நட்ட நடு இரவு!

This entry is part of 39 in the series 20110123_Issue

ரசிகன்தெரு நாய்களின்
குரைச்சலுக்கு
நடுக்கம் காணும் ஜன்னல் கதவுகள்!

வியர்த்தலுக்கு
ஈடுகொடுக்க முடியாத
மின் விசிறி மலட்டுத் தன்மையில்…

உச்சி நுகர்ந்திருக்கும் போர்வை
சடாரென விலக்க…
பேயாட்டம் போடும்
பதின்வயது உணர்வுகளின்
மொத்த உணர்ச்சிகள்!

மற்றபடி.,
பழுப்பு நிற
ஜீரோ வாட் குண்டு பல்பும்
லேப் டாப்பில் ஒலிக்கும் பழைய பாடலும்
எழுந்து உட்கார வைத்து விடும்!

இப்படியான
நட்ட நடு இரவுகளின்
தாகங்கள்…

தலைமாட்டிலிருக்கும்
ஒரு டம்ளர் தண்ணீரில்
தணியப்போவதில்லை!

Series Navigation