் காமினி.
**
தாடகையின் மார்பில் குத்திய அம்பால் பெருக்கெடுத்த குருதி கடலாய்த் திரண்டு, நதியாய் மாறி உலகெங்கும் பரந்தன. தேங்கின. தேங்கி நீராகி, நீர் நிலைகளை உண்டாக்கின. இந்த தாடகை இரத்த நீர்;நிலைகள் கொண்டிருந்த நீர்;, மண் துணிக்கைகளுடாகப் பரவி நீர் நிலைகளை அண்டி மரங்களையும், செடி கொடிகளையும், அதனை நம்பி மான், மரை யானை போன்ற தாவர உண்ணிகளையும், இவைகளை நம்பி புலி, சிங்கம், சிறுத்தை, நாி, ஓநாய் போன்ற ஊனுண்ணிகளையும், இரண்டையும் நம்பி, காகம், நாய், பங்கசு, பக்டாாியா போன்றவைகளையும் மேட்டிமைகளுக்கு கொடுப்பதற்காக வளர்த்துவிட்டிருந்தன.
**
குளக்கரைகளில் அலைந்து திாிந்த போது சிங்கமாமாவும், லாலும் இரு சைக்கிள்களை உருட்டிக் கொண்டு என்னிடம் வந்தார்கள். வேலையெல்லாம் முடிந்துவிட்டதா என்று கேட்டார்கள். காட்டுக்கு வருமாறு அழைத்தார்கள்;. ஓரு கடைக்குப் போய் சோடா குடித்துவிட்டு. என்னிடம் இருந்த பெறுமதி வாய்ந்த உபகரணங்களை கடைக்காரனிடம் பாதுகாத்து மீண்டும் நாளைக்குத் தருமாறு கூறிவிட்டு, சமைக்கத் தேவையான சாமான்களை வாங்கி ஒரு உரப் பையினுள் கட்ட, எங்கள் சைக்கிள்கள் காட்டை நோக்கிப் பறந்தன. காட்டை அடைவதற்கு குளத்தின் ஒரு அந்தம் வரை சென்று, னைக்கல் மலையைத் தாண்டினோம். சைக்கிள் போக முடியாதபடி எங்கும், னை விட்டைகள் நிறைந்து கிடந்தன. திடிரென சிங்கமாமா ஏதோ ஒரு காலடித் தடத்தின் மண்ணை எடுத்து முகா;ந்துவிட்டு, இப்போதுதான் மான்கள் வந்து போயிருக்கின்றன என்றார்.
மூவரும் மீண்டும் சைக்கிள்களில் ஏறி காட்டை நோக்கிச் சென்று கொண்டிருக்கிறோம். காடு நெருங்க நெருங்க ஏதொவொரு குளிர்மையை இந்த மண்டை பிளக்கும் கொழுத்தும் கோடை வெயிலிலும் உணரத் தொடங்கினேன். மணலாறு குறுக்கிட்டது. பெயருக்கேற்ற மாதிாி மணலை மட்டும்தான் கொண்டிருந்தது. நான்கைந்து ட்ரக்டர்கள் சட்டவிரோதமாக மண் அகழ்ந்து ஏற்றிக் கொண்டிருந்தன. மணலாறையும் தாண்டி வந்தவுடன், சேமமாக நாங்கள் காட்டை அடைந்தோம். இதற்கு அப்பால் சைக்கிளில் பயணம் செய்ய முடியாது என்று லால் கூறினான். எனவே நேற்றோ அல்லது முந்தா நாளோ வெட்டிப் போடப்பட்ட மரக் கிளைகளால் சைக்கிள்களை மூடிமறைத்துவிட்டு பயணத்தை தொடர்ந்தோம்.
