திண்ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிக்கை

Current Issue: 20110529_Issue

மானுடம்

This entry is in the series 20040325_Issue

பா.தேவேந்திர பூபதி.


எத்தனைதான் இலையுதிர் காலம்
வந்து போனாலும்
வேருக்கு சலிப்பதில்லை
இலை விடுவதற்கும்
மலர் உற்பத்தி செய்வதற்கும்

யுகங்கள் பல உருண்டு
வடிவமற்றுப் போயினும்
மனித நேயம் உருப் பெறாமல்
கல் தோன்றி மண் தோன்றா
காலத்திலேயே
சயனித்தபடி
உயிர்ப்புகளற்று

எலும்பும் சதையும் சேர்ந்து தானா
உடம்பு
சிரிப்பு , அழுகை, கோபம், இரக்கம்
இவைகளுக்கெல்லாம்
உருக் கொடுப்பது யார் ?

எப்படியாயினும்
பெயர் மாற்றத்திற்கு
இப்பொழுது சாத்தியமில்லை போலும்

kousick2002@yahoo.com

Series Navigation

About பா .தேவேந்திர பூபதி

பா .தேவேந்திர பூபதி

View all 10 articles →

மானுடம்

This entry is in the series 20030223_Issue

பவளமணி பிரகாசம்


அன்றொரு நாள் வெடித்துச் சிதறிய
அக்னி பந்தொன்றின் அணுவிலே
உதித்த உலக உயிரினத்திலே
நீரும், நிலமும், ஆகாயமும்
நிறைந்து நிற்குது துடிப்புடன்.
மீனும், சங்கும் நீந்துது,
பாம்பும், பல்லியும் ஊருது,
பருந்தும், கிளியும் பறக்குது,
புலியும், சிங்கமும் பாயுது,
புவியில் மானிடம் சிறக்குது.

பரந்து கிடக்குது பிரபஞ்சம்,
பறந்து களிக்குது நெஞ்சம்.
கை வீசி நடக்க ககன வெளி,
கதை பேசி மகிழ நிலவின் ஒளி.

உயிரினங்களின் உச்சியிலே
அமர்ந்திட்ட மானிடத்துள்ளே
சுடாத சுகமான தீத்துளி,
அணையாதெரியும் சுடரொளி,
இருளை விரட்டும் அக ஒளி,
அகலில் அடங்கா பேரொளி,
பகையை பனியாய் எரிக்குது,
புவியில் மானுடம் சிரிக்குது.
இதயத்துடிப்பாய் அன்பின் ஒலி,
எங்கும் ஒலிக்குது எதிரொலி.

pavalamani_pragasam@yahoo.com

Series Navigation

About பவளமணி பிரகாசம்

பவளமணி பிரகாசம்

View all 124 articles →