திண்ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிக்கை

Current Issue: 20110529_Issue

Browsing Category

கவிதைகள்

கவிதைகள்

வெவ்வேறு

ஹெச்.ஜி.ரசூல் அணில்களும் சிட்டுக்குருவிகளும் அடிக்கடி வந்துபோகும் ஜன்னல் கொஞ்சகாலமாய் மூடியேகிடந்தது மீண்டும் திறந்தபோது அணில்களும் சிட்டுக்குருவிகளும் வெளியேபோவது தெரிந்தது வெவ்வேறு ஜன்னல்வழி கடலோரம் நின்று கடலை தன் அலகால் கொத்திக் கொண்டிருந்தது வலியச் சென்று…

புறப்படு

கவிஞர் புகாரி புறப்படும்போது நதிகள் யாவும் திசை தெரியாமலேயே புறப்படுகின்றன எங்கே நகர்கிறோம் என்ற இலக்கறியாமலேயே நகர்கின்றன ஆயினும் அவையனைத்தும் மிகச் சரியாகக் கடலையே சேர்கின்றன o முடிவு பற்றிய பயத்தில் பயணம் துறப்பது…

விரல் சூப்பும் சிறுவனும் வறுத்த கச்சானும்

றகுமான் ஏ. ஜெமில் மூக்கும் ஓடி விரலும் சூப்பியபடியாக படுக்கையிலும் மூத்திரம் அடித்து சோறும் பிசைந்து தீத்தச்சொல்லி அடம்பிடித்து அம்மாவின் சேலைத்தலைப்பில் தொங்கி சிணுங்கி செல்லம் காட்டும்படியான பராயம் நட்சத்திரங்களும் சடைத்து பூத்து நிலாவும்…

கீதாஞ்சலி (74) ஆத்மாவின் கருவில் உறைபவன்.

தமிழாக்கம்: சி. ஜெயபாரதன், கனடா அது அவனேதான்! ஆத்மாவின் உட்கருவுக் குள்ளே உறைபவன்! கரத்தால் என்னை ஆழத்தில் தொட்டெழுப்பி விழிக்க வைப்பவன், அனுதினமும். அது அவனேதான்! எந்தன் இரண்டு விழிகளுக்கும் மந்திர சக்தி யூட்டுபவன்!…

கயிறெடுத்தான் உயிரெடுக்க

கவிஞர் புகாரி உயிரின் முடிச்சவிழ்க்க கயிற்றில் முடிச்சிட்டான் சாவைத் தேர்வு செய்ய வாழ்வே விரட்டுகிறது தேர்வுதானே வாழ்க்கை சாவென்பதும் வாழ்வென்ற அறிதலோடுதான் கயிறெடுத்தான் உயிரெடுக்க இவனைத் தடுக்கும் மார்க்கமுண்டா உங்களிடம் பாவச் செயல் கோழையின்…

நெருப்பு நெருப்பு

டீன்கபூர் இன்னும் சாம்பலாகவில்லை. என் குழந்தைகள் அப்பம் சுட்டு விளையாட. ஆயிரம் வீடுகள் எரிந்தபோதும் சூரியன் அழுதான் மிஞ்சியதாக. என் தலையில் உமிழ்ந்த நெருப்புத் தணல். என் கிராமத்தின் மூலையில் பழுத்த ஒரு ஓலையையும்…

பெரியபுராணம் – 89 – திருஞானசம்பந்த நாயனார் புராணம் தொடர்ச்சி

பா.சத்தியமோகன் 2486. அரிய வேதங்களும் அவற்றின் வழிவந்தவைகளும் அகன்ற பெரிய வானில் ஆரவாரித்து பெருமையுடன் முழங்க ஐந்து துந்துபிகள் எனும்தேவ வாத்தியங்கள் முழங்க செழுமையான அந்நகரம் விழா எடுக்க பெருந்தகையினரான அவ்விரு பெரியோர்களும் எதிர்…

யாருமற்ற கடற்கரை

ஹெச்.ஜி.ரசூல் நீயும் நானும் கட்டிவிளையாடிய மணல்வீடு கலைத்துப் போட்ட அலைகளுக்கு மனசில்லை * திடீரென பேரலை ஒன்று அதிர்ச்சியூட்டி உன்னை இடுப்பளவு நனைத்துச் சென்றபோது கடற்கரையே குலுங்கும்படி வாய் விட்டு சிரித்தாய் நானோ நனைந்தவாறு…

புன்னகையின் பயணம்…

த.அகிலன் சூரியன் தன் ரகசியங்களோடு நுழைகின்றான் எங்கும் விசாரணைகள் ஏதுமின்றி எங்கும் நிரம்பிவழிகிறது சூரியனின் ரகசியங்கள் காற்றுக்குக் கேள்விகளுமில்லை வேலிகளுமில்லை…. என்னுடையதும் உன்னுடையதும் கனவுகளுக்கும் கூட ரகசியம் கிடையா எனது முற்றத்தில் விழுகிறது பச்சை…

ராம், ராம் என்னும் போதினிலே!

சி. ஜெயபாரதன், கனடா மோட்ச புரி கதவை மூடியது! நரபலிச் சவங்கள் எரியும் நரகத்தின் வாய் பிளந்தது! கீதையின் நாதம் ஒலிக்க வில்லை! வேதனையில் வெந்த பேதையர் குரல் கேட்கிறது! மதம் பிடித்தோடும் யானைகள்…