கண்ணாமூச்சி

This entry is part [part not set] of 39 in the series 20110123_Issue

ப.மதியழகன்


பள்ளியிலே கற்று வந்த
தமிழ்ப்பாடலை
வீட்டில் வந்து முணுமுணுக்கும்
சாக்லேட் கொடுத்து
கெஞ்சினால்
எபிசிடி சொல்லி அசத்தும்
மழலை பேச்சில்
தனது விருப்பங்களை
மாலைகளாக கோர்க்கும்
யாருக்கும் இடம்தராத
படுக்கையறை கட்டிலில்
பொம்மையை
கட்டிப்பிடித்து உறங்கும்
தூக்கத்தில் கண்ட கனவில்
ஆயிரம் வண்ணத்துப்பூச்சிகள்
சிறகு விரித்து பறக்கும்
வானத்தில் தென்படும்
ஏழு வர்ணங்களை ரசி்க்கும்
காற்றுடன் மழை வந்தால்
துள்ளி துள்ளி குதிக்கும்
வாசலிலே அம்மாவின்
குரல் கேட்டால்
எந்த விளையாட்டையும்
பாதியிலே நிறுத்திவிட்டு
ஓடிவந்து கட்டியணைக்கும்.

Series Navigation

ப.மதியழகன்

ப.மதியழகன்