காடு பூராக வெட்டிப் போடப்பட்ட மரக்கிளைகள் கிடந்தன. இங்கு மட்டுமா கிடக்கின்றன. இந்தக் காட்டுத் தொகுதி ரம்பிக்கும் பிரதான கறுத்த வீதி நெடுக எத்தனை மரங்கள் பல மைல்கள் நீளத்திற்கு புல்டோசர் கொண்டு பிடுங்கப்பட்டு அழிக்கப்பட்டு எாிக்கப்பட்டிருக்கின்றன. எத்தனை பனைமரங்கள் விழுந்து கிடக்கின்றன. அம்புலிமாமாப் பருவத்து அரக்கனின் நினைவுகள் மனதிலே நிறையத் தொடங்கின. அரக்கனின் கால்கள் பனை மரம் மாதிாி என்று தாய் சொல்வார். அம்புலிமாமாப் படங்களும் அப்படியேதான் சொல்லி வைத்து கண் வாங்காமல் பார்த்து, பிரமிக்க வைத்தன. ஓவ்வொரு ஜன்னலோர பிரயாணத்தின்போதும் வீழ்ந்து கிடக்கும் தாடகைகளையும், அவளது பிள்ளைகளையும், கணவன்மாரையும் காணக்கிடைக்கின்றது. அவர்கள் சொல்லத் துடிக்கம் சொல்லாத சேதிகளையும் விளங்க முடிகின்றது.
“நான் என்ர முப்பத்திரண்ட எடுக்கன், நீ உன்ர முப்பத்தியாறப் போய் எடு” என்றார் சிங்கமாமா. இருவரும் தங்களுடையவைகளை எடுப்பதற்குப் பரபரத்துக் கொண்டிருந்தார்கள். இடையில் நான் நின்று கொண்டு என்ன செய்வதென்று விழித்தேன். சிங்கமாமா தன்னுடன் வருமாறு கூறினார். அவரது முப்பத்தியாறு இருக்குமிடத்தை நான் அறிந்தாலும் என்னால் அதற்கு பத்து வராது என்று அவருக்கு தொிந்திருந்தது. ஏனெனில் நான் இந்தக் காட்டுக்குப் புதியவனானபடியால். இனி இந்த ரண்யம் யுதங்களைத்தான் மதிக்கும். யாாிடம் யுதம் இருக்கிறதோ அவன்தான் இங்கு பொியவன். எஜமான். யுதம் இல்லாமற் காட்டுக்குள், நுழைபவன் யுதம் வைத்திருப்பவனுக்கு அடிமை. யதம் வைத்திருப்பவனே புத்திமானாகக் கருதப்படுவான். சிங்கம், புலிகள் யுதங்களை பற்களிலும், நகங்களிலும் வைத்திருப்பதால் அவை மான்கள், மரைகள், மாடுகளுக்கெல்லாம் மன்னர்கள். பலவான்கள். புத்திமான் பலவான். காட்டில் யுதங்கள் மிருகங்களிடமிருந்து பாதுகாப்புப்பெற பெரும்பாலும் கொண்டு செல்லப்படுவதில்லை. யுதம் வைத்திருப்பவன் யுதம் வைத்திருப்பவனை மதிப்பான். அடிமைத் தளையிலிருந்தும், சண்டையிலிருந்தும் விடுபட கக் குறைந்தது யுத சமபலமாவது தேவை இந்தக் காட்டில்.
