காத்திருப்பு

This entry is part [part not set] of 55 in the series 20041104_Issue

மதியழகன் சுப்பையா


—-

பிளாஸ்டிக் பூக்களால்
கவரப் பட்டிருக்கலாம்

கண்ணாடி சுரண்டி
புகைப் பட மலர்களை
முகரத் துடித்திருக்கலாம்

அரும்புகள் தேடித்தான்
வந்திருக்க வேண்டுமென்று
அவசியமில்லை

ஒழுங்கற்ற, ஒளியற்ற
வீட்டை வட்டமடித்திருக்கும்
வாசல் தெரியாமல்
தெரிந்தும் கூட

மின் விசிரியை
கழற்றி வைத்து
காத்திருக்கிறேன்

வெகு நாளாய்
வரவேயில்லை
வெண்ணைப் பூச்சி..

மதியழகன் சுப்பையா
மும்பை
—-

madhiyalagan@rediffmail.com

Series Navigation

மதியழகன் சுப்பையா

மதியழகன் சுப்பையா

காத்திருப்பு

This entry is part [part not set] of 61 in the series 20040805_Issue

நாகூர் ரூமி


====
கொட்டிக்கொண்டே இருந்தது
இரவு முழுவதும்
நல்ல மழை.

பூத்துகொண்டே இருந்தன
சாலையெங்கும் நீர்ப்பூக்கள்
துளி விழ விழ.

நனையும் குடைகளின் சந்தோஷம்
மனிதன் அறியாதது.

காலையில்தான் கவனித்தேன்
கவிழ்த்து வைத்த என் பானை
நிரம்பவேயில்லை என.

நிமிர்த்தி வைத்தேன்
நேராக அதை.

காத்துக்கொண்டிருக்கிறது பானை
வானம் பார்த்து
அடுத்த மழைக்காக.

நாகூர் ரூமி
—-

Series Navigation

நாகூர் ரூமி

நாகூர் ரூமி

காத்திருப்பு

This entry is part [part not set] of 54 in the series 20040527_Issue

நாவாந்துறைடானியல்ஜீவா


நிலம் வேறாய் போனபோதும் நித்திரைகூட சிவாவிற்கு நிம்மதியற்றே போய் விட்டது.வேதனையில் விழியிலிருந்து கண்ணீர் வடிந்து தலையணையை நனைத்தது.சிவா கொழும்பிலிருந்து கனடாவிற்கு

வந்து ஒரு வாரம்தான். இன்னும் பேஸ்மன் அறையின் வாசலைத்தவிர வெளியில் என்ன நிகழ்கிறது என்று கூட தொியாமல் வாழவேண்டிய சூழலை அவன் வாிந்து கட்டிக்கொண்டிருக்கிறான். எப்போதும் கட்டிலில் முகம் புதைத்து@ அழுதபடியே கிடப்பான். அவன் நீண்டநாட்களாய் கண்ட கனவெல்லாம் நனவாகுமென்று வந்தவனுக்கு இப்படியொரு சோகமான நிலை உருவாகிவிட்டது.

யாழ்ப்பாணத்திலுள்ள கல்லூாி ஒன்றில் படிக்கின்ற காலத்தில் தான் சிவா-சசி காதல் அரும்பியது.இருவரும் ஒருவரையொருவர் நன்றாக மதித்து நடந்தார்கள்.நன்றாக படித்துக்கொண்டிருந்த சிவா காதல் வலையில் விழுந்து படிப்பில் அக்கறை குறைந்து தொடர்ந்து படிக்க முடியாமல் தொழிக்கு போக ஆரம்பித்தான்.ஒரு நாள் அவசரமாக தன்னை சந்திக்கும்படி சசியின் சினேகிதியிடம் ஒரு கடிதம் அவனுக்கு கொடுத்து விட்டாள்.கடித்தில் குறிப்பிட்ட இடம் வழமையாக சந்திக்கிற இடம்தான் சன நெருசடியற்ற அந்த கிராமத்தின் குச்சொழுங்கை நேரம் எட்டரை மணி ஒரு நாளும் இப்படி எழுதாதவள்…தனக்குள்ளே அவன் கேள்வி கேட்டான். அவளை சந்திப்பதற்கு முதல் அவன் விடைகாணமுயன்றான்..

முடியாவில்லை. எப்படித்தான் இன்றைய மாலை மயங்குமோ…. ?

“சிவா….உன்னை ஒருநாள் கூட விட்டுப்பிாியாதவள் நான் ….உனக்கும் அது தொியும்…”

“என்ன….என்ன….சொல்லன்கெதியாய்….”

