This entry is in the series 20030802_Issue

மீ.வசந்த்,தாய்லாந்து


பென்சில் தொலைந்ததை
பிள்ளையாரிடம் சொன்னதும்,

வானொலி பெட்டிக்கு
சோறூட்டி விட்டதும்,

வண்ணத்துப் பூச்சிக்கு
ஐS வாங்கிக் கொடுத்ததும்,

தியேட்டரில் சினிமா
கண் பொத்திப் பார்த்ததும்,

நொங்கு சீவிய காயில்
காரோட்டி சுற்றியதும்,

பனை ஓலை கிழித்து
காற்றாடி செய்ததும்,

கிழிசல் தைக்கும் பாட்டி
நிலவுக்குள் இருந்ததும்,

அண்ணாந்து பார்த்து
விமானத்தை அளந்ததும்,

தட்டான் பிடித்து
காதோரம் பேசியதும்,

காகிதக் கப்பல்செய்து
மழைநீரில் விட்டதும்,

ஆற்றோர கற்களில்
‘அலிபாபா ‘குகை தேடியதும்,
அடிக்கடி சத்தமாய்
‘அண்டாக்கா..கசம் ‘ சொன்னதும்,

கொக்குகள் பார்த்தவுடன்
வேகமாய் விரல் உதறி…,
வெள்ளை போடக் கேட்டதும்!! ?,

கோழிக்குஞ்சு திருடிய
கருடப் பருந்துவிடம்…
காப்பாற்ற வேண்டியதும்,

வளர்ந்து பெரியவனாகி…
சமூகத்தை திருத்துவதாய்
சத்தியம் செய்ததும்,

…………………
………………..

இன்னொரு முறை வேண்டும்!! ?,

பிரியமுள்ள பூமியே..,
என்றைக்கு நீ
பின்னோக்கி சுற்றுவாய் ? ?!

மீ.வசந்த்,தாய்லாந்து

MSV001@MAERSKCREW.COM

Series Navigation