சிக்கலான அடர்ந்த பற்றைக் காட்டுக்குள் ஒரு ள் மாத்திரமே போகக் கூடிய அளவு பாதை வழியாக என்னைக் கூட்டிச் சென்று ஒரு புதருக்குள் கையை விட்டு எதையோ தேடி, பின்னர் ஒரு கறுத்தப் பொலித்தீன் பேப்பரால் சுற்றப்பட்ட எதையோ சிங்கமாமா எடுத்தார். அதை எடுத்துப் பிாித்தார். அதற்குள், முப்பத்தியாறுக்குத் தேவையான சன்னங்களும், தோட்டாக்களும், பாகங்களும் இருந்தன. தோட்டாப் பட்டியை சிங்கமாமா இடுப்பில் கட்டி, படபடவென்று முப்பத்தியாறைப் பொருத்தி, தோட்டாவை நிரப்பி குறிபார்க்குமாறு என்னிடம் தந்தார். தூக்கிப் பார்த்தேன். நன்றாகப் பாாித்தது. நான் அகிம்சாவாதியென்று மீண்டும் சிங்கமாமாவிடம் கொடுத்தேன். லால் துப்பாக்கி ஒழித்து வைக்கும் இடத்தை கண்டுபிடிக்க பதுங்கி வருகிறாானா இல்லையா என்பதையும் கவனித்துக் கொண்டார். அந்த இடத்தை சுற்று முற்றும் பார்த்தேன். நிறைய மான்களின், மரைகளின், காட்டு மாடுகளின் தோல்கள், கொம்புகள்; என்பன கிடந்தன. வேட்டையாடிய விலங்குகளையெல்லாம் இங்குதான் கொண்டு வந்து உாிப்பது வழக்கம் என்றார் சிங்கமாமா. என்ன இலையை விரும்பி கூடுதலாக சாப்பிடுகின்றது என்பதை அறிவதற்கு பொிய குவியலாக கிடந்த யானையின் விட்டைக்குள் கையைவிட்டு அமுக்கி பார்ர்த்தேன். சிங்கமாமா துப்பாக்கி ஒழித்து வைத்த புதா; செடிகளைத்தான் யானை விரும்பிச் சாப்பிடுகின்றது என்பதைக் கண்டு கொண்டேன்.
இருவரும் லாலிடம் போனோம். லால் சிங்கமாமாவை நிறுத்திவிட்;டு, என்னை அழைத்துக்கொண்டு, அந்த பொிய று வற்றி வரண்டு போன பள்ளத்தி;ற்குள் இறங்கி, ஒரு முதலைப் பாழிக்கு அப்பால், பல வர்ணங்களினாலுமான கூழாங் கற்கள் சிறிது சிறிதாய் சிதறிக் கிடந்த பற்றையொன்றுக்குக் கீழ் முப்பத்திரண்டை எடுத்துக் கொண்டு சிங்கமாமாவிடம் போனோம்.
உடனே சிங்கமாமா யானை ஒன்று அருகில் எங்கேயோ நிற்கிறது கவனம் என்றார். எனக்கோ, இவர் எப்படிக் கண்டு பிடித்தார். சத்தம் என்றால் எனக்கு ஒன்றும் கேட்கவில்லையே. விடிய விடிய யானையை மேய்த்தும் பலனில்லை என்று விளங்கியது. யானையைப் பார்க்க ஒடினேன். மாமா தனியே போக வேண்டாம் என்று தடுத்து என்னுடன் வந்தார். யானை எனக்கு முன் இருபது அடி தூரத்தில் நின்றது. னால் என்னை நோக்கி வர முடியாதபடி இடையில் வரண்டு போன ற்றுப் பள்ளத் தாக்கு இருந்தது. யானையை ஏதோ பாசையில் போகுமாறு சிங்கமாமா கத்த யானை நொண்டி நொண்டி ஓடத் தொடங்கியது. நானும் யானையைத் தொடர்வதற்கு இறங்கி, ஓடி, அடுத்த கரையில் ஏறினேன். சிங்கமாமா வேண்டாம் என்று தடுத்து, என்னை இந்தக் கரை கூட்டி வந்து, யானை நொண்டுவதற்கு தான் அதன் முன்னங்காலில் முப்பத்தாறால் வைத்த வெடியே காரணம் என்றார்.
நாக்கு வறளத் தொடங்கியது. நடந்து கொண்டே இருந்தோம். சிங்கமாமாவும், லாலும், வழியில் அகப்பட்ட சின்னச் சின்ன பாசி பிடித்த குட்டைகளில், இரு கைகளினாலும் நீரை அள்ளி தங்களது, தாகத்தை தணித்துக் கொண்டிருந்தார்கள். எனக்கோ அவைகளில் நீந்தித் திாியும் பரமேசியமும், ஹைட்ராவும், டப்னியாவும், சைக்குளோப்சும் பயங்காட்டின.