“கனடாவில் இருக்கிற சித்தி எண்ண கொழும்புக்கு வரச்சொல்லி கடிதம் போட்டிருக்கிறா..”

ஏக்கம் கலந்த பெருமூச்சு அவனில்….”என்னத்துக்கு … ?”

“கனடா எடுப்பதுக்குத்தான்.”

கணப்பொழுதில் பேசாமல் நின்றான்.கண்கள் கலங்கியது.அவனுக்கு மட்டுமல்ல அவளுக்கும்.

மெல்ல தனது கைகளை அகல விாித்தான்.அவளது தோளில் மீது பட்டது.ஒர் மெல்லிய அசைவு அவளில்….இரவு காதலுக்கு காணிக்கையானது.நிலா வெளிச்சம் குச்சொழுங்கையின் வேலியில் தெறித்து நிலத்தை நனைத்துக்கொண்டிருந்தது.சிவா தன்நெஞ்சோடு அணைத்துக்கொண்டான்.அந்தக்கணமே கிடுகு வேலிக்குள் இருந்து ஓரு சத்தம்….

“யாரட இருட்டுக்குள்ளே…. ?”

அந்த ஓலி வந்தவேகத்தில் அவர்கள் மறைந்து போனர்கள். அதன் பின்னர் அவனால் அவளை நோில் பார்க்கமுடியவில்லை. விடிய கொழும்புக்குச் சென்று கனடா வந்து விட்டாள். இங்கு வந்தவுடன் நிரந்தர வேலை யொன்று அவள் சித்தி எடுத்துக்கொடுத்தாள். படிப்படியாக அவளுடைய வாழ்கை நிலையை உயர்த்திக் கொண்டாள்.சிவா ஏதோ ஒருஇயக்கத்தில் தியாக உணர்வில் இணைந்து செயல் பட்டான். வாழ்வின் எல்லாச் சுகங்ககையும் இழந்து தேசத்தின் விடியலில்தான் கல்யாணம் என்பதே தனக்கு வேண்டும் என்று நினைத்தான். ஆயினும் அவன் தவிர்க்கமுடியாத காரணத்தால் அமைப்பிலிருந்து விலகிறான்.மீண்டும் சசியைப்பற்றிய எண்ணங்கள் அவனில் விாிய அவன் கொழும்புக்கு வந்தான்.அவளோடு தொடர்புகொண்டான். சசி பொன்ச பண்ண இங்கு வந்து விட்டான்.

சிவா இங்கு வரும் வரை அவனால் இப்படியான ஒரு வாழ்வை கற்பனை பண்ணிக் கூட பார்க்க முடியாவில்லை. அவனது பழக்கம் வழக்கம் அப்பாவித்தனம் எல்லாம் விகடம் தொியாத கடலோடி போல….அவளால் அவனை பச்சாத்தபமாக பார்க்க முடியவில்லை. தன்னுடைய வேலைக்கும் நாகாிக மாற்றத்திற்கும் பொருத்தமாில்ல உறவு போல் அவள் உணரத் தொடங்கினாள். அவள்தான் என்னதான் செய்ய முடியும் சினேகிதியின் கணவன் புதுக்காாில் நேற்றுக் கூட சித்திரவை கூட்டிக்; கொண்டு வீட்டிற்கு வந்திட்டு போனாள். இவற்றையெல்லாம் பார்க்கின்ற போது அவளுக்கு@ மூலைக்குள் முடங்கிக் கிடக்கும் சிவா தன்;னுடைய ஆசைகளையும் எண்ணங்களையும் நிறைவேற்றும் கணவனாக இருப்பாான என்ற அச்சம் அவளுக்குள் எழுந்துவிட்டதோ….

சிவா பார்வைக்கு அழகற்ற உடல் தோற்றமாயினும் உள்ளம் பால் போல் வெண்மையானது.வாழ்வு வறண்ட போதும் முகம் மட்டும் எப்போதும் புன்னகை பூத்திருக்கும் ஆடம்பர வாழ்வை அடியோடு வெறுப்பவன். அதிகமாக யாருடனும் கதைக்காதபோதும் அவனுக்கென்று பிடித்தமானவர்களோடு உயிரைக் கொடுக்குமளவுக்கு அன்பு கொள்வான்.வார்த்தைகளில் வர்ண ஜாலமில்லாத ஒரு யதாத்தவாதி சிறு வயதிலிருந்தே வறுமை எனும் சிலுவை சுமக்கிறவன்.சிவா இங்கு வந்தவுடன் தனியாக பேஸ்மன் எடுத்துக் கொடுத்தாள்.அவள் தன் சித்தியோடு இருந்தாள். சசி அடிக்கடி சிவாவை வந்து பார்த்துவிட்டுப் போவள். சந்திக்கும் போதெல்லாம் வார்த்தைகளால் வலுத்து சண்டையிலே முடிந்துவிடும் சசியின் வார்த்தைகள் ஒவ்வொன்றும் வேதனைப்படுத்திய போதும் அவைகளை அவன் பொிது படுத்தாது.தனக்குள் குறுகிக் கொள்வான். அவளுடைய முகம் எத்தனை கனவுகளாய் அவனில் எழுந்து ஒவ்வொரு கணமும் கொல்லும் அவளோடு பழகிய நாட்கள் பேசிக்கொண்ட விடயங்கள் எல்லாம் கானல் வாிகளா…. ?

