This entry is in the series 20050623_Issue

இளைய அப்துல்லாஹ்


அறைகளுக்கு நடுவே
மூச்சடங்கி இருப்பது உயிரடி
கண்களுக்குத்தெரியாத
உணரடிவுகளினூடு இழைவது
சில முரண்களுக்குள்ளும்
சில சுவாத்தியங்களினூடும்
இணைத்து இணைத்து இன்னும்
இளைத்து விடாத ஒன்று
தானாக பிரிந்து விடத்துடிப்பதும்
வாழுகின்ற போது ஒரு துளி இன்பத்தையும்
பருகிவிட எத்தனிக்கும்.

கண்ணுக்கெட்டிய தூரம் வரை
கிராகதரடிகள் ஒரு கூட்டமாய்
உயிரடி பறிக்க அலைவதும் கனைப்பதும்

எந்த இடத்தில் ஜனித்ததோ
அதே இடத்தில் பறிப்புமாம்
உயிரடி பற்றி அம்மம்மமாவின் கூற்று இது.

சில காட்டிற்கு நடுவில் சில ஆகாயத்தில்
சில தற்கொலையால் சில பெரிய மனிதரால்
கத்தியால் துப்பாக்கியால் கோடரியால் நெருப்பால் சதியால் விரக்தியால் பொதுமென்றாகி தானாகி

ஆனாலும் வாழத்துடிக்கிறது கண நேரமெனினும்
உயிரடி..

இளைய அப்துல்லாஹ்

Series Navigation