எங்கோ தட்.. தட்.. என்று கோடாி ஏதோ மரத்தில் அடிபடும் சத்தம் கேட்டது. இடுப்பளவு உயர, கருகிக் காய்ந்த மஞ்சட் புற்பற்றைக்கூடாக ஒரு சமவெளிதாண்டி அந்தத் திசை நோக்கிப் போனோம் எனக்கு ஏதேனும் குடிநீர் கிடைக்கலாம் என்ற நப்பாசையால.; அங்கே ஏழு எட்டு மாட்டு வண்டிகள், மாடுகள் அவிழ்க்கப்பட்டு அவைகள் மேய்ந்த நிலையில் இருந்தன. மாட்டு வண்டியில் வந்தவர்கள் முதிரை, தேக்கு போன்ற மரங்களை விறகாக வெட்டிக் கொண்டிருந்தார்கள். அவர்களிடம் நீர் கேட்டோம் நேற்றோ, முந்தாநாளோ உாித்த பாம்புச்சட்டை கிடந்த புற்றுக்கருகில் தணணீர்;க் கலன்கள் இருந்தன. தாகம் தீரக் குடித்துவிட்டு அங்கிருந்து நகா;ந்தோம்.
எங்கே போகிறோம் என்று சிங்கமாமாவிடம் கேட்டேன். ஏதொவொரு காட்டின் பெயரைச் சொன்னார். நடந்து கொண்டே இருந்தோம். எனக்குத் தாகம் மீண்டும் அதிகாித்தது. சிங்கமாமாவுக்கும், லாலுக்கும் நிலத்தில் காலே படவில்லை. ஒரு சீரான வேகத்தில் நடந்து கொண்டாடேயிருந்தார்க்ள. நான் நிறைய நேரங்களில்; பின்தங்க நோிட்டது. அந்தநேரமெல்லாம் அவர்கள் என்னை முன்னுக்காக்கி நடக்கத் தொடங்கினார்கள். அதன் பின்னர் நான் மீண்டும் பின்தங்கத் தொடங்குவேன். “இந்தப் பகுதியில் கரடிகள் அதிகம். கரடிகள் பின்னால் வருபவரைத்தான் முதலில் தாக்கும். தாக்கினால் இந்த பையைக் கொடுத்துவிட்டு தப்பிவிடு.” என்று லால் ஒரு பையைத் தூக்கிப் போட்டான். அதையும் தூக்கிக் கொண்டு நடப்பது மேலும் சிரமமாக இருந்தது. அதற்குள் இருந்த பிஸ்கட் பக்கட்டை உடைத்துச் சாப்பிட மேலும் தாகம் அதிகமாகியது. இன்று காலை நான் அளந்த வெப்பநிலை முப்பத்தியெட்டு பாகை செல்சியஸ். இந்தப் பகல் எப்படி மண்டையைப் பிளக்கும் என்று விளங்கியது.