அவன் குப்புறக் கட்டிலில் படுத்தான்.உடலில் ஒரு வித சோர்வு அவனுள் குடிகொண்டு விட்டது. ஆயினும் அவன் கண்களுக்கு தூக்கம் வரமறுத்துக்கொண்டிருந்தது.அவனுக்கு அழுகை அழுகையாக வந்தது.ஓவென்று கத்தவேனும் போல் அவன் மனம் சொல்லியும் அவனால் அழமுடியவில்லை. அழுகைச் சத்தம் கேட்டாலே மேலேயிருக்கின்ற தமிழ்ச்சனங்கள் வந்திருவார்கள் என்பதற்காக….

மூன்று வருட மாற்றம் காதலுக்கு முக்காடு போட்டு விட்டதோ… ? வருடநகாவில் சசியில் இவ்வளவு மாற்றம் வந்து விட்டதோ … ?

“தம்பி உங்களுக்கு போன்”மேலேயிருந்து வந்து வீட்டு உாிமையாளர் சொன்னார்.மேலே ஓடிப்போய் ரெலிபோனை எடுத்தான்.

“மறு முனையிலிருந்து ஹலோ….என்ன நெத்ரையோ….! இன்டைக்கு பின்னேரம் வேலை முடிய வருவேன் ஓக்கேய் பாய்….”தொலைபேசியின் மறுமுனை துண்டிக்கப்பட்டது.ஆசையோடு எதிர் பார்த்திருந்தவனுக்கு ஒரு ஜந்து நிமிடம் கூட ஆசையோடு பேசாதை நினைத்து தனக்குள் வெந்து சுருங்கினான்.ஆயினும் அவளின் வருகையை நினைத்து சந்தோஷப்பட்டன்.

இரவும் பகலும் மாறிய போதும் அவன் வாழ்வில் நெகிழ்சியற்ற இந்த இரண்டு கிழமையில் இன்றைய நாள் எல்லா வேதனைகளுக்கும் தகுந்த சன்மானம் வழங்குமென்ற நினைப்போடு அவன் காத்திருக்கிறான். எவ்வளவு நேரம் தங்குவாளோ அவ்வளவு நேரத்திற்குள்ளும் பேச வேண்டியவற்றை மனதில் இருத்தி வைத்தான்.

சொல்லியபடி தவறாது வந்துவிட்டாள். அவளைக் கண்டவுடன் அவனின் பார்வையின் வீச்சில் அவனில் வெறுமை விலகி புதுமை தோன்றியது. அஞ்சனம் அவள் கண்களுக்கு அழகற்றுக் கிடந்தது. வாசனைக் காற்று பேஸ்மன் முழுவதையும் அடைத்துக் கொண்டது.இதழில் கிடந்த உதட்டுச்சாயம் கடவாய்ப் பக்கமாக வழிந்து இருந்தது. அவன் சிதறிக் கிடந்த கடதாசித் துண்டுகளை வேகமாக புறக்கிக் காபேஜ் பாக்கில் போட்;டான்.தொங்க விடப்பட்ட கங்கரையும் ஒழுங்கு படுத்தினான்.

இருவருமே பேச முடியாத மெளனம்….சிவாவின் மனதில் தேக்கி வைதிருந்த சோகங்கள் கண்கள் வழிய கசிந்தது.கண்ணீரை துடைத்துக் கொண்டு சசியை பார்த்தான்.

