நிலவும் அந்த நினைவும் மட்டும்..

This entry is part of 39 in the series 20110123_Issue

ரவிசந்திரன்


அம்மா காட்டி ஊட்டிய சோறும் இல்லை,

கிண்ணமும் இல்லை அம்மாவும் இல்லை

கதையும் இல்லை , சொன்ன பாட்டியும் இல்லை

சிரித்து மகிழ்ந்த சிறுவர்களும் இல்லை

உள்ளங்கை சோறுமில்லை

மருதாணி இல்லை, இட்ட மாமியும் இல்லை

கோயிலில் ஒடி ஒளிந்த நண்பர்களும் இல்லை

கோயில் மண்டபத்தில் கேட்ட பாகவதமும் இல்லை

காவேரி கரையும் இல்லை , கலந்து உண்ட சித்ரான்னமும் இல்லை

சிரித்து மகிழ்ந்த சுற்றமும் இல்லை

கண் சிமிட்டி காதல் சொன்ன கன்னியர்களும் இல்லை

கங்கணம் (ராக்கி) கட்டிய தங்கைகளும் இல்லை

கால் நனைத்த குளமும் இல்லை, கவிதை சொன்ன நண்பனும் இல்லை

காதலுடன் கட்டியணைத்த அந்த தேன்மொழியும் இல்லை ,

குருபூஜை செய்த பிடமும் இல்லை, பிடாதிபதியும் இல்லை

சிரான சிந்தனயும் இல்லை, சிறப்பான தனிமையும் இல்லை

சாட்சியான அந்த நிலாவும் சில நேரத்தில் உண்டு , சில நேரம் இல்லை

ஆனால் அந்த நினைவும் மட்டும்

நிரந்தரமாக என்னுடன் உண்டு.

நன்றி

ரவிசந்திரன்

ravichands@gmail.com

Series Navigation