யாராலோ இரவுத் தீயினால் கருக்கப்பட்டு நிறைய மரங்களும் செடிகளும் சாம்பராகி, கறுப்பாகி, எங்கள் வரவறிந்து உடும்பொன்று ஒடி தன் பொந்துக்குள் ஒளிந்துகொண்டிருந்த காட்டுப் பகுதி ஒன்று வந்தது. நானும், லாலும் போட்டிருந்த உடுப்புக்களின் நிறங்கள் போன்றுதான் கருக்கப்பட்ட காட்டின் நிறமும் இருந்தது. அதைத் தவிர்த்து வேறு பாதையால் போவதற்காக, இறங்கி நடந்து கொண்டிருந்த மலையிலிருந்து, வரண்டு நீர் வற்றிப் போயிருந்த ற்றங்கரை ஒரமாக புதிய பாதையால் போய்க் கொண்டிருந்தோம். இடையில் ஒரு சோலை வந்தது. அந்தச் சோலையில் குலை குலையாய் தொங்கிய மஞ்சள் பழங்களிலொன்றை லால் பறித்து, இப்படிச் பழத்தைச் சூப்பினால் தாகம் தணியும் என்றான். என்ன பழம் என்று கேட்டேன் ஒரு பெயரைச் சொன்னான் பனிச்சம் பழமாகத்தான் இருக்க வேண்டும். சூப்ப ஏதோ சாறு வடிய, ர்வமிகுதியால் கடித்துச் சாப்பிட்ட உடனேயே தொண்டை, புரைக்கேறி இருமத் தொடங்க இன்னும் தாகம் அதிகாித்தது.
நீர் வற்றிப் போன ற்றுக்கூடாக நடந்து கொண்டிருந்தோம். ற்றுக்குள் நிறைய இடங்களில் நூற்றுக் கணக்கான சிறியதும் பொியதுமான குழிகள் இருந்தன. சமீபகாலமாக சட்டவிரோதமாக மாணிக்கக் கற்கள் தோண்டுபவர்களின் வேலை இதுவென்றான் லால். மீன் பிடிப்பதற்கும், விவசாயத்திற்கும் போக வேண்டிய குளத்துத் தண்ணீர் இந்த குழிகளுக்குள் தங்குவதுடன், குளத்திலிருந்து குடிநீருக்காக எடுக்கப்படும் நீரையும் பாதித்திருப்பதாக சிங்கமாமா சொன்னார். சில நாட்களில் எழுநூறு தொடக்கம் எண்ணூறு பேர்கள் கூட சேர்ந்து மாணிக்கக் கற்களை பெறவதற்காக இந்த ற்றில் குழி தோண்டுவார்கள் என்றான் லால்.
வெடிமருந்துகளெல்லாம், யார் இந்தக் காட்டையும் மிருகங்களையும் பாதுகாக்க வேண்டுமோ அவர்கள்தான் தருகிறார்கள். அதனைக் கொண்டு வந்து பக்சாட், ஈயம் உருக்கி ஊசியாக்கி பின் சின்னச் சின்ன சன்னங்களாக்கி, அவைகளை அதிகம் வைத்து சன்னங்கள் குறைய வைத்து பறவைகளுக்காகவும், பக்சாட் குறைய வைத்து சன்னங்கள் அதிகம் வைத்து மிருகங்களுக்காகவம் தான்தான் வழமையாக தோட்டாக்கள் செய்வதும், அதற்குப் பிரதியுபகாரமாக இறைச்சிகள் கொண்டு கொடுப்பதும் வழக்கம் என்று லால் கூறினான்.
திடிரென லால் குப்புறக்க விழுந்து, என்னையும் அதே போல் படுக்குமாறு உத்தரவிட்டான். நீர் வற்றி வரண்டு போன ற்றில் பாய்ந்து, படுத்து, ஊர்ந்து, ஒரு கல்லுக்குப் பின்னால் பதுங்கிக் கொண்டு முன்னோக்கினேன். வாழ்க்கையின் வெவ்வேறு சந்தா;ப்பங்களில்; இதே மாதிாி பாய்ச்சலைப் பாய்ந்து ஊர்ந்திருக்கிறேன். பல்கலைக்கழகத்தில் விலங்கியல் ய்வுகூடம் செல்வீசி தகா;க்கப்பட்ட போதும், பல்கலைக்கழக வீதியில் எனக்கருகில் நடந்த குண்டு வெடிப்பின் போதும், எப்போதாவது ஒரு மாலைப் பொழுதின் யுத மோதல்களுக்கிடையே அகப்பட்டுக்கொண்டபோதும் இப்படித்தான் பாய்ந்து, பதுங்கி, ஊர்ந்து மறைந்திருக்கிறேன். .இதுதான் வாழ்க்கையை நோக்கிய பாய்ச்சல் எனப்படுவது என்னவோ ?. ஓரு மானை முப்பத்திரண்டு, முப்பத்தாறுகளின் உதவியுடன் சிங்கமாமாவும், லாலும் துரத்திச் சென்று கொண்டிருந்தார்;கள். மான் ஓடிப் போய் ற்றுக் கட்டில் ஏறி ஏறிப் பார்த்து விழுந்து ஏறி, லாலின் குறியும் தப்ப மான் தப்பிவிட்டது.
