ஆட்டோGraph

This entry is part [part not set] of 50 in the series 20040408_Issue

டைனோ


முன்குறிப்பு: இந்தா… கதயில வர்ற பாத்திரம், பண்டம், லொக்கேஷன், ஜலீம் லோசன் எல்லாமே நிசத்துல நடந்தது. சினிமாலயோ, டிவி பொட்டியிலயோ நீ பாத்த கஸ்மாலத்த போல சாயல் இருந்துதுன்னா அது உன்னோட டமிள் நாடு கவுர்ன்னுமெண்டு டாஸ் மார்க் முத்திரை குத்துன மனப்பிராந்தி விஸ்கி ரம்மு ஜின்னு. இத படிச்சி உன்க்கு மெண்டல் ஆனாலோ, மனசுக்குள்ள கோயி கூவுற வாய்ஸ் வந்தாலோ அதுக்கோசரம் நம்மகிட்ட ராங்குபண்ணி கோர்டிற்கு இஸ்க முடியாது! அதுமீறி கோர்ட்டு கேஸூன்னு நம்மாண்ட வந்தா பீச்சாங்கையால மூஞ்சியில கோடு இஸ்துடுவேன், …ஆமா.

பெந்திலூ நீ ஆரம்பீப்பா…!

வணக்கம்க என்பேரு பெந்தில். என் கல்யாணத்துல இதுக்கு முன்னால சந்திச்ச எல்லோரையும், குறிப்பா பொண்ணுகளை, கூப்பிடணும்னு ஆசை… அதுக்குத்தான் என்னோட சொந்த கிராமத்துக்கு போறேன்… நீங்களும் கூட வாங்க!

வெண்ணைக்காரன்பட்டி:

ஞாபகம் வருதே ஞாபகம் வருதே

மலபார் பீடிக்குள்ள மாரிஹுவனா அடிச்சது

மஞ்சுளா என் மூஞ்சிலா காறி துப்பியது

செயஸ்ரீ பிய்ந்த செருப்பாள விளாசுனது

‘டேய் பெந்தில் ‘

‘டேய் ராமு நீயா ? எப்பிடிடா இருக்க… பார்த்து பல வருசமாச்சுல்ல ? ‘

‘கேபிள் டிவி, திருட்டு வீசிடின்னு வாழ்கை அம்ம்ம்ம்ஷமா இருக்குடா. ஆமா நம்ம பாண்டிப் பயல கிணத்துல தள்ளியுட்டுட்டு ஊரவிட்டே ஓடிப்போனவந்தானே… இப்ப என்னடா இந்த பக்கம் ‘

‘…முதல் முதல் இறந்த சினேகிதன் மரணம்… ‘ (புல்லாங்குழல்…)

‘நம்ம சைட்ட டாவடிச்சா விடுவனா! அத விடுடா நம்ம ராஜேஷ், பிராபாகர், சுரேஷ், பாலா, கணேஷ், வசந்த், சுந்தர ராமசாமி வாத்தியார், மல்லிகா டாச்சர் எல்லாம் எப்படிடா இருக்காங்க ? ‘

‘(மனசுக்குள்) நீ ஊரவிட்டு போனதுக்கப்புறம்தாண்டா ஊருக்கே விடிவு பொறந்துச்சு. (சத்தமாக)எல்லாம் நல்லா இருக்காங்கடா! ‘

‘நல்லா இருக்காங்களா ? ஐய்யய்யோ நல்லா இருக்காங்களே! ‘

‘ஏண்டா அந்த வயித்தெறிச்சல் இன்னும் போகலையா ?… அமலாவக்கூட கடைவீதில பார்த்தேன்… மூணு கொழந்தகளோட செளக்கியமாயிருக்கா! ‘

‘ஐயோ! செளக்கியமா இருக்காளா…!! வாடா அவிங்க வீட்டுக்கும் போய் ஒரு பத்திரிக்க வச்சுட்டு வந்துடலாம் ‘

