காகிதங்களாய் நாம்
எஸ். வைதேஹி.

எழுத்துக்கள் கனம்
தாங்கி
கோடுகள் அடங்கிய
வெள்ளைக் காகிதம்
பறைசாற்றியது உன்
முடிவை
தீர்மானமாய்.
உனக்காக எழுத
நினைத்து
காகித விளிம்பில்தான்
நிற்க முடிகிறது
என்னால்.
படிமம் கூடி
மனம் முழுக்க
வழிந்து கொண்டிருக்கிறது
என் எண்ணங்கள்
உன்னைப்பற்றி
மேசையினின்றும்.
ஆயினும் நண்ப,
வருத்தமாய் இருக்கிறது
காகிதத்தின் முன்னும் பின்னுமாய்
நாம் ஆகியிருப்பது.
***
svaidehi@hotmail.com