“உன்னை என்னால் பூாிந்து கொள்ள முடியவில்லை. எதற்காக இப்படி நடந்து கொள்கிறாய் என்று விளங்கல….மணிப்புறா ஜோடி போல நம் காதல் மலர்ந்தது…வளர்ந்தது.இடையில் கனடா நம் இருவரையும் பிாிக்கின்ற பெரும் சுவராய்…. உன்னை என்னால் குற்றம் சொல்ல முடியவில்லை.மூன்று மாதத்திற்கு ஒரு தடவை கொழும்புக்கு வந்து காசு வங்குவதற்காக நீதான் உங்களுடைய குடும்பத்தை காக்கின்ற குல தெய்வமாக மாற்றி விட்ட உனதுபெற்றோர்….உன்னுடைய உலகமே வேலைதான் எண்டு நினைக்கும் மாயை….உனக்கு அருகில் நெருங்க முடியாத அளவுக்கு காசு செய்கின்ற மாயை….எல்லாத்தையும் நினைக்க ஆத்திரன்தான் வருகுது” என்று சொல்லிக் கொண்டு இருக்கும் போதே அவளுடைய முகம் கன்றிச் சிவந்தது.

“கலாச்சாரம் விளங்காத ஆளயிருக்கியே..இன்னும் பிச்சைக்காரத்தனமாய் கதைக்கிறயே” என்றாள்.

இல்லை சசி…. அந்நிய நாட்டில் எங்களுடைய கலாச்சாரத்தில் நாங்கள் வாழ்வதுதான் எங்களுக்கு பெருமை”என்று சிவா முனு முனுத்தான்.

சசி வெடுக்கன முகத்தை திருப்பிக் கொண்டு….

“உன்ர இயக்கக் கதைகள் எனக்கு வேண்டாம்…வீடு தூங்கி தெருத் தெருவாக திாிந்த உன்னை எடுத்து விட்டதுதான் என் தவறு” என்றாள்.

“இல்லையென்று சொல்லல்லை.. வீடு வீடாய் தூங்கியதும் தெருத் தெருவாக திாிந்ததும் என் வயிற்றை நிரப்புவதற்காக அல்ல.. ஒரு தேசத்தின் எல்லையை தொடுவதற்காக சுதந்திர காற்றை சுவாசிப்பதற்காக துன்பக் கேணியிலிருந்து மக்களை மீட்பதற்காகத்தான்.அது தவறாக உனக்குத் தொியலாம் என்னைப்பொறுத்த மட்டில் அது சாியாகத்தான் படுகுது உன்னளவில் அது பிழையாகத் தொிந்தால் அதற்காக நான் வருத்தப்படப் போவதில்லை.என்றேனும் ஒரு நாள் என்னை இழந்திட்டாய் என்று நினைத்து நினைத்து அழுவாய் என்ற நம்பிக்கை எனக்குன்டு” என்றான்.

அவள் மெளனமாய் நின்றாள்.எல்லாவற்றையும் விளங்கியும் விளங்காதவள் போல். கணப்பொழுதில் சிவாவின் முகத்தை கோபத்தோடு பார்த்தாள்.மூஞ்சி எட்டு முழத்தில் வீங்கியது. ஏதோ உள்ளத்தில் ஒரு வித உத்வேகம் எழுந்து உடல் நிலையில் ஒரு மாற்றத்தை அவளில் கொண்டு வந்தது.

“உனக்கு விசர் உன்னோடெல்லாம் கதைப்பதற்கு நேரமில்லை” என்று சொல்லிக் கொண்டு கோப்பி ரேபிலில் இருந்த லெதா பையை கையில் எடுத்து வலது பக்கமாக மாட்டிக்கொண்டாள்.தலையைக் குனிந்து சப்பாத்தை போட்டாள்.வெளியே போவதற்காக…

“சசி கொஞ்சம் பொறு…”

அவள் அசையாத சிலை போல் நின்றாள்.

“நான் நாளை மறுநாள் கொழும்புக்கு போறத்துக்குாிய ஏற்ப்படெல்லாம் செய்து விட்டன்.இப்போது ஒருமனிதனின்பெறுமதியைஉன்னால்உணரமுடியவில்லை.அந்தளவுக்கு உனது உள்ளத்தில் நான் என்ற இறுமாப்பு இருக்கிறது.உன்னுடைய உள்ளத்தில் உறைந்து கிடக்கிற அழுக்குகள் கழுவப்பட்டு ஒரு தூய மனதோடு என்னை உன் வாழ்கை துனையாக எப்போது ஏற்றுக் கொள்கின்ற பக்குவநிலை வருமோ அப்போது கடிதம் போடு…. இல்லையே கடல் கடந்து வா..அதுவரை உனக்காக காத்திருப்பேன்….”

அவள் பேசமல் பறையாமல் இடத்தை விட்;டு நகாந்தாள்.

அவன் முகத்தில் மந்தகாசம் தவழ்ந்தது.அமைதியான தூக்கத்திற்கு கட்டிலை நோக்கி போனான்.

(முற்றும்)

danieljeeva@rogers.com

Series Navigation

நாவாந்துறைடானியல்ஜீவா

நாவாந்துறைடானியல்ஜீவா