‘அமலா… யாரு வந்திருக்கா பாரு! ‘ ராமு

‘டேய் ராமு நீயா… அந்த கேபிள் டாவில விருமாண்டி போட்டியே… க்ளியராவே இல்ல… நானே சொல்லலாம்னு இருந்தேன், நல்லவேளை நீயே வந்துட்டே… சுவத்தோரமா ஏணியிருக்கு சரிபண்ணிகொடுத்துட்டு போ… இல்லன்னா அடுத்த மாசம் கேபிள் பணம் கொடுக்க மாட்டேன். அது யாரு பக்கத்துல பேந்த பேந்த திருட்டு முழி முழிச்சுகிட்டு… உம்மச்சினனா ? ‘

‘நாந்தான், பெந்தில் அமலா…

‘ஞாபகம் வருதே…. ஞாபகம் வருதே….! ‘…

நீ நாசமாப்போகம ரொம்ப நல்லா இருக்கியாமா ? நான் காதலிச்சு எனக்கு கெடக்காம போன பொண்ணுங்க நல்லா இருக்கமுடியாதே ? ‘

‘டேய் களவாளிப்பயலே என் தங்க குஞ்சத்த கத்தரிச்சுகிட்டு (பின்ணனியில்: …முதல்முதல் திருடிய கவரிங் குஞ்சம்…!) போனவந்தானே நீ ? முணு பசங்கள பெத்துகிட்டு கட்டு மஸ்த்தான புருஷனோட நான் நல்ல்ல்லா இருக்கேன்… நீ எப்பிட்றா இருக்க ? இதோ அவரே டிவிஎஸ் 50ல வந்துட்டாரு… ஏங்க அப்படியே போய் அண்ணாச்சி கடைல ஒரு டா வாங்கீட்டு வந்துருங்க… எம்பிரண்டு வந்திருக்கறான். ‘

‘இவனுகளுக்கு வேற வேளையே இல்ல… வாரத்துக்கொருத்தன் இந்த கழுதயப் பாக்கறேன்னு கொட்டிக்க வந்துடுவானுக ‘ முணுமுணுத்துகொண்டே கணவன் தூக்குச்சட்டியுடன் கடைக்கு போகிறார்.

‘டேய் பசங்களா இதுங்க ரெண்டு மேல ஒரு கண்ணு வச்சுருங்க… ஒரு மாதிரி கேஸுங்க… அம்மா போய் அடுப்புல அரிசி வக்கிறேன்! ‘

‘தம்பி… இங்க வாப்பா… உம்பேரு என்னா ? ‘ பெந்தில்

‘எம்பேரு பெந்தில்… எந்தம்பி பேரு பாண்டி… கடசி தம்பி பேரு… ‘

‘ராமு குட்டி… ஹிஹி… ‘ நமட்டு சிரிப்புடன் ராமு.

‘பையனோட சாயல் பார்க்கறப்பவே நினச்சேன்! சரிசரி எல்லோரையும் கட்டி டெம்போல ஏத்தி கல்யாணத்துக்கு சென்னைக்கு வந்துரு… ஓகேவா! ‘

‘டன் டா மச்சி… உங்கல்யாணத்துக்கு எல்லாரும் மெட்றாசுல இருப்பம்! சரி இந்த ஊரவிட்டு எங்கடா போனிங்க ? ‘

‘எங்கப்பா போஸ்ட் ஆபிஸுல வேளைக்கு இருக்தாருல்ல… அவருக்கு கேரளாவுக்கு டிரான்ஸ்பர் ஆயிடுச்சு… அங்க பலாப்புழாவுக்கு போயிருந்தோம் ‘

‘ஏண்டா போஸ்ட் ஆபிஸ் வேளைன்னா தமிழ்நாடு பாண்டிச்சேரி சர்க்கிள்குள்ளதானேடா மாத்துவாங்க… பலாபுழாவுக்கு எப்படிடா ? ‘

‘இந்த நக்கல் லாஜிக் கேள்வியெல்லாம் கேக்கக்கூடாது… நொட்டு சொல்லம வாயப்பொத்திகிட்டு கதயக்கேளு! ‘

‘சரி கோச்சுக்காதடா மாம்ஸ்… ஆர்வக்கோளறுல கேட்டுட்டேன். சரி, தமிழ் நாட்டுல ஆங்காங்கே தென்படும் வத்தல் தொத்தலுக்கே நாக்க தரையில தொங்கவுடுவே… கேரளால எல்லாம் திம்சுக்கட்டக… உன் லீலைகள அங்கயும் அவுத்துவுட்டுருப்பையே ? ‘

