திண்ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிக்கை

Current Issue: 20110529_Issue

Browsing Category

கவிதைகள்

கவிதைகள்

ரகசியங்கள்

சின்னப்பயல் எனது ரகசியங்கள் ஏதும் வெளித்தெரிந்து விடக்கூடாதென்ற பயம் எனக்குள் ...ஆதலால் என் பேச்சைக் குறைக்கிறேன் செயலில் அதை மற்றவர்கள் காண இயலாதவாறு மறைக்கிறேன் சிலரைத் தெரிந்தும் தெரியாதது போல் நடிக்கிறேன் நைச்சியமாக சிலரின்…

ச‌ருகுக‌ள்

ராம்ப்ரசாத் ஒரு முடிவற்ற பாதையில் சீராக பயணிக்கும் காலத்தின் வெவ்வேறு மைல்கற்க‌ளில் தொடங்கி விடுகிறது நிகழ்வுகளுக்கான காரணங்கள்... காலத்தின் பாதைக‌ளில் ப‌ய‌ணிக்கும் நிக‌ழ்வுக‌ள் என்றோ எப்போதோ ச‌ந்தித்துக்கொள்ள‌வே செய்கின்ற‌ன‌... அறியாம‌ல்... கான‌ல் நீரில் ம‌றைந்து…

சரியாய் உலகில் வாழ்ந்துவிடு

முனைவர் சி.சேதுராமன்முனைவர் சி.சேதுராமன், இணைப் பேராசிரியர், மா.மன்னர் கல்லூரி, புதுக்கோட்டை. E.Mail. sethumalar68 yahoo.com உன்னது என்னது நம்மது அவரது இவரது என்று எதுவுமில்லை! வந்தது போனது இருப்பது எதுவும் யாருக்கும் இங்கே சொந்தமில்லை!…

எதிர்ப்படும் கையகல நீர்மை…

இளங்கோ * வார்த்தைகளின் பிரதேசத்தில் கால் ஓய நடந்த பின்னும் சிக்கவில்லை ஓர் எழுத்தும் எதிர்ப்பட்ட வாக்கியக் குட்டையின் கையகல நீர்மைக்குள் நெடுநாளாய் எவர் வரவுமற்று குழப்பத்துடன் நீந்திக் கொண்டிருக்கிறது ஒரு மௌன மீன்…

சாட்சிகளேதுமற்ற மழை

எம்.ரிஷான் ஷெரீப்,இலங்கை கதவு யன்னல்களிலிருந்து வழிகின்றன முகங்கள் கொட்டப்படும் நீர்த்தாரைகளைப் போல கைகளில் கட்டப்பட்டிருக்கும் நுண்ணிய கயிறுகளை அவிழ்த்துக் கொண்டு பார்த்திருக்கும் அவற்றின் விழிகளில் நிழலாக அசைகின்றன பாதையோர மரங்களும் ஈரப் பறவைகளும் மழையும்…

’ரிஷி’யின் கவிதைகள்

ரிஷிகாலநிலைக்கட்டமைப்பு 1 சூரியக்கதிர்வீச்சு உம்மைச் சுற்றி அந்த ஒரு சொல்லைப் காற்றில் பரவச் செய் சிலந்திவலைப் பூச்சிகளாய் சிக்கும் பல. நாக்கை நீட்டிச் சுழற்றி வேண்டியதை உள்ளிழுத்துக்கொள். உன் அடியாழ இருளுக்குள் ஒளிபாய்ச்சித் துழாவும்…

இருட்டும் தேடலும்

குமரி எஸ். நீலகண்டன் இருண்ட நீர் பையிலிருந்து வளைந்து நெளிந்து வெளியே வந்து அழுத அவனுக்கு ஒளி உற்சாகம் கொடுத்தது. வெளியின் துகள்கள் அவன் வேர்களில் ஊருடுவ... கருப்பு,வெளுப்பு, அழுக்கு, மணம், மேல், கீழ்,…

கலில் கிப்ரான் கவிதைகள் (1883-1931)என்னை மயக்கியவள் கவிதை -37 பாகம் -2

மூலம் : ஓவியக்கவி கலில் கிப்ரான் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா "நேற்று நாம் உருவக வழிபாட்டுக்கு ஊதுபத்திகளைக் கொளுத்தி உயிர்களைக் கோபப்படும் தெய்வங்களுக்குப் பலியிட்டோம். ஆனால் இன்று நாமே நமக்கு ஊதிபத்தி…

உருத்தலில் உருவாகி

சுந்தராமனசுமுதிராத முன்னிருபதுகளில் மாலையோடு வந்த ஒரு மாபெரும் உறுத்தலுக்கு, மனசுக்குப் பிடிக்காமல் வாழ்க்கைப்பட்டவள் அவள்... காலைகளில் கட்டிய கனவுக்கோட்டை யெல்லாம் மாலையில் சிதையவைக்கும் மந்திரசக்திக்குக் கட்டுப்பட்டு, ஆலையில் அகப்பட்ட கரும்பாகக் கசங்கியவள்... நின்றால் ஒருகுற்றம்…

வசீகரத்தினை இழந்துவிடும் பூக்கள்

ராம்ப்ரசாத் அரும்புகையிலேயே வசீகரத்தினை இழந்துவிடும் பூக்கள் வாசங்களின் சமத்துவங்களை புறந்தள்ளி விடுகின்றன... வாசங்களின் சமத்துவங்களை ஏற்கமுடியாதென வாதம் செய்கின்றன... வாசங்களுக்கப்பால் மொழியை பிரதானமாக்க முயல்கின்றன... வாசங்களைத் தேடி அலையும் சுரும்புகளுக்கு மொழி தேவையற்றதாகிவிடுகிறது... வாசங்களின்…