சிங்கமாமா காட்டிற்குள் போய் ஏதோ ஒரு கொடியெடுத்து வந்து பாறாங்கல்லில் வைத்துத் தட்டி அதை அருகிலிருந்த குட்டைக்குள் போட்டார். நீரெல்லாம் ஊதா நிறமாக, சிறிது நேரத்தில் மாற நிறைய விரால் மீன்கள் மிதக்கத் தொடங்கின. மிதந்த மீன்களில் சிங்கமாமா ஐந்தாறு மீன்களை நீண்ட கம்பினால் தட்டி எடுத்து கோர்வையாக்கி கொண்டார்.
வழியெல்லாம் தேக்கமரங்களெல்லாம், முதிரைமரங்களெல்லாம் வற்றிய ற்றுக்குக் குறுக்கே விழுந்து கிடந்தன. திடிரென ஒரு யுதக் குழு எதிர்ப்பட்டது. அவர்களிடமும், முப்பத்தியிரண்டும், முப்பத்தியாறுகளும் இருந்தன. யுதச் சமனிலையோ அல்லது யுதம் இரு பக்கங்களும் இருந்தபடியால் முகமூடி போட்டுக் கொண்டு மானைக் கண்டதா ? மரையைக் கண்டதா ?, புலியைக்; கண்டதா ? பூனையைக் கண்டதா ? என்று புழுகி குலவிக் கொண்டார்கள்.
ரண்யத்தில் எங்கிருந்ே;தா லாபனைகள் மெல்லியதாக காற்று சுமந்து வந்துகொண்டிருந்தது. அந்த இடத்தை அடைந்தோம் விக்டர் ரத்நாயகவும், அமரதேவவும் மரத்தில் தொங்கி;க் கொண்டு பாடிக் கொண்டிருந்தார்கள். அந்த ற்றுக் குறுக்காக மரங்களை இருவர் இருவராக அறுத்துக் கொண்டிருந்தனர். என்னையே எல்லோரும், அதில் ஏதோவொரு சந்தேகப் பார்வை இருப்பதாக எனக்குப்பட்டது. என்னைப் பற்றி விளங்கப்படுத்தி, அவர்களுக்கு எனது வரவைப் பற்றி பூிய வைத்தனர். அவர்கள் வேலை செய்து கொண்டிருந்த ற்றின் கரையில் மிக மேடான பகுதியில் இருபது முப்பது பேர் தங்கக் கூடிய கூடாரம் அமைத்திருந்தார்கள். லாலின் சமீபத்திய தொழில் இந்த அறுக்கப்பட்ட இலட்சக் கணக்கான பெறுதியுள்ள மரங்களை இரவு நேரங்களில் கடத்துவது. காடு தாண்டி, கழனி தாண்டி, பிரதான வீதியிலிருக்கும் மலைப்பக்கம் வண்டியை முதலாளியிடம் ஒப்படைத்தால் ஒரு தடவைக்கு ஒருசில யிரங்கள் கிடைக்கும். ஓரு தடவை இலட்சக்கணக்கான மரங்கள் ரூபாய் பெறுமதியுள்ள மரங்கள் மாட்டுப்பட வெறும் ஐயாயிரம் கொடுத்துவிட்டு தப்பியிருக்கிறேன் என்று லால் கூறினான்.