‘இங்கதாண்டா உனக்கும் எனக்கும் அண்டர்ஸ்டேண்டிங்கே… சும்மா பாலச்சந்தர் பட கதாநாயகிமாதிரி கும்முன்னு ஒரு குட்டி… வீணை, வயலின், சிதார், புல்லாங்குழல், பரதநாட்டியம், கதக்களி, மணிப்பூரி, ஒடிஸி, வாய்ப்பாட்டு, வில்லுப்பாட்டு, தம்புரா ன்னு கமலகாசன் மாதிரி அவ வாசிக்காத வாத்தியமில்ல, பாடாத பாட்டுமில்ல… சகலகலா வல்லவி என் பொத்திகா! கேரளாவுலயே யானைகளயெல்லாம் மேய்க்கிற தம்புரான் பரம்பறை! ‘

‘பூரானோ, பல்லியோ… எவங் கண்டான்! என்ன சாதிடா அவ… நம்ம அக்ரஹார அய்யர் பேமலி டைப்போ ? ‘

‘சாதிப்பேரக்கேட்டு தமிழ்நாட்டு மானத்த காப்பாத்தீட்ட டா… இவங்க கொஞ்சம் டிபரண்ட்டான பேமலிடா… பாட்டு பாடறப்போ மீராவா வைஷ்ணவங்களா ஆயிடரானுக, பரதநாட்டியம் ஆடும்போது நடராஜரை கும்பிடர சைவங்களா மாறிடரானுங்க… அறுவாள தூக்கி வெட்டறப்போ மட்டும் நம்ம… ‘

‘அங்கயும் லொள்ளு பண்ணி அறுவாளதூக்க வச்சுட்ட… அந்த மேட்டருக்கு வா முதல்ல ‘

‘டேய் எக்ஸ்ரா பிரசங்கி கதய முழுசா கேளுடா… பலாபுழாவுல வூட்ல இருந்து காலேஜ் போகணும்னா பல்லவன் மாதிரி அங்க பரிசல்தான். முத நாள்லயே பரிசல்ல போகும்போது பக்கத்து பரிசல்ல ஒரு ‘மல்லு கஞ்சிப்பய ‘ என்னப்பாத்து ‘டாக் ‘ன்னு திட்டாட்டான். அதுகூட பரவாயில்ல… ‘டமில் டாக் ‘ன்னு திட்டினவுடனே நாகர்சுனனுக்கு நெர்வ்ஸ் எல்லாம் புடைக்கறா மாதிரி எனக்கும் ஆகி, நான் தனியாள தண்ணீல டைவ் அடிச்சு அம்பது பேர் இருந்த அந்த பரிசலையே உலுக்கி கவுத்துட்டேன்டா! ‘

‘(முணுமுணுப்பு) பெரிய ஹீரோ… கிழிச்ச்ச்ச்ச! கேக்கறவன் கேணப்பயல இருந்தா கேரளால கெழங்கு மரத்துல காய்ச்சதூன்னு சொல்லுவே ‘

‘என்னடா ? ‘

‘(பவ்யமாக)இல்ல மேல சொல்லுன்னு சொன்னேன் ‘

‘அப்படியே பொத்திகா பின்னாலயே சுத்தி சுத்தி வந்து பிராக்கட் போட்டுட்டேன். அது மட்டுமில்ல நான் அவளுக்கு தமிழும் அவ எனக்கு வீணைய வாசிக்கறதுக்கும் சொல்லிகொடுத்துகிட்டம். (சிவாஜி குரலில்) அவ தமிழ கத்துகிட்டா… நான் அவள வாசிக்க கத்துகிட்டேம்பாஆஆஆஆ! அப்புறம் நான் ஆதாமாவும் அவ ஏவாளவும் பாவிச்சுகிட்டு மனசுக்குள்ள காதல் வந்ததை டூயட்டெல்லாம் பாடி 1970s ஸ்டைலுல கொண்டாடினோம் ‘

