கர்ப்பனை உலா

This entry is part [part not set] of 50 in the series 20040408_Issue

கோமதி கிருஷ்ண்னன்


1-அம்மா;;அம்மா;;பாருங்கள் அழகு பட்டாம்பூச்சி பாருங்கள்;
ஆமாம் கண்ணே;;அழகு தான்,உன்னை விட ஒன்றும் அழகில்லை.
2-அம்மா;;அம்மா;;பாருங்கள்,பல நிற பூக்கள் பாருங்கள்
ஆமாம்,பூவும் அழகு தான்,உனக்கு நிகராகாதெதுவுமே.
3-அணிலும்,குரங்கும் துள்ளி விளையாடுதே
எனக்கும் ஆசை துள்ளி துள்ளி விளையாட,
என் கண்ணே நீயும் விளையாடுவாய் இன்னும் கொஞசம் வளர்ந்த பின்னே
4-கொண்டையில் அழகாய் பூ சூட எனக்கும் ஆசை கிளி போலே,
வித விதமாய் உனக்கு பூ சூட்டிடுவேன்,நீளமாய் உன் கூந்தலை வளர்த்தபின்னே.
5-பள்ளிக்கூடம் போக ஆசையாய் இருக்கம்மா;;
மேள தாளத்துடன் என் கண்ணே நீயும் பள்ளி செல்லும் நாள் வருமே.
6-எனக்கும் சைக்கிள் வாங்கி கொடுங்கள் ,நானும் வேகமாய் ஓட்டிடுவேன்,
சற்று நீயும் வளர்ந்த பின்னே,சைக்கிலென்ன ? காரே வாங்கி தந்திடுவோம்.

7-அம்மா என்னை இறக்கி விடு ,நானும் ஓடி ஆட வேண்டாமா ?
இன்னும் 8-மாதங்கள் போன பின்னே,நீயே தானாய் இறங்கிடுவாய்.
என் கண்ணே1 கனியமுதே! கற்க்கண்டே,அது வரையில் நீயும்,நானும்,
கற்பனையில் உலாவிடுவோம்.

**
viswanathan@rogers.com

Series Navigation

கோமதி கிருஷ்ண்னன்

கோமதி கிருஷ்ண்னன்