இந்த இடத்திலிருந்து இந்தத் தேசத்தின் வடமத்திய பகுதியின் முக்கியமான நகரத்திற்கு எட்டு கிலோமீற்றர் தூரம் என்றான். மணிக்கட்டை பார்த்தேன். நண்பகல் 12.21. மீண்டும் வேட்டைக்குபு; போக சிங்கமாமாவும், லாலும் கூப்பிட்டார்கள். நான் களைப்பினால் மறுத்துவிட்டு கூடாரத்தில் தூங்கத் தொடங்கினேன்.
நேரம் 2.30 பின்னேரம். சிங்கமாமாவும், லாலும் எழுப்பினார்கள்; குளிர்ந்த, ஒலித்தோடுகிற, வட்டமாய் பலவர்ண மலர்களாலும், புற்களாலும் சூழப்பட்ட, சின்ன மீன்களும், பொிய மீன்களும் கூட்டமாய் அடர்த்தியாய் வாழ்ந்து நெடிதுயர்ந்த மரங்களினால் சுற்றி வளைத்து மூடிமறைத்த நீர்நிறைந்த குட்டையில் களைப்புத் தீரக் குளித்துவிட்டு மதியச் சாப்பாட்டை உண்டோம்.
**
நேரம் பின்னேரம் 6.30 மணி. மூவரும் வரண்ட ற்றுப் பள்ளத்தாக்கினூடாக நடந்தோம். சிங்கமாமா கொஞ்சம் காய்ந்த இலைகளைக் கூட்டி நெருப்பு வைத்து புகை எந்தத் திசையிற் போகின்றது என்று திசையைப் பார்த்து, அந்தத் திசையில் இரு பொிய பாறாங்கற்களுக்கருகில், சிறிய மடுவுண்டாக்கிி, மரங்களின் கிளைகளை உடைத்துப் போட்டு அதற்குள் மூவரும் பதுங்கிக் கொண்டோம்.
நேரம் நள்ளிரவு 2.30 மணி. கும்மிருட்டு. சில்லூறிகளினதும் விலங்குகளினதும் சத்தம். இரு நீலக் குண்டுகள் இருளில் அந்தரத்;தில் எங்களை நோக்கி வந்து கொண்டிருந்தன. சிங்கமாமாவும், லாலும் என்னிடம் காதிற்குள் சொன்னார்கள் அது மரையென்று. தான் அதை சுட்டுவீழ்த்துவதாக சிங்கமாமாவிடம் சைகை காட்டினான் லால்;. னால் மரை அதற்கிடையில் எங்கேயோ ஓடிவிட்டது. சற்று நேரத்திற்குப் பிறகு ஒளிர்ந்து கொண்டிருக்கும் இரு சிவப்புக் குண்டுகள் அந்தரத்தில் மிதந்து டி அசைந்து கொண்டு எங்களை நோக்கி வந்தன. இருவரும் மான் என்றனர். இருபது அடி தூரத்திற்குள்தான்; அது சிறுத்தையென்று இருவருக்கும் தொிந்தது. புலியென்று இருவரும் காதிற்குள் கத்தினார்கள். இருவரும் குறிகளை அழுத்துவதற்கு எந்நேரமும் தயாராகவே இருந்தார்கள். லால் அதைச் சுட்டுவிட அவசரப்பட்;டான். பதினாறாயிரம் ரூபாவிற்கு அதன் தோலை விற்கலாம் என்பது அவனது பல வருட அனுபவம். அப்படி விற்றும் இருக்கிறான். சிங்கமாமா நமக்கு தீங்கு செய்தால் சுடலாம். இல்லாவிட்டால விடலாம் என்று தடுத்துவிட்டார்;. சிறுத்தையும் கொஞ்ச நேரத்திற்குப் பிறகு தூரமாகி மறைந்துவிட்டது.