‘(மனசுக்குள் ஆதாம்-ஏவாள் காட்சியை கற்பனை செய்து…) கொடுமடா சாமி… (சத்தமாக)கவித… கவித… புல்லரிக்குதுடா… மேலப்போ ‘

‘அப்புறமென்ன அவங்க குடும்பத்துக்கு தெரிஞ்சு… ஒரு அம்பது பேரு சுத்தி அரிவாளோட எங்க வீட்டுக்கு அடிக்க வந்துட்டானுங்க. ‘

‘ஆமாம்டா சாமி கேரளாவுல சுத்தி அரிவாளுதான், சாக்கிரதயா அப்ரோச் பண்ணணும்டா ‘

‘ஹெஹெ… நம்ம யாரு… நானும் நான் சின்ன வயசுலயே கத்துகிட்ட டைக்-வான்-டூ, சிலம்பம், குங்ப்பூ, குஸ்தி, குத்து சண்ட, ஈட்டி எறிதல், அறுவா வீசுதல், பிச்சுவாகத்தி, மான் கொம்பு சண்ட, மல்யுத்தம், கதாயுதம், அம்பெறிதல், பீச்சாங்கையில பிளேட் வீசறது, டாவு, டகிலு, ஆஸிட் வீசறது, வீடு கட்டறது இப்படி எல்லாத்தையும் யூஸ் பண்ணி அவனுகளை பிண்ணி பிசஞ்சுட்டேன். ஆனா நம்பியார் கணக்கா ஒருத்தன் பின்மண்டையில கோழத்தனமா தாக்கி என்னையும் என்னப்பெத்தவங்களையும் அதே பரிசல்ல பார்சல் பண்ணி கோயமுத்தூருக்கு அனுப்பீட்டாங்க. ‘

‘(முணுமுணுப்பு)உங்கொய்யா… அடிவாங்கீட்டு வந்தத சொல்லறதுக்கு இந்த பில்ட்-அப்பா! (சத்தமாக) அடி வாங்கினாலும் புறமுதுகு காட்டாம நம்ம ஸ்டேட் மானத்த காப்பாத்தீட்டடா மாம்ஸ்! ‘

‘ ‘தமிழன்னு சொல்றா தல கவுக்காம பிரிஸ்டாஜோட நில்றான்னு ‘ நம்ம குசுவண்டிவாத்தியார் சொன்னத மறந்துடுவேனாடா! ஆன பரிசல்ல நாம் கிழக்க திருப்பயில மேற்குல அவ கல்யாணம் கட்டிகிட்டு ஆப்போசிட்ல போயிட்டாடா! அடுத்தது அவள பாக்கத்தான் பலாப்புழாவுக்கு போகணும். ‘

‘(மனசுக்குள்) எதுக்கு அவ குடும்பத்துலயும் குழப்பம் பண்றதுக்கா… (சத்தமாக)அமாம்டா உன்னை பாத்து அவ சும்மா ஷாக்காயிடுவா… சரி நீ கெளம்பு… கல்யாணத்துக்கு கண்டிப்பா வர்றோம்… நான் அப்படிக்கா அமலா கனெக்ஷன சரிபண்ணீட்டு வீடுபாத்து போறேன் ‘

‘ஙே… ‘

‘டேய்… கேபிள் கனெக்ஷன சொன்னேண்டா! ‘

பலாப்புழா

‘மனசுக்குள்ள லவ்சு வந்துச்சா…

மயில் மசிரில் நாத்தம் வந்துச்சா…

தமிள் பேசும் ஆச வந்துச்சா… ‘

‘ஏதும் வந்திட்டில்லா… அரைமணிக்கூராயிட்டு ஞான் கத்திக்கழிந்நு… எடோ கொடிச்ச பட்டி… பலாபுழா மட்டுமே வந்நு… வேறோன்னும் வந்திட்டில்லா… வேகம் எறங்கடா! ‘ போட் கண்டக்டர்

