திண்ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிக்கை

Current Issue: 20110529_Issue

தலைப்பு

This entry is in the series 20081016_Issue

கவிக்கண்ணன்


அன்னையின் சுகப்பிரசவத்தால்
இப்புனித தமிழ்மண்ணை
தொட்டுத்தவழ்ந்த என்னை
அவள்
ஆசையுடன் அள்ளித்தந்த
முத்தம்
என் வாழ்க்கை நாவலின்
முதல் தலைப்பு

தத்தித் தள்ளாடி
எழுந்து நின்றபோது
புத்திசொல்லும் தந்த
என் மொட்டு கரம்பிடித்து
நடை பழக்கையிலே
அவர் கட்டித்தந்த
முத்தம்
என் வாழ்க்கை நாவலின்
இரண்டாவது தலைப்பு

எட்டுவயதில் ஏட்டைச்சுமந்து
பாரதியின் பாப்பா பாட்டுப்பாடி
பள்ளியில் முதல்வனானபோது
ஒழுக்கம் சொல்லும் ஆசி¡¢யை
என் உச்சிமுகர்ந்து கொடுத்த
முத்தம்
என் வாழ்க்கை நாவலின்
மூன்றாவது தலைப்பு

பதினாறுவயதில் பருவமடைந்து
பருவத்தின் பயனாய்
காதலைச்சுமந்து
மனதினைக் கவர்ந்த என்னவள்
என் மார்பினில் பதித்த
முத்தம்
என் வாழ்க்கை நாவலின்
நான்காவது தலைப்பு

இருமணங்களும்
திருமணத்தில் இணைய
இருட்டினில் அவளுடன்
நான் பிணைய
நிரப்பப்படாத காகிதத்தில்
கிறுக்கப்பட்ட கவிதையைப்போல்
என்னவளின் மேனியில் பதித்த
என்னற்ற முத்தங்கள்
என் வாழ்க்கை நாவலின்
ஐந்தாவது தலைப்பு

என்
ஆண்மைக்கு முகவா¢யாய்
அவளின்
பெண்மைக்கு முதல்வா¢யாய்
முத்துப்போன்ற முதற்குழந்தை
முயன்று அவன் நடக்கையிலே
முத்தாய்ப்பாய் கொடுத்த
முத்தம்
என் வாழ்க்கை நாவலின்
ஆறாவது தலைப்பு

ஓ…
இதேபோன்ற முத்தத்தைதான்
என் தந்தை
எனக்கு அன்று தந்தாரோ
பு¡¢கிறது… பு¡¢கிறது…
சுழற்சி என்பதுதான்
உலகவாழ்க்கையின்
உன்னதமான தலைப்பு.

Series Navigation

About கவிக்கண்ணன்

கவிக்கண்ணன்

View all 1 articles →

தலைப்பு

This entry is in the series 20050623_Issue

பவளமணி பிரகாசம்


கதியென்ன தலைப்பே உன் தலையெழுத்து இன்று மாறியதோ
தனயன் பிடித்தலைந்த பிராயம் தாண்டி சற்றே விட்டிருந்தது
தாரம் வந்த பின்னே கைக்கு மீண்டும் கிடைத்த பற்றுக்கோல்
தலைப்புச் செய்திகள் அன்று முக்கிய சங்கதிகள் அல்லவோ
கண்ணைக் கவரும் கருத்துப் பதிவுகளாய் இருந்தனவே
நுனியை பல்லால் கடிக்கையில் நாணம் என்று கொள்ள
விரலைச் சுற்றி திருகுகையில் தயக்கம் என அறிய
லேசாய் உரசிச் சென்றால் அது உல்லாச சமிஞ்கை
பாய்மரமாய் காற்றில் பறந்து விரிந்தால் புயல் சின்னம்
வரிந்து முன்னிழுத்து இடுப்பில் செருகினால் அது
வந்து பார் களத்துக்கு நேருக்கு நேர் என்று சவால்
கணவனின் கை துடைக்க பிரியமான கைக்குட்டை
காணாமல் அது போனதால் நட்டமென்ன நாட்டிலே
சின்னச் சின்ன செய்திகள் சிக்காமல் வெறுமையே

Pavalamani Pragasam
Pavalamani_pragasam@yahoo.com

Series Navigation

About பவளமணி பிரகாசம்

பவளமணி பிரகாசம்

View all 124 articles →