திரு மலர்மன்னன் அவர்களுக்கு

This entry is part [part not set] of 48 in the series 20110313_Issue

விருட்சம்


திரு மலர்மன்னன் அவர்களுக்கு

இன்றைய சுய சங்கல்பம் பின்னாளைய விதி என்ற உங்கள் கருத்தை ஏற்கிறேன். பல சமயங்களில் செயல்கள் மட்டும் அல்ல எண்ணங்கள் கூட பின்னாளில் எதிர்கொள்ளும் எதோ ஒரு சூழ்நிலையாக மாறி விடுவதைக் கூட அனுபவ பூர்வமாக உணர்ந்தும் இருக்கிறேன்.
ஆனாலும் எதிர்கொள்ளும் எல்லா நிகழ்வுகளுக்கும் இதே போல் ஒரு முடிவுக்கு வர முடிவதில்லை. புராணங்களில் முன்னாளில் அவரவர் அறிந்தோ அறியாமலோ செய்யும் செய்கைகளின் பலனாகவே பின்னாளைய சம்பவங்கள் சொல்லப்படுகிறது. பல சந்தர்ப்பங்களில் அது ஜன்மம் தாண்டி தொடரும் நிகழ்வாக வருகிறது. அப்போ அது விதியாகி விடுகிறது இல்லையா?
இங்கே கூறப்பட்ட கோவலனின் சுய சங்கல்பம் அவனது விதியாகி விட்டதை ஏற்கலாம். கண்ணகி? அவளின் துன்பங்களுக்கு அவளின் சுய சங்கல்பம் தான் என்ன ?

Series Navigation

விருட்சம்

விருட்சம்