‘சாரி சாரே.. இப்போ எறங்காம் ‘ பெந்தில்

‘எந்த சாாாார்ரி, ப்ளவுஸ்சு… அது ‘சோரி ‘ ஆக்கும் மனசிலாயோ… நிங்கட தெமிழ்நாட்டு ஆட்காரெல்லாம் நாக்கு வழிக்குண்ண பழக்கமில்லலா, அதுகொண்டானு இங்கன… நொன பறையண்டா, அட்டொ… எறங்கடா வேகம்… சாாாார்ரி ஹெ… ஞான் சவுட்டின்னா முன்ப எறங்கிப்போய்க்கோடா… ‘

‘டே மாமே ஐயப்ஸ்… இங்க இருகேண்டா… எப்படிடா இருக்கே ? ‘

‘வாடா எமகாதகா… நீ நிசமாலுமே தைரியம் இருக்கறவந்தாண்டா… அத்தனை பேரு நொங்கு நொங்குன்னு பொடைச்சி எடுத்தும் இங்க திரும்பி வந்திருக்கையே… உன்ன பாராட்டணும்டா ‘

‘அறிஞர் வாழ்வில் இதெல்லாம் சகஜமப்பா! சரி பொத்திகா எப்படிடா இருக்கா ? ‘

‘டேய் வந்தது வராததுமா ஏண்டா மத்தவன் பொண்டாட்டிக்கு அலையறே… வா முதல்ல வீட்டுக்கு போயி சாப்பிட்டுட்டு போகலாம் ‘

‘இல்லடா முதல்ல என் பொத்திகாவா பாக்கணும் ‘

‘சரி திருந்தமாட்ட… வா போகலாம் ‘

‘டேய் இங்க நிறைய யானைகளையெல்லாம் கட்டியிருந்தாங்களே… எங்கடா அதெல்லாம். ‘

‘எல்லா உங்க ஊர்காரன் பண்ற லொல்லு… எல்லாம் ஆனமலைக்கு ரெஸ்ட் எடுக்க போயிருக்கு ‘

‘ஓஓஓஒ… அதுதன்னே ஞான் விசாரிச்சு ‘

‘டே… இந்தமாதிரி எடக்கு மடக்கா மலையாளம் பேசித்தானே போனவாட்டி அடிவாங்குன… அடங்கவே மாட்டாங்களாடா ?… மூடிகிட்டு தமிள்லையே பேசு… இங்க எல்லாத்துக்கும் தமிள் நல்லா தெரியும் ‘

‘டே ஐயப்ஸ்!!! அங்க வெள்ளை ஸாரி கட்டிகிட்டு, நெத்தியில பொட்டு வெக்காம கிடார் வாசிச்சுகிட்டு இருக்கறது பொத்திகாவா ? ‘

‘உன் நொள்ள கண்ணுல கொள்ளி வெக்க… வெள்ள புடவ மாத்திரம் கண்ணுக்குத் தெரியுமா, பச்ச ஜாக்கட் தெரியலையோ… இங்க அதுதான் ஸ்டேண்டர்ட் டிரஸ்… இப்பல்லாம் எந்த பொண்ணும் பொட்டு வெச்சுக்கிறதில்ல… ஃபேஷன்… அப்புறம் அது கிடார் இல்ல… புல்புல்தாரா ‘

‘ஃபுப்லோ ஆப்போ… அப்போ அவ புருஷன் செத்துப்போகலையா ? அவ நாசமாப்போகலையா… என்ன கல்யாணம் கட்டாதவ நல்லா இருப்பாளா ? ‘

‘உன் வாயில எக்ஸ்பையர்ட் பினாயில் ஊத்த… நாலு சொம்பு ஹார்பிக் ஊத்தி கழுவுடா… அவ புருஷன் கல்ஃப்புல (Gulf ?) பெரிய பிசினஸ் மேன். மாசத்துக்கு ரெண்டு நாள்தான் இவளே இங்க இருப்பா… மத்த நாள்ல பிசினஸ் க்ளப்புன்னு நாடுவிட்டு நாடு பறந்துகிட்டே இருப்பா ‘

