மரமாக மனித வாழ்க்கை
யூசுப் ராவுத்தர் ரஜித்

காற்றிலும் கதிரிலும்
சோறு பொறுக்கும்
இலைகளாய்
நம் பொழுதுகள்
கிளைப்பதும் காய்ப்பதுமாய்
நம் குடும்ப உறவுகள்
மரத்துக்கும் அடங்காத
மண்ணுக்கும் அடங்காத
சல்லி வேர்களாய்
நம் ஆசைகள்
செத்த பிறகும்கூட
சாத்தானாய் வாழுமாம்
ஆசைகள்
ஆசைகளான
சல்லி விரல்களால்
குருடாகிப் போயின
ஆன்மீகம் தேடும்
ஆணிவேர்கள்
யூசுப் ராவுத்தர் ரஜித்