திண்ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிக்கை

Current Issue: 20110529_Issue

Browsing Category

கவிதைகள்

கவிதைகள்

வழக்கமான நாட்களும்…வந்துபோகும் கவிதைகளும்

மீ.வசந்த் ____________________________________________ சுட்டெரிக்கும் சூரியனாய் கருத்தரிக்கும் கவிதைகள், குளிர் நிலவும் நிலவுகளாய் பிரசவிக்கப் படுகின்றன. ஆனிவேர் அறுக்க அவதாரம் எடுத்தவர்கள், அடிமர நிழழோரம்... படுத்துத் தூங்கவே, பழக்கப் படுகிறார்கள். எலும்பு துருத்தும் சதையில்லா உடல்கள்,…

பக்தன்

பாஷா கடவுள்கள் என்னை தேர்ந்தெடுக்கவில்லை எப்பொழுதும் நானே அவர்களை தேர்வு செய்கிறேன் திரும்ப திரும்ப கிழித்து கிழித்து அழித்து அழித்து அந்த படைப்பாளனை நானே படைக்கிறேன்! என் தட்டு உணவில் ஒரு பகுதி தரப்பட்டிருக்கும்.…

அன்புடன் இயல்கவிதைப் போட்டி முடிவு – பரிசுக்குரிய கவிதைகள்

ஜாபர் அலி, தண்டபாணி பொன்னுரங்கம்,சோ. சுப்புராஜ், கார்த்திக் பிரபுஅன்புடன் இயல்கவிதைப் போட்டி முடிவு - பரிசுக்குரிய கவிதைகள் அன்புடன் யுனித்தமிழ்க் குழுமம் நடத்திய இயல்கவிதைப் போட்டியில் நடுவர் "திசைகள்" மாலன் தெரிவு செய்த பரிசுக்குரிய…

காதல் நாற்பது (21) மீண்டும் மீண்டும் சொல் நேசிப்பதாய் !

தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா என்னை நேசிப்பதாய் மீண்டும் சொல் இன்னு மொருதரம் சொல், கூக்கூப் பறவைபோல் கூக்கூக் கீதத்தில் திரும்பத் திரும்பக் கேட்கட்டும் செவியில், நினைவில் வை, நீ கொள்ளும் காதல்…

நிறச் சுவாசங்கள்

சாமிசுரேஸ், சுவிஸ் ஒவ்வொரு பரிணாமங்களும் வௌ;வேறு பரிமானங்களாய் சிதைவுற வாழ்க்கை நிறக்குழைவினுள் மூழ்கிக்கிடக்கிறது. அந்தக் கருப்பொருளின் வளர்வில் மனிதநிறங்களின் ஒவ்வொரு பிரிகைகளும் வௌ;வேறு ஸ்வரங்களில் கனவுறும். கனவுறும் பொழுதில் காற்றிடை முகிழ்ப்பினூடே ஒரு அரங்காற்றுகை…

கவிதைகள்

உஷாதீபன் பிணக்கு உனக்கும் எனக்குமான உறவுச்சிக்கல்களுக்கிடையில் தார்மீக முனைப்புகளாய் பின்னிக் கிடக்கின்றன ஏராளமான வார்த்தைகள் வறண்டுபோன நம் வாழ்க்கைக்கு சாட்சிகளாய் நிற்கின்றன அதன் வீர்யம் நீயும் நானும் கூடிக்களித்தபோது கும்மாளமிட்ட மெப்பனைகள் காணாமல்போயின மாயமாய்…

மனிதன்

செய்டில்ஹாமோ மோட்சாபிஏறத்தாழ மறந்துவிட்ட நண்பன் நகரத்திற்கு சமீபத்தில் வந்திருந்தான் அவன் உள்ளே வரும்போது மழை ஆரம்பித்தது என்பதை கவனித்தேன் எளிய மனிதனாக அவனை அறிந்திருந்தேன் வளரும்போது நாங்கள் எல்லோரும் டாக்டர்களாக, எஞ்ஜினீயர்களாக ஆசிரியர்களாக ஆக…

பூத்துக் குலுங்கும் பாப்பா! ( சிறுவர் பாடல்)

முனைவர் மு.இளங்கோவன்,புதுச்சேரி பூத்துக் குலுங்கும் மலர்க்கொத்துப் பொழிலின் நடுவில் கிடப்பதுபோல் பார்த்துச் சிரித்துக் கிடக்கின்ற பவள மல்லி! ஏனழுதாய்? கோத்த முத்துச் சரம்நழுவிக் குலைந்து தரையில் உருள்வதுபோல் தாத்தா தாத்தா என்றழுதே தாவித் தாவிச்…

காதல் நாற்பது (20) உன்னைத் தெரியாது ஓராண்டுக்கு முன்பு

தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடாநினைத்துப் பார்க்கும் போது நேசனே! என்னரும் நேசனே! ஓராண்டுக்கு முன் நான் பனித் தளத்தில் தனித்திருந்த போது நீ இத்தரணி மீது இருந்தாய், ஆயினும் எத்தடமும் காணேன்! அமைதி…

கவிதை

மு.பழநிக்குமார்இரவு எட்டைத் தாண்டிய பரபரப்பில் கால்கள் முளைத்த அவசரமாய் அதுவும் கொலுசுகள் அணிந்த அவசரமாய் அலுவலகம் விட்டு விரைவாய் படிகளில் இறங்கி சாலை கடந்து சந்து திரும்பி பேருந்து நிலையம் அடைவாய் பூப்போன்ற உன்னை…