‘ஆஆஆஆ…. ‘ முகம் மூடி அழுகின்றான்

‘(மனதுக்குள்) நல்லவேளை முகத்த மூடிகிட்டு அழறே… இல்ல உம்மூஞ்சியப்பாக்க இந்திரனோட ஆயிரம் கண்ணையும் கடன் வாங்கணும். (சத்தமாக) இதுக்குதான் இங்க வராதடா… வயித்தெரிச்சல் புடிச்ச உன்னால தாங்கிக்க முடியாதுன்னு சொன்னேன்… நீ எங்க கேட்ட… ‘வந்துச்சா வந்துச்சான்னு ‘ பாடிகிட்டே வந்து சேந்துட்ட… சரி சரி வா முதல்ல வந்த வேலையப் பாக்கலாம்… பத்திரிக்க வெச்சுட்டு இவ வீட்டுலயே ஒரு வெட்டு வெட்டாட்டு போகலாம் ‘

‘இல்லடா ஐயப்ஸ்… என் நெனப்புல மண்ணு விழுந்துருச்சு… நான் ஏதோ அவ விதவையா இருப்பா… அவகிட்ட எங்கல்யாணப்பத்திரிக்கய வெச்சு அவ அழுகறத மனசு நிரஞ்சு பாக்கலாம்ன்னு வந்தேன். நான் பெரிய விளம்பர கம்பெனியில… ‘

‘சரி விடுடா… ஒருவேளை வயிறு நிறைய கொட்டிக்கலாம்னு இருந்தேன் அதுலதான் மண்ணு… அதுக்கு எதுக்குடா இந்த அழுக அழறே… பத்திரிக்க வெக்க இஷ்டமில்லைன்னா வா திரும்பிப்போயிடலாம். மனசத்தேத்திக்கோ. ஆமா இங்க இருந்து அடி வாங்கீட்டு குற்றுயிராப் போனியே அந்த ஸ்டோரிய அப்படியே கொஞ்சம் சொல்லேன் ‘

‘கோயமுத்தூருக்கு போயி சேர்ந்தோம்… ‘

‘நோட்டு அடிச்சயா ? ‘

‘டேய் டச்சிங்கான சீன் சொல்லறப்போ குறுக்கால கண்டிநியுட்டியை டிஸ்டர்ப் பண்ணாதடா… அங்க அப்பிடி இப்பிடின்னு தண்ணியடிச்சுகிட்டு மப்பேத்திகிட்டு வானம்பாடி லைப்… ஆனா எங்க நைநா நைஸா ஆப்பு வெச்சு, வீட்ட விட்டு தொரத்தி அடிச்சிட்டாரு… நானும் என்ன பண்றதூன்னு தெரியாம சேரன் எக்ஸ்பிரஸ் திருட்டு ரயில் ஏறி சென்னைக்கு போயிட்டேன். அங்க தெருவுல எவனோ கிறுக்கி வெச்சிருந்த சாக்பீஸ் கரிக்கட்ட உருவத்துக்கு பக்கத்துல தூங்கீட்டேன். காலைல கொஞ்சம் லேட்டா எந்திருச்சு பாத்தா, என்னை சுத்தி கூட்டம், நிறைய காசு வேற… அத்தனையும் பொறுக்கிகிட்டு இருக்கறப்போ ஒரு அழகான குல்பி பிகர் என்ன ஓரம்கட்டி எனக்கு நிறைய அட்வைஸ் பண்ணினா. என்னப்போலவே தெருவுள திருஞ்சுகிட்டிருந்த இன்னும் மூணுபேரும் அவளுக்கு திக் பிரண்ட்ஸ் ஆயிட்டோம். ‘