‘அந்தா மான்.. மான்.. ‘ என்று சிங்க மாமா சத்தமாக கிசுகிசுத்தார். ‘எங்கே மான் ‘ . ‘அங்கே ‘ என்றார். அங்கே ஒரு மானோ அல்லது வேறு விலங்குகளோ நிற்பதற்குாிய எந்த அடையாளமோ, சலனமோ இல்லை. ‘அந்த மான் என்னை நோக்கி வருகுது. நான் அந்த மானை சுடப் போறன் ‘ என்றார். ‘அங்கே மானே இல்லையே ‘ என்றோம், மீண்டும் சொன்னதையே சொன்னார். ‘அங்;க மானுமில்ல மசிருமில்லை ‘ என்றான் லால். டுமீல் என்று காற்றைக் கிழித்துக் கொண்டு சத்தம் பறந்துது. ‘அங்க ரெத்தம் ஒழுக ஒழுக ஓடுது ‘ என்று சிங்கமாமா மடுவைவிட்டு வெளியே வந்து இல்லாத மானைக் கொண்டு வாறன் என்று சொல்லிவிட்டு ஓடினார். சிங்கமாமாவுக்கு என்ன நடந்திருக்கும் என்று நான் காமினியை நினைத்துக்கொண்டு லாலைப் பார்த்து புன்னகைத்தது, அந்த இருளையும் காற்றையும் கிழித்துக்; கொண்டு இருவருக்கும் விளங்கியது.
amrithaam@yahoo.com
- பெரிய புராணம் – 45 ( திருக்குறிப்புத் தொண்டர் புராணம் நிறைவு )
- தலைப்பு
- ஆதி அதிகாரம்
- மூன்று சந்தோஷங்கள்
- ‘அந்நியன் ‘- சங்கருக்கு என்ன தண்டணை தருவான்… ?
- ‘ சுருதி பேதம் ‘ – சென்னையில் அரங்கேற்றம்
- முன்பட்டமும் பின்பட்டமும்
- மிஸ்டர் ஐயர்
- “பாரிஸ் கதைகள்” அப்பால் தமிழ் வெளியீடு…. விமர்சனம்
- நூல் மதிப்புரை- ‘ரமணசரிதம் ‘- கவி மதுரபாரதி
- சிறு வயது சிந்தனைகள் – என் பாட்டனார்
- உலகத் தமிழ் அடையாளமும் மலேசிய, சிங்கப்பூர் இலக்கியமும்-ஓர் எதிர்வினை
- கானல்காட்டில் இலக்கிய மான்கள்
- ஆக்கமேதை அலெக்ஸாண்டர் கிரஹாம் பெல் (1847-1922) கனடாவின் முதல் விமானப் பயணம் (பாகம்-4)
- துடிப்பு
- கீதாஞ்சலி (28) எங்கே உன் பாதை ? மூலம்: கவியோகி இரவீந்திரநாத் தாகூர்
- மாயமான்
- விடு என்னை
- மனசில் தேரோடுமா ? (உரைவீச்சு)
- இன்றும் என்
- பெருநரைக் கிழங்கள்
- வேண்டிய உலகம்
- விடையற்ற வியப்புக் குறிகள்!!!
- ஒரு வழியா இந்த மெட்டிஒலி.. தலை வலி …
- தலைவர்களும் புரட்சியாளர்களும் – 6 – மார்ட்டின் லூதர் கிங் – பாகம் 3
- புலம்பெயர் வாழ்வில் தமிழ்ப்பெண்கள் எதிர்நோக்கும் உளவியல் பிரச்சனைகள்
- கம்யூனிஸ்ட் கட்சிகளின் வெட்கக்கேடான வெற்றி
- வாடகைத்தாய்
- சூனியக்காரி ஜோன் ஆஃப் ஆர்க் (பெர்னாட்ஷா நாடகத்தின் தழுவல்)(நான்காம் காட்சி தொடர்ச்சி பாகம்-4)
- சனிட்டறி
- சிறகு
- திருவண்டம் – 5 (End)