ஒப்பனை நட்பு
எஸ். வைதேஹி.

கோடுகளைத் தாண்டி
விழுந்து கொண்டிருக்கிறது
பள்ளங்கள்.
இடைவெளிகளில்
நகர்ந்து கொண்டிருக்கிறது
பொழுதுகளும்
பூக்களும்
முகம் தொட்டு
விரல் தழுவிய
காலங்களும்.
நகக்கீறல்களின்
வளைவுகளில்
துளிர்த்து நின்றது
காயங்களின்
சாயல்களும்
நாக்குத்தொங்கிய
விகாரங்களும்.
கைபிடித்து
செல்லவே வேண்டியிருக்கிறது
நமக்கான ஒற்றைப்பாதையில்
நட்பாய்
நாள்தோறும்.
***
svaidehi@hotmail.com