‘இதுக்கப்புறம் நான் கத சொல்லறேன்… எல் ஐ சி மாடிக்கு பக்கத்துல ஏதோ ஒரு வீட்டு மாடியில கீத்து கொட்டகையில நீங்க நாலு தீவட்டி தடியனுகளும் அந்த குஜிலியும் தங்கறிங்க. மண்சோறு, நிலாச்சோறு, கூட்டாஞ்சோறு, செப்பு சாமான் சோறு, பாண்டி, கும்மி, கண்ணாம்மூச்சி, ஓடிபிடுச்சு விளையாடறது, ஸ்கிப்பிங், திருடன் போலிஸ், ஐஸ் நம்பர் ஒன் இப்படி எல்லா விளையாட்டும் அந்த மாடி வீட்டுலயே வெளையாடறீங்க. அந்த பொண்ணுகூட உங்களுக்கு என்ன உறவூன்னு கேக்கற ஒரு பக்கத்துவீட்டு தடியன நீங்க நாலு பேரும் போட்டு சாத்தரீங்க. இடையில அந்த பொண்ணு உங்களுக்கு ஒரு பாட்டுல சோத்துல முதல் முதல்லா உப்பு போட்டு உத்வேகத்தோட ஊட்டிவிடுறா (நடுவுல ‘ல ல லா… லா லா லா ‘ எல்லாம் போட்டுக்கணும்). அடுத்தது இன்னொரு பாட்டு (இதுக்கு நடுவுலயும் அதே ‘ல ல லா… லா லா லா ‘ ஆனா ஒரு பத்து வயலின் சேத்து பாடணும்), பாட்டு முடியறதுக்குள்ள அந்தப்பொண்ணு தமிழ்நாட்டு கவர்னர் ஆயிடறா… நீங்களெல்லாம் இன்பொஸிஸ், விப்ரோ, டிசிஎஸ், சத்யம் கம்யூட்டர்ஸ்க்கு முதலாளி ஆயிடறீங்க… சரியா ? ‘

‘ஆல்மோஸ்ட் சரிடா மச்சான். இதெல்லாம் எப்படிடா ஐயப்ஸ் உனக்கு தெரியுது ? ஆனா இதுல ஒரு பிரச்சனை… விக்கரமனும், சூப்பர் குட் செளத்திரியும் இந்த கதைக்கு காப்பிரைட் வாங்கிவெச்சுகிட்டதால நிஜ வாழ்க்கையில கூட இப்படி நடந்தா கேஸு போட்டுடுவோம்னு மிரட்டுனாங்க… சரின்னு எங்க லைப்ப சேஞ்ச் பண்ணிகிட்டோம். ‘

‘அடடே. ஆனா அவங்க சொல்லறதிலும் நியாயம் இருக்கத்தானே செய்யுது… அப்புறம் ? ‘

‘அப்புறம் என்ன… இப்போ கல்யாணம் கட்டிக்க போற புதுப்பொண்ணுக்கு ஏற்கனவே அஞ்சு பிரண்ட்ஸோட கூட்டுக்குடும்பமா ஒன்னா இருக்காங்க. அதனால செலவு, வாடக எல்லாம் கணக்கு பண்ணிபாத்து அதையே ஓகே பண்ணீட்டேன். ‘

‘உன் அல்ப புத்தி போகுதுபாரு. ஆனாலும் மாம்ஸ்… அந்த அழகான குஜிலிய நீ மிஸ் பண்ணமாட்டயே ? ‘

‘அத ஏன் கேக்குற… அவளுக்கு ஏற்கனவே லவ்செல்லாம் இருந்திருக்கு மாம்ஸ்… என்ன இருந்தாலும் செகண்ட் ஹெண்ட்டா போக நமக்கு மனசு ஒத்துவரல… அதனால சைடுல ஒதுங்கீட்டேன் ‘

‘ஆமாண்டா நாயே… நீ மட்டும் ா ஊருக்கு ஒருத்தி பின்னால சுத்துவே… ஆனா நீ கல்யாணம் கட்டிக்கிற பொண்ணு மட்டும் பச்ச வாழ மட்டையக் கொளுத்தணுமா ? முதல்ல உன்ன மாதிரி திரியறதுகளை கொளுத்தணும்டா சாமி! சரி மீதிய சொல்லித்தொலை… ‘

‘டென்ஷன் ஆகாதடா ஐயப்ஸ்… அப்புறமென்ன, ஒரு பெரிய விளம்பர கம்பெனியில… ‘

‘… சேர்ந்து அந்த கம்பெனிக்கே முதலாளி ஆயிட்டயா ? இல்ல முதலாளி பொண்ண டாவு அடிச்சயா ? ‘

‘ஹும்… இல்லடா, அந்த விளம்பர கம்பெனியில ஆட்டோக்கு பின்னால வாசகங்கள் எழுதற வேலை ‘

‘அப்போ ஆட்டோGraphனு சொல்லு ‘

dynobuoy(at)yahoo(dot)com

Series Navigation

டைனோ

டைனோ