தொலைந்த நான் …

This entry is part of 39 in the series 20110123_Issue

ஷம்மி முத்துவேல்தொலைத்த என்னைத் தேடிட
அவகாசம் கிட்டவேயில்லை
தொடர்ந்தும் பறக்கிறது காலச் சிறகு

சிற்சில சொல்லாடல்களில்
காணாமல் போன எனதான சாயல்கள்
ஏந்தி நிற்கும் எதுவுமே
என் போன்றே தெரிந்திட
அருகில் சென்று ஆராயத் தோன்றும்படி
மனம் ஆர்பாட்டக் ௯ச்சலிடும்

சீ … நானல்ல இது என உடன் சலிக்கும்
வருடங்கள் கடக்கின்றன
தாத்பரியம் என்னவென்று புரியாமல்
வாழ்வியல் கற்றுத் தரா பாடங்கள்

உள்ளுக்குள் தேடல் தீண்ட
தோன்றி விழத் துவங்கினசுயம்
கண்ணாடிக் ௯ண்டுக்குள்
கற்களாகி……

Series Navigation